காலத்தின் கொலைகாரன்

வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென புதிதாக விழுந்திருக்கிறது ஐங்கூர் பழுத்த இலை சிவப்புக் கலந்த நிறமதற்கு உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில் சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும் எப்படிப் பூத்ததுவோ பசுமையெரிந்த செடிகளுக்கிடையில் எதற்கும் வாடிடா மலரொன்று அன்றியும் எந்தக் கனிக்குள் இருக்கின்றது அடுத்த மரத்துக்கான விதை…
‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’

‘சிதைவுகளோ’டு’தேம்பிஅழாதேபாப்பா’

'அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை…

ஒற்றைச் சுவடு

    ஒளி பட்டுத் தெறிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி சுமந்துவரும் விம்பங்கள் பற்றி மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும் சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன   தரை,சுவர்,தூண்,கூரையெனப் பார்த்திருக்கும் அனைத்தும் வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின் உணர்வுகளையும் அத்தனை ரகசியங்களையும் அறிந்தே இருப்பினும் வாய்…

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்

இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்…

வெள்ளி வீதி – (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை)

வெள்ளி வீதி - (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை) கலாநிதி அப்துல் எய்த் தாவூது தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை அவள் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தாள். வீடு அடர்ந்த இருளில் மூழ்கிப் போயிருந்தது. அவளது கணவன் கடைத் திண்ணையிலிருந்து…
‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்

‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்

விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு…

‘தலைப்பற்ற தாய்நிலம்’ தொகுப்பு வெளியீடு

கவிஞர் ஃபஹீமா ஜஹானும், நானும் இணைந்து மொழிபெயர்த்த கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் 'தலைப்பற்ற தாய்நிலம்' எனும் சிங்களக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல், இவ் வருடத்தின் முதலாவது தொகுப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். எழுநா, நிகரி பதிப்பகங்களின்…

துயர் விழுங்கிப் பறத்தல்

    பறந்திடப் பல திசைகளிருந்தனவெனினும் அப் பேரண்டத்திடம் துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ சௌபாக்கியங்கள் நிறைந்த வழியொன்றைக் காட்டிடவெனவோ கரங்களெதுவுமிருக்கவில்லை   ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி ஒவ்வொரு பொழுதும் காற்று ரணமாய்க் கிழிக்கையில் மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல தன்…

நிழற்படங்கள்

நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர் 'என்னடா இது?' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார். 'பொண்ணு வீட்டுக்கும்…

சொல்லித் தீராத சங்கிலி

    எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று வர்ணத் திரைச்சீலைக்கப்பால் சமையலறையில் உறைகிறது வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள் யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு ஏறிச் செல்லப் பாதங்களில்லை   கூடத்தில் வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று காலணி…