கௌதம் சாரின் ஜே கே சார் புத்தகத்தை இரண்டு வாரங்களில் நிதானமாகப் படித்து முடித்தேன். ஏறக்குறைய முதல் 125 பக்கங்கள் வரை நிதானமாகப் போய்ப் பின்னர் ஒரே மூச்சில் ஒரு நாளில் படித்து முடிக்கும்படி இருந்தது. ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க நான் எடுத்துக் கொள்ளும் நேரம் புத்தகத்தைவிட அதிகமாக என் மனநிலையைப் பொருத்தது. ஆனாலும் இந்நூலில் முதலில் கௌதமன் சார் தன் வாழ்க்கைக் குறித்துக் கொடுக்கும் அறிமுகங்களை அறிந்த பின்னரே நுழைய முடிகிறது. இது ஜே […]
பி.கே. சிவகுமார் நமது அமெரிக்கக் குழந்தைகள் (மூன்று பகுதிகள்) – 2022ல் எழுதியது அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை – 2022ல் எழுதியது ஓர் அமெரிக்கக் கனவு – அக்டோபர் 26, 2023ல் எழுதியது மேற்கண்ட ஜெயமோகன் கட்டுரைகள் ஜெயமோகன்.இன் என்கிற அவர் இணையதளத்தில் கிடைக்கின்றன. அக்கட்டுரைகளை முன்வைத்து என் சில சிந்தனைகள்.. **** ஜெயகாந்தன் 2000-ஆம் ஆண்டில் அமெரிக்கா வந்தபோது அவரிடம் அறிவுரை கேட்டார்கள். அமெரிக்காவுக்கு அறிவுரை தர வரவில்லை என்ற ஜெயகாந்தன், இங்கிருக்கிற தமிழர்கள் பிற […]
(Details of this in English is given below after Tamil version too.) எழுத்தாளர் பெருமாள் முருகன் தொழில் ரீதியாக ஒரு தமிழ்ப் பேராசிரியர். நவீன தமிழ் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் புலமையும் கொண்டவர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து தடம் பதித்து இயங்கி வருபவர். திறனாய்வாளர். கொங்கு நாட்டுச் சொல்லகராதியைத் தொகுத்து வெளியிட்டவர். அமெரிக்கா வந்திருக்கிற அவருடன் ஒரு வாசக சந்திப்பு நியூ ஜெர்ஸியில் நடக்க விருக்கிறது. […]
2000 ஆம் ஆண்டு. ஜெயகாந்தன் அமெரிக்கப் பயணத்தில் நியூ ஜெர்ஸியில். நண்பர்களுடனான உரையாடல். விழுதுகள் குறுநாவல் குறித்தும் ஓங்கூர்ச் சாமியார் குறித்தும் பேச்சு. ஓங்கூர்ச் சாமியார் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் ஜெயகாந்தன் போனாரா என்ற கேள்வி. பொதுவாக யார் சாவுக்கும் போகாத ஜெயகாந்தன் தன் நண்பரும் ஓங்கூர்ச் சாமியாரை அறிந்தவருமான நடிகர் சுப்பையாவுடன் போனதாகச் சொன்னார். ஓங்கூர்ச் சாமியாருக்கு சாவுக்கிரியைகள், அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். பார்த்தால் ஓங்கூர்ச் சாமியார் மாதிரியே தெரியவில்லை. உடனே கிளம்பி வந்துவிட்டேன் என்றார். […]
பி.கே. சிவகுமார் (ஜூலை 2, 2015 அன்று, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் – சிந்தனை வட்டம் கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் உரையாற்றுவதற்கு முன் அவரை அறிமுகப்படுத்தும்விதமாக, நேரம் கருதி இவ்வுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் வாசிக்கப்பட்டன. பிற பகுதிகள் இணைந்த இந்த முழு-உரையின் பிரதி ஜெயமோகனிடம் கொடுக்கப்பட்டது.) அனைவருக்கும் வணக்கம்! எழுத்தாளர் ஜெயமோகனை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்க நிர்வாகிகள், ஜெயமோகன் வாசகர் வட்ட நண்பர்கள் பாஸ்டன் பாலாஜி, பழனி, கார்த்தி உள்ளிட்ட […]
[குறிப்பு: இது தமிழிசை பற்றிய விரிவான கட்டுரை அல்ல. இந்தத் தமிழ்ப் புத்தாண்டிலிருந்து நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் தன்னுடைய நிகழ்ச்சிகளில் தமிழிசையை ஒரு நிரந்தர நிகழ்ச்சியாக வழங்க முடிவு செய்துள்ளது. மே 2, 2015 சனியன்று தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், பார்வையாளர்களுக்குச் சுருக்கமாக தமிழிசையை அறிமுகப்படுத்தி சில நிமிடங்கள் மட்டும் நான் பேசியதன் எழுத்து வடிவம் இது. நியூ ஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் தமிழிசை நிகழ்ச்சியை நடத்தவும், ஒருங்கிணைக்கவும், தொகுத்து வழங்கவும் வாய்ப்பளித்த அதன் நிர்வாகிகள், […]
சல்மா முதல்முறை அமெரிக்கா வந்திருந்த பொழுது. கோபால் ராஜாராம் வீட்டில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பேச்சு சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் பற்றித் திரும்பியது. அதற்கு ரவிக்குமார் எழுதிய முன்னுரையைப் படித்துவிட்டு நாவலைப் படிக்க வேண்டாம் என்று நெடுநாள் வைத்திருந்ததாகவும், பின்னர் சில பக்கங்கள் படித்துத்தான் பார்ப்போமே என்று படிக்க ஆரம்பித்து நாவல் மிகவும் பிடித்துப் போனதாகவும் கோபால் ராஜாராம் சொன்னார். ரவிக்குமாரின் விமர்சன, தத்துவப் பார்வையின் தகுதிகள் குறித்து கோபால் ராஜாராமுக்குக் கேள்விகள் எதுவும் […]
கனிமொழி கைது பற்றி எழுதிய ஜெயமோகன் இப்படி முடித்திருந்தார். “இச்சூழலில் ஊரே கூடிக் கொண்டாட்டம் போடும் போது கூடவே சென்று நாலு அடி போடுவதில் எனக்கு ஆர்வமில்லை. கனிமொழியைப் பற்றி ஏதேனும் சொல்வதாக இருந்தால் அவர்கள் திரும்பிப் பதவிக்கு வரட்டும், அப்போது சொல்கிறேன்.” ஜெயமோகன் இதை இந்த விதமாகப் பார்ப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. இதைப் படித்தவுடன் 2000 ஆண்டு தீபாவளி தினமணி மலரில் சுகதேவ் ஜெயகாந்தனிடம் எடுத்த பேட்டியில், பின் தொடரும் நிழலின் குரல் பற்றிக் கேள்வி […]
(ஆனந்த் முருகானந்தம் தொகுத்து, எனிஇந்தியன் பதிப்பகம் வெளியிட்ட “அமெரிக்காவில் ஜெயகாந்தன்” நூலில் வெளியான கட்டுரை. திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.) 2000-ஆம் வருடத்தய ஜெயகாந்தனின் அமெரிக்க வருகைக்கு முன்னர் தன் நண்பரின் மகனாகவே என்னை அவர் அறிவார். தனக்கு மீசை அரும்பும் பருவத்தில் தன் பதினேழு வயதில் அவரைத் தேடிச் சென்று சேர்ந்து கொண்ட குப்பனின் மகன். ஜெயகாந்தனை நன்கறிந்த நால்வரில் ஒருவராகச் சொல்லப்படுகிறவரின் மகன். அந்த நண்பரின் மகனுக்கு அவர் பெயர் வைத்திருக்கிறார். நண்பரின் […]
சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா சென்றபோது வாங்கிவந்த குறுந்தகடு. எல்லா டிவிடி ப்ளேயர்களிலும் ஓடும் என்று விற்பனையாளர் சொன்னதை நம்பி வாங்கினேன். ஒளிப்பதிவு வடிவம் என்னுடைய டிவிடி ப்ளேயருக்கு ஏற்புடையது இல்லை என்று இங்கே வந்தவுடன் தெரிந்தது. பின்னர் கணினியில் பார்த்துக் கொள்ளலாம் என மறந்து போனது. வீட்டின் மூலைமுடுக்குகளின் புத்தக ரகசியங்களுக்குள் குறுந்தகடு எங்கேயோ ஒளிந்து கொண்டது. சமீபத்தில் வீட்டுக்கு வண்ணமடிக்கும் வேளை வந்தது. என் வீட்டிலுள்ள கி.ரா எழுத்துகளைப் பிடித்த இன்னொரு வாசகரால் இக்குறுந்தகடு […]