மற்றுமொரு இரவு உறக்கத்தை வரவழைக்க முஸ்தீபுகளில் ஈடுபட வேண்டியுள்ளது மது புட்டிகளின் சியர்ஸ் சத்தங்களைத் தவிர இரவு அமைதியாக இருந்தது அன்று பகலில் சந்தித்தவர்களில் சில நபர்களின் முகங்களே ஞாபகத்தில் இருந்தது படுக்கையை பகிர்ந்து கொள்ள பணத்தை நீட்ட வேண்டியுள்ளது எதையாவது செய்து தன்னிலை மறக்க வேண்டும் தன்னைப் பற்றிய சிந்தனை தற்கொலைக்கு தூண்டுகிறது அவமானங்களும், உதாசீனப்படுத்தல்களும் குறுவாளால் வயிற்றைக் கிழிக்கிறது மரண சர்ப்பம் வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது மது அருவியில் என்னை நனைய […]
அதிகாலையிலேயே மழை ஆரம்பித்துவிட்டது காலையில் செய்வதற்கு ஒன்றுமில்லை சாப்பிடுவதைத் தவிர விடுவிடுவென ஓடிப்போய் கதவைத் திறந்தேன் நினைத்தது போல் நடந்துவிட்டது நாளிதழ் மழைநீரில் தொப்பலாக நனைந்துவிட்டது புத்தக அலமாரியைத் திறந்தால் சுவரெல்லாம் ஓதம்காத்துப் போய் புத்தகத்தின் அட்டை நமுத்துப் போயிருந்தது கதவெல்லாம் அடைத்துவிட்டேன் நொடிமுள் நகரும் சப்தம் மட்டும் கேட்டது நத்தை போல் நகர்ந்து கொண்டிருந்தேன் மரணத்தை நோக்கி காத்திருத்தலே ஒரு தவமல்லவா மாத்திரை மருந்துகள் எத்தனை நாள் கட்டுப்படுத்தும் சித்ரவதையாகத் தான் இருக்கிறது மருத்துவரைக் கேட்டால் […]
இரைச்சலில்லை வருடிச் செல்லும் காற்று மண்ணைத் தின்னும் புழுவாக காலநதியில் கால் நனைத்துக் கொண்டிருந்தது மனம் நேற்றைக்கும் இன்றைக்கும் வித்தியாசம் இருப்பதால் தான் வாழ முடிகிறது இரைக்கு ஆசைப்பட்ட மீன் உலையில் கொதிப்பது போல இன்பத்துக்கு ஏங்கும் உள்ளத்தால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கிறோம் கண்ணைப் பார்த்து பேச முடியவில்லை இப்போது உள்ளேயும் சாக்கடை வெளியேயும் சாக்கடை பெண்ணின் நினைப்பு லேசில் விடாது போலிருக்கு பீஷ்மரைப் போல் வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது நேற்று வந்தான் […]
எதேச்சையாக எதிர்ப்பட்டவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன் எங்கெனத் தெரியவில்லை அவரும் கடந்து சென்றுவிட்டார் இனி ஞாபகம் வந்தும் பயனில்லை காற்று அதன் போக்கில் போகிறது மனதை அதைப் போல் கட்டவிழ்த்து விடமுடியுமா இந்த மழை வேறு நேரங்கெட்ட நேரத்திற்கு வந்து தொலைக்கிறது குடையை எங்கே வைத்தேனென்று தெரியவில்லை புத்தகங்களைப் படித்து கண்களை களைப்படையச் செய்தாலும் தூக்கம் வந்தபாடில்லை தினமும் சூரிய நமஸ்காரம் செய்கிறேன் என் உடலை எரிக்கப்போகும் நெருப்பு அவனிடமிருந்து தானே தோன்றியது என்பதாலா.
வெயில் சற்றே தணியத் தொடங்கியிருந்தது. வானம் மேகக் கூட்டங்கள் இல்லாமல் நீலவண்ணமாக இருந்தது. பள்ளிக் குழந்தைகள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தேநீர் கடையில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியிருந்தது.கலையரசன் பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவாரூர் செல்லும் பேருந்து வந்தது.அவ்வளவு கூட்டம் இல்லை.கலையரசன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். அவன் இப்போது மடாலயத்திற்கு சென்று கொண்டிருக்கிறான். வாழ்க்கையில் அவன் எதிர்கொண்ட அனைத்திலுமே தோல்வியடைந்திருக்கிறான். காதல்,கல்வி,வேலை என அனைத்தும் அவனுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தன. ஊருவிட்டு ஊரு வந்து […]
எப்படிச் சொல்வது இழிவான காரியத்திற்குச் சாட்சியாக நான் இருந்துவிட்டேனென்று கோழைத்தனத்தால் கைகட்டி நின்றுவிட்டேனென்று அச்சத்தால் உடல் வெலவெலத்து வேர்த்துவிட்டதென்று அடிமை போல் காலணிகளை துடைத்தேனென்று மனசாட்சிக்கு விரோதமாய் நடந்து கொண்டேனென்று பணம் என் கண்களை மறைத்துவிட்டதென்று அபலையின் கதறலை கேட்டதாக காட்டிக்கொள்ளாமல் நடித்துவிட்டேனென்று எச்ச சோற்றை அருவருப்பில்லாமல் தின்ன ஆசைப்பட்டேனென்று நடந்த விபரீதத்தில் எனக்கும் பங்கிருக்கிறதென்று.
கனவுகளே காயம்பட்ட நெஞ்சத்தை வருடிக் கொடுக்கும் மயிற் பீலிகளே வேஷத்துக்கு சில நாழிகை நேரம் விடுதலை கொடுக்க வைக்கும் வடிகால்களே செலவின்றி தேவலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் இன்பத் தேன் ஊற்றுகளே இறக்கையின்றி பறக்க கற்றுக் கொடுக்கும் உனது மாயாஜால தந்திரங்களே உறக்கத்திற்கு இனிமை சேர்க்கும் கடவுளின் கொடைகளே கனவுலகச் சாவியை தொலைத்தலையும் பகல் பொழுதே உள்மன ஏக்கங்களுக்கு தீனிபோடும் தேவதையின் பரிசுப் பொருட்களே.
எப்படியாவது தன் மகன் இஞ்சினியரிங் பட்டம் வாங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார் சுப்பையன்.ஆனால் அவரது மகன் சுந்தரோ வேறு மார்க்கத்தை பின்பற்றப்போவதை மனதில் வைத்துக் கொண்டு படிப்பை தொடர மாட்டேன் என பிடிவாதமாக இருந்தான்.+2 முடித்துவிட்டு பையனை வீட்டில் வைச்சிருந்தா ஏன், எதற்கு, என்னண்ணு கேள்வி கேட்டு சொந்த பந்தங்கள் குடையுமே என வேதனைப்பட்டாள் சுந்தரின் அம்மா காமாட்சி. காதைக் கிழிக்கும் ஹாரன்.இயந்திரத்தனமான மனிதர்கள்.விண்ணை முட்டும் கட்டிடங்கள்.எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள்.இரவைக் கொண்டாடும் இளைஞர்கள்.இப்படிப்பட்ட சென்னை நகரத்தில் வசித்துக் […]
ஒலிபெருக்கியில் ஒப்பாரி சத்தம் உறக்கத்தைத் துரத்தியது நேரத்தைக் கூட்டியது தாகமெடுத்தது அருகில் சென்ற போதுதான் தெரிந்தது கானல் நீரென்று கதவு திறந்திருந்தது உள்ளே எட்டிப் பார்த்தேன் ஈர விறகால் அடுப்பு புகைந்தது வானத்தின் உச்சியில் பறக்கும் கழுகின் நிழல் பூமியில் விழும் விளக்கிலுள்ள சுடர் தான் இருளை விரட்டியடிக்கின்றது மரணப் புதிரை அவிழ்க்க முயல்பவனை எச்சரிக்கும் பைசாசங்கள் கரைகளுக்கிடையே ஓடும் ஆறு கடல் போய்ச் சேருமா நீர்மட்டத்திற்கு மேலே துள்ளும் மீனை கவ்விச் செல்லும் பறவை.
மோட்ச தேவதை கிணற்று நீரில் விழுந்த தனது பிம்பத்தை எட்டிப் பார்த்தது குழந்தை வானவில்லை விட அம்மாவின் சேலை வண்ணம் மிகவும் பிடித்திருந்தது அதற்கு தன்னுடன் சோற்றுக் கவளத்துக்கு போட்டியிடும் நிலாவுக்கு காய் விட்டது குழந்தை லாலிபாப் வாங்கிக் கொடுத்தால் கன்னத்தில் முத்தம் பதிக்கும் யாரையும் சீரியல் பார்க்கவிடாமல் கார்ட்டூன் சேனல்களில் லயித்துப் போய் தொலைக்காட்சி முன்னால் தவமிருக்கும் அழைப்பு மணி ஒலிக்கும் கணத்தில் தொலைபேசி அதன் கையிலிருக்கும் மழலை மொழியில் ஹலோ என்பதை வீடே […]