Articles Posted by the Author:

 • கரிக்கட்டை

  கரிக்கட்டை

    ’ மர கரி, கருமையான, நுண் துளைகள் கொண்ட, எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்ட ஒரு பொருள். இது நீரில் மிதக்கும், வெப்பம் மற்றும் மின்சாரத்தின் மோசமான கடத்தி. நுண்துகள்களுடைய இந்த மர கரி அதன் நுண்ணிய மேற்பரப்பில் திரவங்கள் மற்றும் வாயுக்களை உறிஞ்சிக் கொள்ள முடியும்’   சரிகா, பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு வீட்டிற்கு பொடி நடையாக நடந்து வந்துகொண்டிருந்தாள். மனசெல்லாம் ஒரே பாரம் அழுத்தியபடி இருந்தது. ‘கரிக்கட்டை’ என்ற வார்த்தையை எத்தனை […]


 • நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!

  நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!

  காட்சி  : 1   ஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா..   ஹலோ..  என்னம்மா.. நான் டிராஃபிக்ல இருக்கேன்.. ஒன்னும் கேக்கலை   ஹலோ.. ஏனுங்க பக்கத்துல யாரோ பேசுறது கேக்குது.. நீங்க என்னமோ வண்டீல போற மாதிரி சொல்றீங்க..   அதுவா.. வேற ஒன்னுமில்லம்மா. நானு சிக்னல்ல நிக்கிறேனா.. அங்க பக்கத்துல ஒருத்தர் போனில பேசிட்டிருக்கார்..   ஓ அப்படியா.. அப்ப சரி. வந்து, நான் எதுக்கு போன் பண்ணேன்னா.. ஏனுங்க… ஏனுங்க.. […]


 • அதிரடி தீபாவளி!

  அதிரடி தீபாவளி!

    பவள சங்கரி   “எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாய் நீ?  உனக்கு என்ன பிரச்சனை? என்னால் உனக்கு என்ன காரியம் ஆக வேண்டும்? எப்படி உதவ முடியும் உனக்கு நான்? ஏன் என்னை இப்படி சுற்றிச் சுற்றி வருகிறாய்?  என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் மச்சி….?”   “ஓ, இதுதான் உன்னோட பிரச்சனை மீத்து.. எதுக்கு இப்படி கேள்வி மேல கேள்வி கேட்கறே. அதுவும் மச்சினெல்லாம் சொல்றே ஃபிரண்ட்ஸ்குள்ளதான் இப்படியெல்லாம் பேசுவாங்க. இல்லேனா அக்கா ஹஸ்பண்டை […]


 • சித்தன்னவாசல்

  சித்தன்னவாசல்

    பவள சங்கரி   ‘குயிலின் கீதமும், கிளியின் கிரீச் ஒலியும் கூட சங்கடப்படுத்துமா என்ன..  வாழ்க்கையின் அடித்தளமே ஆட்டம் காணும்போது இதெல்லாம்கூட  பாரமாகி  சலிப்பேற்படுத்தத்தானே செய்கிறது. அழகு என்ற சொல்லே எட்டிக்காயாய் கசக்கிறதே. அது குயிலாக இருந்தால் என்ன, இல்லை மயிலாக இருந்தால் என்ன, அழகு எங்கிருந்தாலும் அது ஆபத்துதான்.. என்ன இது என் நினைப்பில் இவ்வளவு விரக்தி, இது தப்பாச்சே. தைரியத்தை விடக்கூடாது’…   சரசு தனக்குள் சொல்லிக்கொண்டாலும் அது உள்ளத்தின் ஆழத்தில்  இருந்ததுதான். […]


 • குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

  ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு  அதனை  வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக […]


 • தாயுமானாள்!

  தாயுமானாள்!

    “அண்ணே, இப்புடி சர்வ சாதாரணமா சொல்லிப்புட்டீங்க.. ஒரு பெண்ணைப் பார்த்து, அவளோட தகுதி, அவ அப்பாவோட தகுதி, அவங்களோட ஃபேமிலி பேக்ரவுண்ட், இப்படி எத்தனை விசயத்தைப் பாத்து பிறகுதானே அந்தப் புள்ளைக்கு பிராக்கட்டு போட ஆரம்பிக்கிறோம். அந்தப் புள்ளைங்கள மடங்க வக்கிறதுக்குள்ள நாங்க படுற பாடு கொஞ்சமா, நஞ்சமா. கையில இருக்கற அத்தனை காசும் மூலதனமா போட்டுல்ல இந்த வேலையப் பண்ண முடியும். இந்த ஆறு மாசமா எத்தனை விதமா நடிச்சிருக்கேன் தெரியுமா, நவரச நாயகன் […]


 • காக்காய் பொன்

  காக்காய் பொன்

    பவள சங்கரி   அந்தி மாலைப் பொழுது. இருண்ட மேகக்கூட்டத்தின் இடையே அவ்வப்போது மெல்ல முகம் காட்டி மறையும்  நிலவுப் பெண்.  அசைந்து, அசைந்து அன்னை மடியாய் தாலாட்டும் இரயில் பயணம்.  சன்னலோர இருக்கையாய் அமைந்ததால் இயற்கை காட்சிகளுடன் ஒன்றிய பயணமாக அமைந்தது. ஆம்பூரிலிருந்து ஜோலார்ப்பேட்டை செல்லும் பாதை . தென்னை மரக்கூட்டங்களின் அணிவகுப்பு.  இடையே சுகமாய் நித்திரை கொள்ள ஏங்க வைக்கும் சுத்தமான மண் தரை. சிலுசிலுவென தென்னங்காற்றின் சுகத்தினுடன் இரண்டு அணில் பிள்ளைகள் […]


 • மெய்கண்டார்

  மெய்கண்டார்

  “டேய் மச்சி, இன்னைக்கு அந்த கோர்ட் வாசல்ல உண்ணாவிரதம் இருக்குற பொம்பளையோட கேசு, சூடு பிடிக்குதுடா. கேமாராவோட ஓடிவா.. “ “என்னடா ஆச்சு திடீர்னு” “என்ன.. வழக்கம் போலத்தான். மகளிர் அமைப்பும், வேறு சில பொது நலச் சங்கங்களும் வந்துட்டாங்க சப்போர்ட்டுக்கு, அப்பறம் என்ன கேக்கணுமா..” கோர்ட் வாசலின் எதிர்ப்புறம் மரத்தடியில் உட்கார்ந்து தர்ணா செய்து கொண்டிருந்த செண்பகத்தை போலீசார் விரட்டிக் கொண்டிருந்தனர். பொது நல சங்கங்களும், மற்ற பெண்கள் நல அமைப்புகளும் விசயம் அறிந்து வந்து […]


 • கேத்தரீனா

  கேத்தரீனா

  “சபேசா, இன்னைக்கு பொண்ணு பாக்க வறோம்னு சொல்லியிருக்கு, சாயங்காலம் 5 மணிக்கு போகணும். மணி மூனு ஆவுதுப்பா. சீக்கிரம் தயாராகிடுப்பா..” “அம்மா.. ஏம்மா.. இப்படி சொன்னா புரிஞ்சிக்காம அடம் புடிக்கறீங்க. என் வாழ்க்கைய என்னை வாழவிடுங்க. எனக்கு பிடிச்சப் பொண்ணை, கல்யாணம் செய்துக்க உடமாட்டேன்னு நீங்கதான் அடம் புடிக்கறீங்க. முன்ன பின்ன தெரியாத ஒரு பெண்ணை, அதுவும் கிராமத்துப் பொண்ணை கட்டிக்கிட்டு அமெரிக்காவுல போய் எப்படி குடும்பம் நடத்த முடியும். நாலு வார்த்தை சேர்ந்தா மாதிரி இங்கிலீஷ் […]


 • என்ன ஆச்சு சுவாதிக்கு?

  என்ன ஆச்சு சுவாதிக்கு?

  “சுவாதி.. சுவாதீம்மா.. என்னடா பன்றே. மணி 8.30 ஆகுது. ஸ்கூல் லீவுன்னா இவ்ளோ நேரமா தூங்கறது. எழுந்திரிச்சி வாம்மா. அம்மா, ஆபீஸ் போகணுமில்ல. நீ குளிச்சிட்டு சாப்பிட வந்தாத்தானே உனக்கு டிபன் குடுத்துட்டு நானும் நிம்மதியா கிளம்ப முடியும். வாடா குட்டிம்மா, ப்ளீஸ்.. என் தங்கமில்லையா நீ..”   ஒன்றும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்ட அன்பு மகளின் போக்கு இந்த மூன்று நான்கு நாட்களாக வித்தியாசமாகத்தான் இருக்கிறது.  எதைக்கேட்டாலும் மௌனம்தான் பதில். கலகலவென பேசித்தீர்க்கும் மகளிடம் […]