சொன்னதையே திரும்பத் திரும்ப பச்சை மரம் சொல்வதாக அலுத்துக்கொண்ட நிழல் கறுப்பு வா¢களில் மொழிபெயர்ந்து கிடக்கிறது காலடியில். அனைத்தும் சொல்லிவிட்டாலும் சும்மாவாய் இருக்கிறது நீலவானம் என முணுமுணுக்கிறது மரம். ஒன்றுபோல்தான் என்றாலும் தானே முளைக்கும் புல்போல் மனம் என்ன நினைக்காமலா இருக்கிறது? சொல்லி அலுத்தாலும் எல்லாம் புதியனவாய் இல்லாவிடினும் பழையனவற்றை எப்படிச் சொன்னால் நல்லது என நானும்…. எப்படி ஏற்பது என ‘யாரோ’வுமாய்…. —ரமணி
எதுவும் தொலைந்திருக்கவில்லை. எனது நாட்கள் பத்திரமாகவே இருக்கின்றன. காலை மாலை இரவு எனச் சூ¡¢யன் சொல்லி வைத்தபடி நகரும் நேரங்களில் எனக்குக் கெட்டுப்போனது எதுவுமில்லை என்றாலும் செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும் சாயமிழந்த வார்தைகளில் என்னதான் தேடிக்கொண்டிருப்பது? ஆனால் கணேசனுக்கு வந்தது போலக் கண்ணுக்குள் இருள் சேர்த்துத் தேடிய கலர்க்கனவுகள் கிடைக்கவில்லை. செய்தியோ உணர்வோ ஒன்றை ஜாலமாய் ஒளித்து வைத்து தேடிகொள் என்று சொல்லும் கவிதையும் கிடைக்கவில்லை. எண்ணங்கள் அற்றுப்போய் நெற்றியில் சுடர்தாங்கி பேருண்மை தேடலாம் என்றிருந்தால் புற்றிலிருந்து புறப்பட்ட […]
அப்பாவிடம் அடிவாங்கி அழுது விசும்பி சோர்ந்துபோய்க் கண்ணயர்ந்த நாட்களில் எல்லாம் வீட்டை விட்டு ஓடிப்போவதாகவே கனவுகள் வந்திருக்கின்றன. எனினும் பள்ளி நாட்களில் இன்பச்சுற்றுலாவிற்கு ஏங்கிய போதெல்லாம் ஒருபோதும் வாய்த்ததில்லை பயணம். ‘ஒருதலை ராகத்’தில் கிளர்ந்த ரயில் காதலும் அப்பாவின் அதிகாரத்தால் தடம் புரண்டு போயிற்று. அப்பாவின் ‘புதிதான’ பழைய சட்டைகள் அணிந்தே பழகிப் போனதில் நான் நானாகவுமின்றி அப்பாவாகவும் இல்லாது போயிற்று வாழ்க்கைப் பயணமும். __ ரமணி
ஆரம்பம் அங்கு இல்லை எனினும் பயணம் அங்குதான் தொடங்கியது போலிருக்கிறது. அரை இரவின் முழு நிலவாய் தயக்க மேகங்கள் தவிர்த்து சம்மதித்த பின்னிருக்கைப் பயணம் முன்னிறுத்திய காதலின் சேதி இருட்டினுள் பொதிந்து வாகனச் சக்கரத்தோடு சுழன்றது. மௌனமே சங்கீதமாய் வழிந்து சன்னமாய் எழுதிக் கொண்ட சித்திரமாய் நீ… முரணாய் அதிர்ந்து கொண்டிருந்த வண்டியின் லயமாய் நான்… எனப் பயணித்த அந்த வேளையின் ஸ்ருதி கலையாது இறங்கும் எல்லையை நீட்டி ஆட்டமும் அதிர்வுகளுமற்ற வாழ்க்கையின் ஒருமித்த பயணத்தின் ஏக்கம் […]
சுவர்கள் அடக்கின உலகின் மௌனம் சலித்த போது இரும்புக் கம்பிகளில் நெய்த ஜன்னலின் பின் வி¡¢யும் செவ்வக உலகின் முப்பா¢மாணக் கோணல் இயக்கங்கள் காண ஏங்கும் சின்னக் குழந்தைக்கு உயர உபயம் தரும் பாத்திரப் படியாய் இருந்திடச் சம்மதம்தான்! கோதண்ட ராமர் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் உள் தேடும் பொருளின் செந்தூரம் கலந்த பொழுதின் மயக்கத்தில் குட்டிப் பாவாடையும் நீண்ட மௌனமுமாய்ப் பொருந்தின குழந்தைக்கு முதுகு கொடுக்கும் கல் யானையாய்ச் சமைந்திடவும் சம்மதம்தான்! அல்லது பின்னாளில் வாழ்க்கைப் […]
எதுவும் புதிதல்ல. சூ¡¢யன் சொடுக்கும் காலச் சுழற்சியில் பழையன எல்லாம் புதிதாய்த் திரும்பும். பெருவெளியில் பொதிந்த வேதமும் நாதமும் கழிக்க முடியாத பழையன தானே! கழிதல் என்பது கணிதத்தின் சாயல். காலக் கணக்கில் மனிதன் கழிவதும் மனிதக் கணக்கில் காலம் கழிவதும் பழையன அன்றிப் புதியன அல்ல. நீயும் நானும் காலத்தின் குழந்தைகள் தொன்மையின் தன்மையில் விளைந்த விருட்சங்கள். ஞாபகப் புதர்களில் மறைந்ததாய்த் தோன்றி மீண்டும் துளிர்த்த பழைய உறவுகள். புதிதாய் எதுவும் வருவது இல்லை வருவது […]