குறைந்தது வாரத்திற்கு இரண்டு இலக்கியக்கூட்டங்கள் சின்ன அறையில் எண்ணிக்கைக் குறைவில் வருகையாளர்கள் அவர்களில் அதிகம் எழுத்தாளர்கள் எழுத்தும் வாசிப்பும் தவம் பெரிய அரங்கில் அதிக அளவில் வருகையாளர்கள் சிற்றுண்டி விரும்பிகள் அதிகம் சுட்டுதலும் சுருங்கக்கூறுதலும் குறைவு பெரிய அரங்கில் வழிபாடும் துதிபாடுதலும் அதிகம் அது முகம்காண வந்தக்கூட்டம் வந்து திரும்புவது அதன் வாடிக்கை சிற்றரங்கில் வசைபாடுதலும் கிண்டலும் கேளியும் அதிகம் உட்காருவதில் ஒரு ஒழுங்கில்லை அங்கே எல்லாரிடத்திலும் வெளிப்படுகிறது கோபம் அவர்களின் கோபத்தில் யாரும் தப்புவதில்லை […]
பிச்சினிக்காடு இளங்கோ 1 அட்சயபாத்திரம் அள்ள ஏதுமற்ற வெற்றுப்பாத்திரமாய்… கொட்டிச் சிரித்ததுபோய் வற்றி வதங்கி ஈரமில்லா அருவியாய்… கிளைகளில்லாத மரங்களாய் இலைகளற்ற கிளைகளாய் பச்சையமில்லா இலைகளாய் நிரம்பிய வனமாய்… மலர்களின் இடத்தை முட்கள் அபகரித்துக்கொண்டன வெளிச்சத்தின் தளத்தை இருள் கவ்விக்கொண்டது கரையவேண்டியது இறுகிப்போனது உதிரும் கனிகளின்றி கசக்கும் காய்களோடு நிரந்தரமாய்… சிரிக்காமல் மணக்காமல் நாறிக்கொண்டிருக்கிறது குப்பைத்தொட்டியாய்