தேவ வனங்களின் வண்ணங்களில் தோய்த்து மொழிகளையொன்றாக்கி வரைந்திட்ட ஓவியத்துக்குக் கண்களற்றுப் போயிற்று காலம் நகரும் கணங்களின் ஓசையைக் கேட்கக் காதுகளற்றுப் போயிற்று காணச் சகித்திடா அவலட்சணத்தை தன்னுள் கொண்டது நவீனத்துக்குள் புதைந்தது புதிதாக மின்னக் கூடுமென்ற நம்பிக்கையோடு யாரும் காணாச் சித்திரத்தின் உதடுகளில் வண்ணங்கள் முணுமுணுத்துக் கண்களைத் தேடிற்று எங்கும் தன் விம்பங்களைப் பொருத்தியபடி திசைகள் தோறும் ஓடியது உயிரற்ற ஓவியம் எனது விழிகளை உருவிக்கொண்டு – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
அஸீஸ் நேஸின் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார். அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான […]
சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ எதுவோ நகரும் இக் கணத்தில் வரையப்பட்ட மண்டையோட்டின் சாயலில் காண்கிறேன் என்னை வளைந்து நெளிந்து செல்லும் இப் பாதையொரு முடிவிலி இரு மருங்குப் புதர்களிலிருந்தும் வெளிப்பட்டிருக்கும் புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய் புதையுண்ட மனித உயிர்கள் காலக் கண்ணாடியை விட்டும் இரசம் உருள்கிறது அதில் தென்பட்ட விம்பங்கள்தான் புதையுண்டு போயினவோ வேர்களில் சிக்கியிருக்கும் உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும் உறிஞ்செடுத்த விருட்சங்கள் எவ்விசை கேட்டு வளரும் விதியெழுதும் பேனா எக் கணத்தில் முறிந்திடுமோ […]
– கெரபொத்தா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் […]
அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி வெளியே தென்படாதது எங்கு, எப்பகுதியலது தேடினாலும் தென்படாதது அலங்காரங்களற்ற விழிகளில் இருளை விடவும் அனேகமானவை வெளிச்சத்தில் மறைந்துபோகும் தென்படாமலேயே – இஸுரு சாமர சோமவீர தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும் பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும் இறப்பர் விலை அதிகரித்த போதும் நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென உணர்கிறது இதயம் எப்போதும் அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில் பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால் இரு பாதங்களையும் வைத்தபடி மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின் உரிமை எமக்கில்லை […]
தோட்டத்துக் காவல்காரன் நித்திரையிலயர்ந்த கணமொன்றில் தனித்துவிழும் ஒற்றை இலை விருட்சத்தின் செய்தியொன்றை வேருக்கு எடுத்துவரும் மௌனத்திலும் தனிமையிலும் மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில் வந்தமர்ந்து காத்திருக்கிறான் இறப்பைக் கொண்டுவரும் கடவுளின் கூற்றுவன் நிலவுருகி நிலத்தில் விழட்டுமெனச் சபித்து விருட்சத்தை எரித்துவிடுகிறேன் மழை நனைத்த எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும் இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது ஈரத்தில் தோய்ந்த ஏதோவொரு அழைப்பின் குரல் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
அன்றைய வைகறையிலாவது ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென படிப்படியாயிறங்கி வருகிறாள் சர்வாதிகார நிலத்து ராசாவின் அப்பாவி இளவரசி அதே நிலா, அதே குளம், அதே அன்னம், அதே பூங்காவனம், அதே செயற்கை வசந்தம் அதுவாகவே அனைத்தும் எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை நெகிழ்ச்சி மிக்கதொரு நேசத் தீண்டலை அவள் எதிர்பார்த்திருந்தாள் அலையடிக்கும் சமுத்திரத்தில் பாதங்கள் நனைத்தபடி வழியும் இருளைக் காணும் விடுதலையை ஆவலுற்றிருந்தாள் காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா மாய உடலையொன்றையும் […]
உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண் அவளது இரு புறமும் சிறு குழந்தைகளிரண்டு கீழே முற்புதர்கள் கற்சிதறல்கள் நாகம், விரியன், மலைப்பாம்புகள் நிறைந்திருக்கும் பாதாளம் அகன்ற வாயைத் திறந்துகொண்டு அவளது தலைக்கு மேலே இரவின் கனத்த இருட்டு ஊளையிடும் மழையும் கோடை இடியும் வெற்றியுடன் ஒன்றிணைந்து ஏற்றி விட்டவர் எவரோ இவளை இந்த மா மலை மீது மெதுவாகக் காலடியெடுத்து வைத்தபடி கீழ் விழிகளால் இருபுறமும் பார்த்தபடி அவளைக் கைவிட்டு அவர்களெல்லோரும் […]
தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும் இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி என்னை சிறையிலிட்டுக் கொண்டேன் வெளியேற முடியா வளி அறை முழுதும் நிரம்பி சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில் மூடியிருந்த யன்னலின் கதவுகளைத்தட்டித் தட்டி நீரின் ரேகைகளை வழியவிட்டது மழை – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை