பருவ வயது வந்ததும் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி ஆக்கினீர்கள். வரதட்சனை கேட்க்காத வரன்தான் வேண்டுமென்று வந்த வரன்களை விரட்டி விட்டீர்கள். விவாக வயது கடந்துபோனது. தோழியின் இடுப்பில் குழந்தை கனத்துப்போகுது என் இதயம். பக்கத்து வீட்டு பையனை பார்த்தாலேபோதும் வேசி என்று பேசுகின்றீர்கள். தனிமரமாய் தமக்கை நானிருக்க தம்பி திருமணத்திற்கு துடி துடிக்கின்றீர்கள் மகாலட்சுமி வருவதாய் மகிழ்ந்து போகின்றீர்கள் தம்பி திருமணத்திற்கு தடையாக இருக்கிறேன் என்று அரளிவிதையை அரைத்து வைத்து “செத்துப்போ” […]