பிச்சினிக்காடு இளங்கோ அண்மையில் படித்து முடித்த நூல் “ ஒகோனிக்கு எதிரான யுத்தம்”. ஆசிரியர் கென் சரோ விவா. தமிழில் தந்தவர் தம்பி யூமா வாசுகி. வெளியீடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நைஜீரியாவில் நைநகர் நதி தீரத்திற்கு வடக்கு கிழக்கான கடலோர சமதளங்களில் அமைந்திருக்கிற நிலப்பகுதிதான் ஒகோனி.. ஷெல் நிறுவனம் இயற்கை வளமிக்க அப்பகுதியில் எண்ணெய் எடுத்ததால் ஒகோனி பகுதிக்குள் 1,தூய காற்றோ, பசுமை அடர்வுகளோ இல்லாத இடமாகிவிட்டது. 2, பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு […]
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) கட்டடக் காடுகளின் காட்சிப் பெருவெளியில் அடர்ந்த காடெங்கே அடர்மர நிழலெங்கே எதோ ஆங்காங்கே இருக்கின்ற மரங்களில்தான் குயிலிருந்து கூவவேண்டும் குஞ்சுகளைப் பேணவேண்டும் எங்கள் குடியிருப்பில் ஏழெட்டு மரங்களுண்டு ஏழெட்டு மரமெனினும் எல்லாம் அடர்மரங்கள் வெயிலே நுழையாது விரித்த உயிர்க்குடைகள் அங்கேதான் பறவைகளின் அன்றாடக் கச்சேரி […]
இலையிருளில் இருந்தவண்ணம் எனையழைத்து ஒருபறவை பேசும் இதயத்தின் கனத்தையெல்லாம் இதமாகச் செவியறையில் பூசும் குரலொலியில் மனவெளியைத் தூண்டிலென ஆவலுடன் தூவும் குரலினிமை குழலினிமை கொஞ்சும்மொழித் தேனாக மேவும் துயில்கின்ற மனமானோ துள்ளலுடன் கனவாடை கலையும் கனவாடை கலைந்தாலும் கவிவாடை தானாக விளையும் பொருள்புரியா மொழிகேட்டு புலர்காலை ஏக்கமுடன் விடியும் புள்ளினத்தின் மனமறியாப் பொங்குமனம் கவியெழுதி […]
சிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம் புரட்டினேன். அது மலாய்மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு. நூல் கனமாக இல்லையென்றாலும் என் கவனத்தைக் கவர்ந்துவிட்ட்து. படிப்பதா? இல்லை அங்கேயே விட்டுவிடுவதா என யோசித்துப் பின் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். நூலாசிரியரின் முன்னுரை என்னைப்படிக்கத்தூண்டியது. அடக்கமும் எழுத்தின்மீது அக்கறையும் கவனமும் தொனித்த நடை அவர்மீதான மரியாதையைக்கூட்டியது. அதனாலயே தொடர்ந்து இருக்கையிலும் […]
பண்பாட்டுக் கருவூலம் பயன்பாட்டுப் பொருளகம் நாளும் செல்கின்ற திருத்தலம்-நம் நாவிற்கும் கண்ணுக்கும் விருந்தகம் உணவென்றால் அறுஞ்சுவை உடையென்றால் வகைவகை அங்கேதான் மனம்போல கிடைக்கும்-போய் வந்தாதான் மனம்கூட நடக்கும் தரமான நகைக்கூட்டம் வரமான கலைக்கோட்டம் வருவோரை ஈர்ப்பதுவே நாட்டம்-சென்று வருவோரின் முகத்திலில்லை வாட்டம் நாடுவிட்டு நாடுவந்து ஓடாகிப் போனாலும் வாரத்தில் ஒருநாளே போதும்-மனத்தின் தீராத சோகங்கள் போகும் ஊரோடு இருப்பதுபோல் உறவோடு வாழ்வதுபோல் பேருணர்வு ஊற்றாகப் பொங்கும்-புதுப் பேரின்பம் தானாகத் தங்கும் பயணமெனில் முகவர்களும் பணியமர்த்தும் முகவர்களும் ஒருசேர […]
பிச்சினிக்காடு இளங்கோ நாம் புகழ்ந்து புகழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம் அதில் நமக்குள் ஒரு போட்டி எது எது யார் யாருக்கு என்பதில் எள்ள்ளவும் இல்லை அக்கறை அது அதுக்குரிய அடர்த்தியை அறிந்திருந்தால் விரயங்களைத் தவிர்த்திருப்போம் வேறுபாடு தெரியாமல் வீணாக்கக்கற்றிருக்கிறோம் அது எப்படி இப்படிப் பொறுப்பின்றிப் புகழக்கற்றுக்கொண்டோம் அந்தக் கணத்தில் ஆவியாகிவிடுகிறோம் வெற்றுத்தரையில் பெய்தமழையாய்க் கொட்டிவிடுகிறோம் கொட்டிமுழக்குகிறோம் மழைநீர் சேமிப்பைப்போல் சேர்க்கத்தெரிந்திருந்தால் செலவுசெய்ய மனமிருக்காது யாரோ தயாரித்ததை அடுத்தநாளே நமதாக்கிக்கொள்கிறோம் முகவரியில்லாமல் அலையவிடுகிறோம் பெற்றோரை அறியாத அநாதைகளாய் அவை […]
எங்கே இருக்கிறேன் நான்? எங்கேயோ இருக்கிறேன் நான் எங்கே போய்விட்டது அது? எங்கேயோ போய்விட்டது அது எப்படி இருந்தது அது! எப்படியோ மாறிவிட்டது அது! எப்படி இருக்கவேண்டும் அது? ஏன் அப்படியில்லை அது? இனி அப்படித்தான் இருக்கும் அது அப்படித்தான் இருக்கும் அது என்று சொல்லவும் முடியாது எப்படி எப்படியோ மாறிக்கொண்டுபோகும் அதை என்னசெய்வது? எப்படி இருந்தால் என்ன? அது அதுதான் நாம் நம் கவிதை செய்வோம்
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இதை இதை எழுதவேண்டுமென்று எண்ணியதில்லை எண்ணுவதுமில்லை அது அது வந்து நச்சரிப்பதால்தான் எனது எழுதுகோல் உச்சரிக்கிறது அதுவரை தெரியாதது அடுத்தடுத்து தெரிகிறது இருட்டுக்குள் வெளிச்சம் வழிகாட்டுகிறது சூத்திரம் இல்லாமல் சூட்சுமம் அவிழ்கிறது திறவுகோல் இல்லாமல் பூட்டுகள் திறக்கின்றன பார்ப்பதால் உடன் பாதிக்கப்படுகிறேன் எண்ணுவதால் என்னை இழந்துவிடுகிறேன் கவனம் கூடி கரைந்துவிடுகிறேன் பறவையாகி பறந்துவிடுகிறேன் விதவிதமாக பொருள்புரிகிறேன் புரிந்ததைப் புதிதாய்ப் புரியவைக்கிறேன் அதிசயம்கண்டு அசந்துவிடுகிறேன் வியப்புற்று என்னையே வியக்கிறேன் ஆனந்தமாய் ஒரு கவிதையடைகிறேன் கவிதையைக்கண்டு கர்வமடைகிறேன் […]
இப்போது பிடிக்கிறது உன்னை ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்ப்பப்பெயருண்டு என் குடும்பத்திற்கு என்னால் பெயர்வர எண்ணியிருக்கும்போது என்னை உன்குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள் உண்மையில் நான் உன்குடும்பத்தைச்சேர்ந்தவனல்ல ஆதியில் என்குடும்பத்தின் பெயர் வேறு வரலாற்றுச்சதியில்; சகதியில் வந்ததுதான் உன்பெயர் உன்பெயரில் இயங்க ஒருபோதும் உடன்பாடில்லை அதுபோல் இன்னொருபெயரில் இயங்க எள்ளளவும் விருப்பமில்லை என்ன செய்வது? ஏதாவது ஒரு குடும்பத்தைச்சேர்ந்தவனாக இருக்கவேண்டுமே? எனவேதான் நான் உன் குடும்ப உறுப்பினன் […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரல்வாங்கிய காரியவாதி நிழலைவணங்கி நேர்மையாய் வளர்ந்த ஏகலைவனுக்குத் துரோகம்செய்த துரோகி வேடம்போடத்தெரியாத வேடனுக்கு துரோணர் குரு துரோகி துரோகி குரு அவரிடம் கற்ற அரசகுமாரர்களில் தனித்தும் தினித்துவத்தோடும் விளங்கினான் அர்ச்சுனன் கற்றதில் கவனமும் குரு பக்தியும் நிறைந்தவன் அர்ச்சுனன் குருவிடம் கற்ற வித்தைகளை அரங்கேற்றும் நிகழ்வு நடந்தது மன்னர்கள் மன்னர்கள் அறிஞர்கள் ஆசிரியர்கள் […]