சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 43

This entry is part 40 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

   இந்த வாரம் यावत् – तावत् (yāvat – tāvat)(as long as – so long as) என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய உருமாற்றம் பெறாத சொற்கள்(Indeclinable) பற்றித் தெரிந்து கொள்வோம். ஒரு வாக்கியத்தில் यावत् என்ற சொல்லை உபயோகித்தால் तावत् என்பதையும் உபயோகிக்க வேண்டும். கீழே உள்ள உதாரணத்தை உரத்துப் படிக்கவும். यावत् हिमालयः भवति तावत् हिन्दुसंस्कृतिः तिष्ठति। yāvat himālayaḥ bhavati tāvat hindusaṁskṛtiḥ tiṣṭhati| எதுவரை இமயமலை இருக்கிறதோ அதுவரை […]

ஆதிசங்கரரின் பக்தி மார்க்கம்

This entry is part 39 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ஆன்மீக நாட்டத்திற்கும் ,தேடலுக்கும் உரிய வழி முறைகளில் பக்தி பரவலாகவும்,எளிதாகவும் அமைகிறது. தத்துவ விவாதங்களில் சிக்காமல் கடும் பயிற்சிகளில் ஈடுபடாமல் பக்தி என்ற சாதனம் மூலம் இறையருளைப் பெற முடியும். படித்தவர்கள், ஞானம் உடைய வர்களால் மட்டுமே அணுக முடியும் என்பது இறைக் கொள்கையாக அமையும் போது இறைவன் பாமரர்களால் ,சாதாரண மனிதர்களால் அணுக முடியாதவனாகிறான்.ஞானிகளால் மட்டுமே அறியப் படுகிற வனாக அவன் இருப்பதில் பயனில்லை. சாதாரண மனிதன் கடவுளை அணுக முடிவது, அடைய முடிவது பக்தி […]

பஞ்சதந்திரம் தொடர் – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு

This entry is part 38 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ஆப்பைப் பிடுங்கிய குரங்கு ஒரு பிரதேசத்திலே நகரம் ஒன்று இருந்தது. அதன் அருகே ஒரு தோப்பில் யாரோ ஒரு வியாபாரி கோவில் ஒன்று கட்டிக்கொண்டிருந்தான். அங்கு வேலை செய்யும் ஆட்கள் மேஸ்திரி எல்லோரும் உச்சி வேளையில் சாப்பிடுவதற்காகத் தினந் தோறும் நகரத்துக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் அவர்கள் இல்லாத நேரத்தில் ஒரு குரங்குக் கூட்டம் பாதி கட்டப்பட்டிருந்த அந்தக் கோவிலை அடைந்தது. அங்கு தச்சன் பாதி பிளந்து போட்டிருந்த ஒரு பெரிய கட்டை கிடந்தது. அதன் உச்சியிலே […]

வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.

This entry is part 37 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் […]

நேய சுவடுகள்

This entry is part 36 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

நேயத்திற்கு மொழி உண்டா, எழுத்து வடிவத்துடன் !! சகதியில் சிக்கிய பசுவின் அலறலும், காப்பாற்றுகிற கைகளினால் சகதி துமிகளின் ‘தப்…திப்பு’ களின் பரிபாஷனையும் உருகொடுத்தது நேயமொழியாக.. கை கொடுக்காத அச்சச்சோக்களும் அய்யையோக்களும் ஓலங்களாயின ,மொழிகளாய் அல்ல.. காகிதத்தில் கை சகதியை துடைத்தபடி சென்ற இயல்பான வழிபோக்கனின் கால்சுவடும்.. அதை ஒட்டியபடி நெடுக தொடர்ந்த பசுவின் கால்சுவடும்.. நேய மொழிக்கான எழுத்து வரிசை வடிவமாய் அரங்கேறியது சகதி படிமத்தில்.. – சித்ரா (k_chithra@yahoo.com)

பழமொழிகளில் மனம்

This entry is part 34 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

மனம் மிகவும் அற்புதமான ஒன்று. இதில் என்ற இருக்கிறது? அது எதை நினைக்கிறது?எப்படிச் செயல்படுகிறது? என்பதை யாராலும் கூற முடியாது. மனம் புதிர் போன்றது. மனம் உடையவன் மனிதன். இன்றும் இம் மனித மனத்தை வைத்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நமது முன்னோர்கள் புதிராக விளங்கும் இம்மனித மனத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைப் பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர். மனம்-வாழ்வு வாழ்விற்கு அடிப்படையாகவும், நலத்தையும் தருவது மனம். வாழ்க்கை மனத்தையே சார்ந்துள்ளது. பணம், பொருள், பொன், […]

ஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….

This entry is part 33 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

பூஜைக்கு கியூ பிடித்து நின்றவர்களில் சிவசங்கரன் முதலாவதாக நின்றார். அவர் கோயில் தலைவர். ஆகவே ஐயனார் பூஜையில் அவருக்குத்தான் முதல் மரியாதை. அந்த விசேஷங்கள் ஒன்றுமில்லாத நாளிலும் ஒரு பத்து பேர் கோயிலுக்கு வந்திருந்தது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பெரும்பாலோர் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். ஐயனார் கோயில் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஐயனாருக்கு விசுவாசமாகவும் பக்தியுடனும் இருப்பவர்கள் சிலர். ஐயனாரின் மகிமை தெரிந்து வெளியிலிருந்து புதிதாக வந்தவர்கள் சிலர். இது நகரத்திலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள இடம். கிட்டத்தட்ட புறம்போக்கு. […]

சிதைவிலும் மலரும்

This entry is part 32 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

வாழ்க்கையின் வேளைதோறும் நெகிழும் கிழிசல்களை தைக்கிற சின்ன ஊசிக்கு சில நேரங்களில் கனவு நூல்கூட கனமாகிறது சிறு புள்ளியாய் மின்னும் ஒளிக்கு இருண்ட பிரபஞ்சத்தின் திசைகளில் பயணிக்க எத்தனிப்பதும் இன்னும் பிரகாசிக்க முயல்வதும் அகத்திற்குள்ளேயே முடிகிறது. கிளைகளாய் வி¡¢யும் மிக நீண்ட பாதைகளில் பயணமானது எவ்வழியில் என்பதை தீர்மானிக்க காலம் கற்றுத்தராதா என்ற ஏக்கம் மேலிடுகிறது. இலவம் பஞ்சாய் மெல்லியதான இதயவெளியை ஆக்கிரமித்த கால நெருப்பின் நிகழ்வுக் குஞ்சுகள் ஊதிப்பெருக்கின்றன சாம்பலாக்க. எங்கோ சில நேரம் காணாமல் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)

This entry is part 31 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்தப் பாலைவன வெளியின் இரவிலே நடுங்கும் கடுங்குளிர் இதயத்தின் இருண்ட கணப்புடன் இதமாய் உள்ளது எனக்குள் தூண்டப் பட்டு ! முட்போர் வையில் பூதளம் மூடப் படட்டும் ! மிருது வான தோட்டம் இருக்கிற திங்கு ! உட் பொருட்கள் வெடியில் தெறித்துப் போயின ! கருகிச் சிற்றூர், நகரம் பற்பல எரிந்து போயின ! என் செவியில் விழந்த செய்தி எதிர் […]