இந்தியாவுக்கு விஜயம் செய்யும் மேலை நாட்டு உயர் அதிகாரிகள் பாடும் பல்லவிகள் உடைந்து போன பழைய ரிக்கார்டு போல அலுப்பூட்டுபவை. முதலில் இந்தியர்களின் ஆங்கில அறிவை புகழ்வார்கள். அடுத்தபடி இந்தியா உருவாக்கும் ஏராளமான விஞ்ஞான மற்றும் பொறியியல் பட்டதாரிகள் பற்றி ஓஹோ என்று புகழ்வார்கள். அடுத்தபடி இந்தியாவில் தொழில் ஆரம்பிக்க போவதாகவும் பல ஆயிர இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு என்பார்கள். பிறகு, மேலை நாட்டில் படித்த இந்தியர் ஒருவரை மேலாளராக அறிமுகப் படுத்திவிட்டு விமானம் பிடித்து அவர்கள் […]
அமெரிக்காவைப் பிடிக்கவில்லை என்றால், உலகெங்கிலும் சில விஷயங்களைச் செய்கிறார்கள். அங்கிள் சாமின் உருவத்தை, அமெரிக்கக் கொடியைக் கொளுத்துவார்கள். அல்லது கோக், மெக்டானல்டு (Coke, MacDonalds) மற்றும் பெப்ஸி (Pepsi) போன்ற அமெரிக்க வர்த்தகக் குறிகளின் (brands) பெரிய வடிவத்தை எரிக்கிறார்கள். அமெரிக்கா என்றவுடன் சட்டென்று அதன் கொடியைத் தவிர எது நினைவுக்கு வருகிறது? இன்று, நைக்கி, ஆப்பிள், கூகிள், ஃபேஸ்புக், (Nike, Apple, Google, Facebook) போன்ற பேர்கள் உடனே நினைவுக்கு வருகின்றது. ஹாலிவுட் திரைப்படங்களும் இந்த […]
பொதுவாக இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்டுரைகள் இந்தத் துறையைப் பற்றிய நல்முகத்தைப் பற்றி பேசுகின்றன. இல்லையேல், கட்டமைப்பு வளர்ச்சிப முன்னேற்றத்தில் உள்ள தடைகளைப் பற்றி அலசுகின்றன. ஆனால், இந்திய தேர்தல் காலப் பிரச்னைகள் ஏனோ நல்முகம் மற்றும் இப்பண்டிதர்கள் சொல்லும் கட்டமைப்பு வளர்ச்சி முட்டுக்கட்டைகள் பற்றி அதிகம் கவலைப் படுவதாகத் தெரிவதில்லை. எப்படி தேர்தலுக்கு ஒரு அணுகுமுறை, மற்ற சமயங்களில் இன்னொரு அணுகுமுறை சாத்தியம்? அலசப்படுவதோ ஒரே அம்சம் – இந்தியப் பொருளாதாரம். என் பார்வையில் […]