பெருநீரைத் தேடாத நதியையும் வசந்தமாய் மாறாத கூதாளிக்கால மனநிறைவையும் நாம் மொழிவது யாதென்று இயற்கையன்னையவள் சிரத்தைகொளல் வேண்டுமோ. கட்டு முகனையைப் பற்றி நாம் கூறுமனைத்தையும் கவனம் கொள்ள வேண்டுமோ, நம்மில் எவரெவர் இவ்வளியை சுவாசிக்கப் போகிறோம்? நீவிர் ஆதவனுக்குப் பின்நோக்கிச் சென்றால் உமது நிழலையேக் காண்பீர் பகற்பொழுதின் கதிரொளியில் சுதந்திரமாக இருக்கிறீர் நீவிர், மற்றும் இராப் பொழுதின் நட்சத்திரங்களின் முன்னாலும் சுதந்திரமாகவே இருக்கிறீர் நீவிர்; மேலும் சூரிய,சந்திரரும் நட்சத்திரமும் இல்லாத போழ்தும் சுதந்திரமாகவே இருக்கிறீர் […]
அன்புடையீர், வணக்கம்.. சென்னை நநதனத்தில் நடந்து கொண்டிருக்கிற 2013ம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் கடை எண்: 488 மற்றும் 489 ’கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாரின் கடைகளில் என்னுடைய 4 புத்தகங்கள் வெளியாகி உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்கள் இயன்றால் சென்று வாங்கிப் படித்து தங்களுடைய மேலான கருத்தைப் பகிர்ந்து கொண்டால் நன்றியுடையவளாக இருப்பேன். இதில் பெரும்பாலான கதைகள் நம் திண்ணையில் வெளியானது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நூல்களின் விவரம் வருமாறு: […]
Sand And Foam – Khalil Gibran பவள சங்கரி மேதையென்பவன், ராபினின் மிதமானதொரு வசந்தகால துவக்கத்தின் கீதமானவன். மோசமான இறகு படைத்ததோர் ஆன்மாவாயினும், அதுவும்கூட உடற்தேவையினின்று தப்பிக்க இயலாது. பித்தன் என்பதாலேயே அவன் உம்மையும், எம்மையும் விடக் குறைந்த தகுதியுடனான இசைக்கலைஞன் அல்லன்; ஒருகால் அவன் வாசிக்கிற அந்த இசைக்கருவி மட்டும் சிறிது ராகம் தப்பியதாக இருக்கலாம். இருதயத்தின் அமைதியினூடே உறைந்திருக்கும், தம் குழவியின் இதழ்களின்மீது இசைக்கும், ஒரு தாயின் பாடல் அது. நிறைவேறாத ஆசைகளென்பதே […]
மூடியிருந்த அறைக் கதவின் வழியாக உயிரை உருக்கும் மரண ஓலம். தீயால கருகி எரிந்து துடிக்கும் இறுதி நேரத்து போராட்டம். தெருவில் கூட்டம் கூடிவிட்டது. யாரோ ஆம்புலன்சுக்கும், போலீசுக்கும் போன் செய்தும் விட்டார்கள். படித்தவர்கள் குடியிருக்கும் அரசாங்க, டெலிபோன் குவார்டர்ஸ் பல மாடிக் கட்டிட்க் குடியிருப்பின் அருகில் உள்ள தனி வீடு. காலை ஷிப்ட் முடித்து வீட்டிற்கு வந்தவர்கள் பக்கத்து வீட்டில் வந்த மரண ஓலமும், எரியும் வாசமும் கண்டு அரண்டு போய் மளமளவென காரியங்கள் […]
கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினக் கொடியை ஏற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் .வீரதீர சாகசங்கள் புரிந்தவர்களுக்கு விருது வழங்குவதற்குத் தயாரானார். சுனாமியின் போது தம் உயிரைப் பணயம் வைத்து, இரண்டு குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இளைஞன், ஒகேனக்கல் ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த படகிலிருந்து பல உயிர்களைக் காப்பாற்றிய முதியவர், இளம் பெண்களைக் கடத்தும் கும்பலைக் காட்டிக்கொடுத்த நபர், குழந்தைக் கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்க உதவியவர் என முதன்மை வரிசையில் அமர்ந்திருப்போரின் […]
“வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு” பாரதியின் இந்தப் பாடலை வாசிக்கும்போது மட்டும் கவிதாவின் வீணை சற்றே அதிகமாக குழைந்து, குழைந்து போவது போல்த் தோன்றுவது காட்சிப்பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால் கவிதாவின் குரலில் ஒலிக்கும் அந்த ஜீவனுள்ள வரிகள் கேட்போரின் செவிகளில் தேன் மழை சொரிந்துவிட்டுச் செல்வதைத் தவிர்க்க இயலாது. கலைமகளின் அந்த இசைக்கருவி இந்தப் பூமகளின் விரல்களின் நர்த்தனத்தில் தேவகானம் […]
ஒட்டவும் முடியாமல், விலகவும் முடியாமல் உள்ளே உறுத்தும் சில உறவுகள் கொடுக்கும் வலி மன நிம்மதியைப் பறித்து விடக்கூடியது. ஒவ்வொன்றாக உறவுகளெல்லாம் விட்டு விலகிய காலம் போய் இன்று மெல்ல மெல்ல புதிய சொந்தங்களும், பந்தங்களும் ஒட்டிவர வாய்ப்பு அமைந்தும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மாலதி. சின்னம்மாவிடம் நேரில் சென்று பேச வாய்ப்பில்லாதலால், முத்தழகு அண்ணனைப் பற்றிய தகவலை போனில் விவரமாகச் சொன்னாள். விசயம் அறிந்தவர் உள்ளம் நெகிழ்ந்து, “மாலு ஆண்டவன் […]
சகோதரன் என்ற சக்தி வாயந்த உறவு இருந்தும் இல்லாமல் மனம் வெறுப்படைந்த நிலையில், ஒரேயடியாக மறந்துபோன நினைவுகள் அனைத்தும் மெல்ல மெல்ல தலை தூக்கி தூக்கத்தையும், படிப்பையும் கெடுத்தது. இத்தனை நாள் இல்லாத அந்த பாசம் இன்று மட்டும் எப்படி புதிதாக வரும் என்ற கோபமே மேலிட்டது. “மாலு, மாலு என்னாச்சு.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. உடம்பு ஏதும் சரியில்லையா?” நெற்றியில் கை வைத்துப் பார்த்த, உடன் தங்கியிருக்கும் அறைத்தோழி ஆர்த்தி உடல் நெருப்பாய்க் காய்வதை […]
காத்திருக்கிறாள் கன்னியவள் கனிவான மணமகனுக்காக… கண்ணில் ஓர் காதலுடன் கையில் மாலையுடன் சுயம்வர மண்டபமதில்… காமம் வென்ற (வர)தட்சணை சாபம் என்றாகிப்போக கன்னி கழியாமல் கண்ணீருடன் வாடிய மாலையுடன் காத்திருக்கிறாள் கன்னியவள்! ஏனிந்த கவர்ச்சிப் பருவம் எதற்கிந்த வரட்டு கௌரவம்? யாருக்காக இந்த வரம்? எதற்கிந்த சுயம்வரம்? சீந்துவாரில்லாமல்…… தெருவெங்கும் கழுகுப் பார்வைகள் மனமத அம்புகள் அர்ச்சனைக்காக மலர்ந்து தட்சணையின்றி கருகி கூசிக் குறுகும் கன்னி மனம். என்றேனும் வருவாய் மாலை சூடுவாய் நம்பிக்கை இழக்காமல் காத்திருக்கும் […]
Sand and Foam – Khalil Gibran (5) (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5) பவள சங்கரி புனையிழையவள் தம் முகத்தை புன்னகையால் முகத்திரையிடலாம். சோகத்தில் சோர்ந்த இதயமது, இன்பமான இதயத்துடன், இன்னிசை கீதமதை இதமாக இசைக்கும் அவரின் என்னே உயர் பண்பு. எவனொருவன் மாதொருத்தியை புரிந்து கொள்கிறானோ, அல்லது மேதைகளை, சோதனைகளுக்குள்ளாக்குகிறானோ, அல்லது மௌனத்தின் மர்மமதை விடுவிக்கிறானோ, அவனொருவன் மட்டுமே சௌந்தர்யமான சொப்பனத்திலிருந்து, எழுப்பி, காலை உணவு மேசையின் மீது அமரச் செய்யக் கூடியவன். […]