மரணம் பின்பு சிலர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வந்துவிடுவர் வருமானம் வீடு தேடி வரும் சமணத்தில் முக்தி பெண்களுக்கு கிடையாதாம் பிரமாண்ட நந்தி கூடவே பிரஹன்நாயகி இவ்வளவுக்கும் தகுதியுடையவனா பிரகதீஸ்வரன் கல்வி நிறுவனங்கள் அம்பானிக்கும்,டாடாகளுக்கும் தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் பணியை செவ்வனே செய்கின்றன பெண்களால் வீழ்ந்தன எத்தனையோ சாம்ராஜ்யங்கள் சாவுக்கு பின்னும் மதச் செயல்பாடு இருக்குமானால் மனிதனுக்கு இன்னல் தான் அரசர்கள் காலத்தில் அரண்யத்தில் வசித்த காபாலிகக் கூட்டம் கொலை செய்யத் தயங்காது அஹிம்சையால் சுதந்திரம் வாங்கிய […]
கண்ணெதிரே சிறிது சிறிதாக மறந்து வருகிறேன் இன்னாருக்கு கணவன் என்பதை இன்னாருக்கு தகப்பன் என்பதை தான் எந்தப் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை சொந்த பந்தங்களை அண்டை வீட்டுக்காரர்களை முக்கியமாக வீட்டின் முகவரியை தொலைபேசி எண்களை வங்கிக் கணக்குகளை வாகனத்தின் இலக்கங்களை மொழியின் அவசியத்தை உடையின் அலங்கோலத்தை சாலை விதிகளை வசிக்கும் ஊரின் பெயரை திசைகள் நான்கு என்பதை நேர்ந்த அவமானங்களை உதாசீனப்படுத்திய உள்ளங்களை பசியை மறந்து மயங்கி விழ இறந்ததையும் மறந்து நடந்து கொண்டிருக்கிறேன். பெருஞ்சுவர் நீங்கள் […]
ஓம் ஸாந்தி ஸாந்தி நதிப் பிரவாகம் பேதம் பார்ப்பதில்லை மதுக் குப்பிகளை திறக்கும் போதெல்லாம் உன் ஞாபகம் வருகிறது இரவின் நாயகி நீயெனவும் பகலின் நாயகன் நானெனவும் விந்தை மனிதர்கள் விரைவில் புரிந்து கொள்வர் இரவுக்கு ஆகாரமாகவும் பகலுக்கு ஆதாரமாகவும் நீ இருக்கிறாய் சக்தி ஆட்டுவிக்கிறாள் சிவன் நடனமாடி களிக்கிறான் விழிகள் போடும் கோலங்களை வியந்து போய் பார்க்கிறேன் நகத் தீண்டலிலே என்னுள் மிருகம் விழித்துக் கொள்கிறது ஆதி நாட்களில் பாம்பாக அலைந்து கொண்டிருந்த நடராஜரும் சிவகாமியும் […]
ஜகத்மித்யை பருவத்தில் பாட்டு கேட்பது தனிமையில் சிரிப்பது கண்ணாடி பார்ப்பது சகஜம் தான் மிலேச்ச நாட்டில் மொழி தெரியாமல் சுற்றுபவனைப் போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தால், கண்டுபிடிப்பது கஷ்டமல்ல காதல் தான் காதலின் சின்னமே கல்லறை தான் கேள்விப்பட்டதில்லையா காதலில் விழுவது தெய்வத்தைத் தொழுவது எல்லாம் ஒன்று தான் ஓர்மை இல்லாவிடில் சமூகக் கழுகுக்கு இரையாவாய் விடாயை விட்டுத் தொலை உலகை சாளரத்தின் வழியே பார்க்காமல் முச்சந்தியில் நின்று பார் சிவசங்கரன் சொல்லிச் சென்றது சிற்றறிவுக்கு சிறிது […]
புத்தகம் மூடியே கிடந்தது மேஜையில் காபி ஆறிப்போயிருந்தது ஆஸ்ட்ரேவில் சாம்பல் இல்லை இன்னும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது அவளுக்கு உற்ற துணையாய் இருப்பேன் என்றேன் ஆனால் இதற்கு துணை வர முடியவில்லை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள மருத்துவரை அழைக்கலாமா என்று யோசனை எழுந்தது நான் இன்னும் உயிருடன் இருப்பது குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது எனது ஆன்மா பாதாள அறையில் சிறைபட்டுவிட்டது மீண்டும் அறை கதவை திறந்து உள்ளே சென்றேன் இத்தனை நாட்களாக வியாதி […]
நீலவானம் இலக்கு இருக்கிறதா செல்லும் மேகத்திற்கு பழுத்த இலை உதிர்கிறது இனி அவை எங்கெங்கு பயணப்பட வேண்டியிருக்குமோ அலை மெல்ல கிசுகிசுத்தது கரையோ மறுதலித்தது காற்று வேகமெடுத்தது பூக்கள் ராஜபாட்டை விரித்தது பறவைகள் கூட்டம் மேற்கு நோக்கி பறந்தது வானம் சூரியனுக்கு விடை கொடுத்தது விருட்சத்தின் நிழலில் விழுந்த விதை முளைவிடுமா மணி காட்டும் கடிகாரத்தில் நொடி முள்ளுக்கு ஓய்வு இல்லை மனிதன் மனிதனாக இருந்தால் கடவுளின் இருப்பு கேள்விக்குறியாகாதா மரணப் புதிருக்கு விடை சொல்லுபவர்கள் யார்?
ஆயிரம் அர்த்தம் தனிமையை அருந்தும் போது மனம் மனிதர்களைத் தேடுகிறது வாடிய பூக்களைக் கண்டு மொட்டுக்கள் சிரித்தன பழுத்த இலை மரத்தினிடையேயான பிணைப்பை முறித்துக் கொண்டது கடல் மானுட இனத்திற்கு முடிவுரை எழுதப் பார்க்கின்றது ஓர் மழை நாளில் தான் என் முதல் முத்தம் பரிமாறப்பட்டது வெறுமையை நிவர்த்தி செய்யும் குழந்தையின் மழலை முகில் காற்றுக்கு எதிராக பயணிக்க பிரயத்தனப்பட்டது பிரியும் தருணங்களில் அழுகையை விட மெளனமே சிறந்தது. ———- மச்சம் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு […]
ரம்யம் வசந்தகாலத்தின் முதல் பழங்களை அணில் ருசிக்கும் பறவைகளின் சப்தம் சன்னமான இசை மேகங்களற்ற வானம் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்தான் பாறையில் மோதிய கணத்தில் சிறகு முளைத்தது அந்தி வானத்தில் கூடு திரும்பும் பறவைக் கூட்டம் பருந்தின் நிழல் கண்டு அஞ்சும் புறாக்கள் லேசான தூறல் ரம்யமான மாலை கிழக்கு வானத்தில் வானவில் அலைகள் சொன்ன கதைகளை கரை யாரிடம் சொல்லும் குளம் எப்படி நிலாவை சிறை பிடித்தது தோட்டத்து மலர்களில் அவள் கூந்தலை அலங்கரிக்கப் […]
பொழுது நன்றாக விடிந்து விட்டிருந்தது.பால்காரனின் மணிச்சத்தம் அருகாமையில் கேட்டது.நாளிதழ் போடும் பேப்பர் பையன் வீசிய தினசரி கதவில் மோதி கீழே விழுந்து டொப் என்ற சத்தத்தை எழுப்பியது;எழுந்து போய் எடுத்து படிக்க ஆரம்பித்துவிட வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டது சங்கரனுக்கு.எழுந்து தினசரிக்குள் மூளையை திணிக்காவிட்டால்,மனம் கவலை கொள்ள ஏதவதொரு பிரச்சனையை கொண்டு வந்து அதைச் சுற்றியே சுழல ஆரம்பித்துவிடும்.பேப்பரில் அச்சியப்படும் செய்திகளை உருவாக்குகிறவர்களாக சில நபர்கள் நாட்டில் இருக்கிறார்கள்;பல பேர் அதனைப் படிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்,அதில் சங்கரனும் ஒருவன். திரும்பவும் […]
குருகுல வம்சத்தில் தோன்றிய சந்தனு ராஜனுக்கு கங்கையின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளையும் நதிக்குள் வீசியெறிந்துவிட்டாள் கங்காதேவி.எட்டாவது குழந்தையை வீசச் செல்லும் போது, தான் கொடுத்த வாக்கையும் மீறி சந்தனு அரசன் அவளைத் தடுக்க முற்பட்டான்.உரிய வயதில் உன் புதல்வன் உன்னிடம் வருவான் எனக் கூறி நதியினுள் போய் மறைந்து போனாள் கங்கை.வாக்கை மீறிய சந்தனுவின் ஒரு கேள்வியால் உயிர் பிழைத்த கங்கா புத்திரனான பீஷ்மர் வாலிப வயதை எட்டியிருந்தார்.அவர் உலாவும் நதிக்கரையோரம் ஒரு விடிகாலைப் பொழுதில் […]