மலைக் காடொன்றின் மத்தியில் தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில் ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி நீ காதலைச் சொன்ன தருணம் மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக இருந்தது சின்ன மேசையருகே முழந்தாளிட்டு நாமருந்திய தேன்பானம் நீ தயாரித்தது சூடுமற்ற குளிருமற்ற இதமான காலநிலையில் நாம் நடந்துவரச் சென்ற அன்று நீ மழை வருமா […]
குறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் […]
மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு மலட்டு வேப்ப மரத்திடம் நீவியழித்திடவியலா நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும் நீயொரு மண்பொம்மை உனது கண் பூச்சி செவி நத்தை கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் உன்னிடமும் வேம்பிடமும் இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன திசைகளின் காற்று விருட்சத்துக்குள் சுழல்கிறது தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம் கதை […]
– ஏ.ஜி. அத்தார் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே […]
சந்திப்பதற்கான ப்ரியம் பச்சிலைகளிலாலான கிளியொன்றின் அசைவிலிருந்து ஆரம்பிக்கிறது உன்னிடம் பகரக் காத்திருக்கும் சொற்களையெல்லாம் தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக் கிளி ஒரு வாழைமரத்தைப் பிரதிபலிக்கிறது நீ பரிசளித்த அக் கிளி சிறகுகள் சுற்றிக் கட்டப்பட்ட அதற்குக் கனவுகளில்லை கிளையில்லை ; ஆகாயமில்லை ஒரு கூண்டு கூட இல்லை நீ கவனித்திருக்கிறாயா விரல்களை அசைத்தசைத்து நான் ஏன் ஒற்றைப் பாடலை இசைக்கிறேனென உனது கவனத்திற்கும் அப்பாலான எனது கனவிற்குள் நீயறியாதபடி இருக்கிறது […]
நீங்கள் ஒருவரைக் கொலை செய்ய விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள்தான் கொன்றீர்களென்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவேண்டும் ஆனால் உங்களுக்குத் தண்டனை கிடைக்காது. உடனே காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்துவிடுங்கள். காவல்துறையெனும் போர்வையில் உங்கள் நண்பரையோ, எதிரியையோ விரோதத்துக்காகவோ, இலாபத்துக்காகவோ உங்களால் கொன்றுவிடுவது இலகு. தண்டனையைப் பற்றி ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பின், உங்களுக்குப் பிடித்த இடத்தைச் சொல்லி அங்கு உங்களால் மாறிக் கொள்ளலாம். அல்லது வேறு இடத்துக்கு மாறிக் கொள்வதற்காக வேண்டியே […]
அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும் காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுவும் கூட காவல்துறையின் கடமையே. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கொரு அநீதி நிகழுமிடத்து காவல்துறையை நாடுகின்றனர். தனக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்கின்றனர். […]
மான்கள் துள்ளும் அவ் வனத்தில் செங்குருவிக்கென இருந்ததோர் மரம் தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம் செங்குருவிக்குப் பிடித்தமானது அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம் சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில் குளத்தில் விட்டு வரும் செங்குருவி கிளையில் அமர்ந்திருக்கும் தன் ஒற்றைக் கண்ணால் பார்க்கும் உதிர்ந்த மயிலிறகு சொன்ன கதைகளையெல்லாம் கேட்டுக் கேட்டுச் சலித்திருக்கும் செங்குருவி வானவில் விம்பம் காட்டும் தெளிந்த தடாகத்தைத் தன் பச்சை […]
வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் […]
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல் மறைந்து கொண்டது. அதற்குள்ளும் சும்மா இருக்காமல், எலும்பை அரித்து அரித்து, முட்டைக் கோது போல ஆகும் வரை எந்தவித வலியையும் கூடக் காட்டவில்லை. பிறகு, அவருக்கு வலிக்க ஆரம்பித்த பிறகுதான் தாங்க முடியாமல் பல் […]