பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) சில எழுத்துப்பணியின் காரணமாய்ப் படிப்பது கொஞ்சம் அண்மையில் தடைபட்டது. விளைவு படிப்பதே நின்றதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. என்ன செய்வது ? ஏற்றுக்கொண்டதை முடிக்கவேண்டுமே என்ற அக்கறை ஒருபுறம். நேரத்தை வீணாக்காமல் எழுதிகொண்டுதானே இருகிறோம் என்ற சமாதானம் மறுபுறம். நீடிக்கும் இந்தமனநிலையில் கைக்குக்கிடைத்த நூல் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’ என்ற வானொலி உரைநூல். அண்மையில் நடைபெற்ற பத்தாவது ஈரோடு […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) எங்கள் வீட்டுக்கால்நடைகள் எப்போதும் பார்த்தது வைக்கோல்தான் தும்பை அவிழ்த்து கட்டுத்தறியைவிட்டு சுதந்தரமாய் மேய பச்சைப்புல்வெளிநோக்கி ஓட்டினேன் வரப்பிலிருந்து இறங்கி ஒன்றும் ஒழுங்காய் மேயவில்லை பச்சைப்புல்வெளி கண்களைக்கவர்ந்தும் இச்சையின்றிக் கால்நடைகள் இங்கும் அங்கும் திரிந்தன சுற்றிச்சுற்றி வந்தன இறங்கிமேயவில்லை அடித்து விறட்டி இறக்கிப்பார்த்தேன் இம்மிகூட அசையவில்லை அப்போதும் நுனிப்புல்லையே மேய்ந்தன பசும்புல் பார்த்தும் நுனிப்புல் மேயும் கால்நடைகளை வைத்துக்கொண்டு புல்வளர்த்து என்ன […]
நாள்தோறும் கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும், கவிதையில் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய வாசிப்பு இப்போது சிறுகதைகள் பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. அப்படியொரு கட்டாயத்தை நானே எனக்கு உருவாக்கிகொண்டேன்.நூல்களைப்படித்த விவரங்களைக் குறித்துவந்திருப்பதுபோல், படித்த சிறுகதைகளைப்பற்றிய விவரங்களையும்கூட குறித்துவைத்திருக்கிறேன்.நினைவில் வைத்துச்சொல்வதற்கு கைவசம் ஒரு சிறுகதைகூட இல்லை. ஆனால்,என்னுடைய கதைகளைத்தான் சொல்லமுடியும். காரணம் அவை என்னுடைய கதைகள்.நினைவிலிருந்து நழுவும் நிலை கதைகளுக்கு ஏற்படுவதால் அதைத் தவிர்க்கவே உடனடியாக இப்படிப்பதிவுசெய்கிறேன். அப்படித்தான் ஒரு சிறுகதை வாசிப்பாளனாக என்னை நிலைநிறுத்துகிறேன். அண்மையில் சிங்கப்பூர் கிளிமண்டி நூலகத்தில் ஐந்து […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) என்மேசையில் எழுதாத சில நாட்குறிப்புப் புத்தகங்கள் எல்லா நாள்களும் முழுப்பக்கமாய் அமைந்த நாட்குரிப்பு ஏடுகள் நடந்தாண்டாக இருந்தாலும் நடப்பாண்டாக இருந்தாலும் எழுதாத தாள்கள்மீது தீராக்காதல் இவற்றை விரும்பிசேர்ப்பதும் வேண்டிக்கேட்பதும் என் அகலாநோய் எப்போதும் என்பையில் பலவண்ணமையில் எழுதுகோல்கள் எழுதித்தீர்க்கும் பேராவலில்தான் இந்தச்சேகரிப்பும் சிரத்தையும் தீவிரமான வாசிப்பும் எழுத்தும் நிகழ்ந்தால் பரிமாணத்தைக் கூட்டலாம் பரிணாமத்தைக் காட்டலாம் நாட்குறிப்புத் தாள்கள் தீரும்போதும் எழுதுகோல்கள் […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) கடவுச்சீட்டு குடிநுழைவுஅனுமதி ஏதுமில்லாமல் விமானம் ஏறாமல் எங்களூர் ஏரிக்கு வந்திருக்கும் பன்னாட்டுக் கவிஞர்களே உங்களைப்பார்க்க ஒரு சோகம் விளைகிறது உங்களோடு ஒரு கவியரங்கம் நடத்தமுடியவில்லையே! வேதனை வருத்துகிறது உங்கள் பயணம் எவ்வளவுத் துயரம்! உங்கள் மனசில் எத்துணைப் பாரம்! செலவுக்கு ஏதுமில்லாமல் எவ்வளவுத்தூரம் செலவு செய்திருக்கிறீர்கள்! பகிர்ந்துகொள்ள பொது மெடையில்லையே! பொது மொழியில்லையே! துயரம் சுரக்கிறது! உங்கள் அமைதியின் அழகை அழகின் அமைதியை பார்க்கப் பார்க்க பருகப் பருக பரவசம் பிறக்கிறது ஐப்பசி கார்த்திகை […]
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) என்னோடு வந்திருக்கும் நீ எனக்காக வந்தாயா? எனக்காகவும் வந்தாயா? மேடையென்றால் போதும் மின்னிக்கொண்டு வந்துவிடுகிறாய் வெளிச்சத்தில் மின்னும் ஆசை உன்னோடு பிறந்தது கழுத்தை மாற்றுவதும் கைகளைத்தேடுவதும் உன் கைவந்தகலை யாருடனும் போவதற்கும் யார்வீட்டுக்கும் போவதற்கும் நீ தயார் ஒருவீட்டில் வாழ்வதென்பதும் ஒருவரோடு வாழ்வதென்பதும் உன் கையிலில்லை சிலர்மட்டும்தான் உன்னைக் கண்ணியப்படுத்துகிறார்கள் பெரும்பாலும் கலங்கப்படுத்துகிறார்கள் பெட்டிப்பாம்பாய் இருக்கும் உன்னால் பெரும்பயன் ஏதுமில்லை பெறும்பயனும் ஏதுமில்லை ஆதலால் உன்னை அனுப்பிவைத்து அழகுபார்க்கிறார்கள் பெருமைப்படுகிறார்கள் பெருமைப்படுத்துகிறார்கள் […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அதுதான் அழகு அதுவல்லாமல் வேறெது அழகு? கண்கள் நம்மைக் கண்டுகொள்ளாமல் கண்டுகொள்வது எதை? அனுமதியின்றி கண்கள் செல்வது எங்கே? அதை நினைத்தால் மனசு பறபறக்கும் பார்த்தால் கவிதை பிறப்பெடுக்கும் பலருக்கும் அப்படித்தான் கவிதை பிறக்கிறது சிற்பியின் உளி அதைத்தான் […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)4.2.2014 (1) ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ என்ற குறுநாவலும் சிறுகதைகளும் அடங்கிய தொகுப்புநூலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம்போல எடுத்ததும் நுழைந்துவிடமுடியாத படைப்புதான் குறுநாவல். ஜெயமோகன் தன்னுடைய படைப்புகளிலேயே மிக முக்கியமாகக் கருதுகின்ற படைப்புகளுள் ஒன்று ‘ஈராறுகால்கொண்டெழும் புரவி’ . அதுமட்டுமல்ல சித்தர் ஞானம் என்பதன்மீதான ஒரு விளையாட்டு என்றும் குறிப்பிடுகிறார். அர்த்தமற்ற விளையாட்டல்ல என்றும் குறிப்பிடுகிறார். அந்த விளையாட்டை உள்வாங்கமுடிகிறதே தவிர அப்படியே புரிந்துகொண்டேன் என்று சொல்லமுடியாது. ஒவ்வொரு இடத்திலும் நின்று, நிதானித்து, தேங்கி நகர்ந்திருக்கிறேன் என்பதே […]
அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் வரவேற்பு வளைவுகள் வைக்க வாகனங்களில்வந்து வரவேற்க சுவரில் எழுத சுவரொட்டிகள் ஒட்ட நாளிதழில் முகம்காட்ட பொன்னாடை போர்த்த மாலைகள் அணிவிக்க முப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் அந்தநொடியில் எந்தக்கவலையுமின்றி கரையவும் கரைக்கவும் காத்திருக்கிறார்கள் எங்கும் நிலவும் இந்த வானிலையில் […]
மின்சாரக்கடத்தியாய் திகழ்வது ஒரு காலம் மினசாரம் கடந்து வாழ்வது ஒரு காலம் வானம் தெளிவாய் இல்லாத ஒரு காலமும் உண்டு அது எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய காலம் அதை பதுக்கிவைத்திருந்தால் ஏமாற்றமில்லை அது பதுங்கியிருந்தால் ஏமாற்றம்தான் இரவில் இரைதேடும் எலிகளைப்போலவும் எலிகளைத்தேடும் பாம்புகளாகவும் தலைகாட்டும் தருணங்கள் அத்துபடிதான் பெருங்காயப்பெட்டியை திறந்துவைத்துவிட்டு ஊதுபத்தியைக் கொளுத்திவிட்டு காற்றின்மீது கறைபூசமுடியுமா? அது வெங்காயத்திற்கும் கண்ணீருக்குமான பந்தம் என்னைமீறி எதுவுமில்லை என்றிருந்ததுதான் தவறு என்னைப் பலமுறை வென்றது வென்றிருந்தால் நான் இளங்கோ அடிகள் வெல்லாததால் […]