ருத்ரா இ.பரமசிவன் அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக என்னால் முடிந்தது……. தென்னை மரங்கள் தலை சிலுப்பும் அந்த சின்னத்தீவில் எறும்புகளுக்கு கூட நோவும் என்று மயில் பீலிகள் கொண்டு செய்யப்பட துடைப்பம் கொண்டு கூட்டப்படும் புத்த விகாரைகள் அன்பை ஒலிக்கும் அந்த பூமியில் தமிழ் மொழி எலும்புக்குப்பைகளாய் எருவாகிப்போனதற்கு என்னால் முடிந்தது ….. இங்கே காலி டப்பாக்கள் தட்டி கொட்டி விடுதலை கீதம் என்று வீண் ஒலிகளை கிளப்பிக்கொண்டு கிடக்கையில் என்னால் முடிந்தது ….. தேர்தல் கால […]
(உலக நாயகன் கமல் அவர்களின் பிறந்ததின வாழ்த்துக்கவிதை) அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று வெள்ளை மனத்துடன் ஒரு பாற்கடலே அறுபதுகளில் அலையடித்து வந்து அறுபது ஆண்டுகள் காணாமல் போயின. எத்தனை பாத்திரங்கள்? நடிப்பை நிரப்பி தளும்ப தளும்ப தந்தார். குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதிலும் குன்றில் இட்ட விளக்காக சுடர்ந்தவர். அபிராமியை நாடி நரம்புகளுக்குள் ஊற்றிக்கொண்டு குளித்தவர். அறுத்து ஒட்டிய முகநரம்புகளின் அஷ்டகோணல்களில் ஆயுதம் தாங்க வேண்டிய போரைக்கூட “அன்பே சிவம்” ஆக்கியவர். பம்பாயின் தூசி […]
புலிநகக்கொன்றை கரையெல்லாம்பூத்திருக்க உறுமல் ஒன்று கேட்குதையா! உள்ளெல்லாம் கிடு கிடுக்க. எக்கர் ஞாழல் அடர்ந்த சோலை அலையொடு சேர்ந்து அழுதே அரற்ற நாணல் கீற்றும் பச்சைத்தீயாய் நாடியெல்லாம் பற்றி எரிக்குதே. பொருள் வயின் செல்கிறேன் என கடுஞ்சுரம் ஏகிவிட்டாய்..இங்கு குருகு கூட பறைச்சிறகை படபடத்து துடி துடித்துக்காட்டுதையா. உள்ளே நில நடுக்கம் தவிடு பொடி ஆக்கியதில் நான் எங்கே? என் உடல் எங்கே? என் உறுப்புகளும் கழன்றனவே! இதழ் குவிக்கும் ஒரு பக்கம் சொல் அங்கே […]
==ருத்ரா கோப்பைக்கவிஞனென கொச்சைப்படுத்துவார் கொச்சைப்படுத்திக்கொள்ளட்டும். இவர் கோப்பைக்குள் ஏழுகடலுண்டு. எழுத்துக்கள் எழுந்துவந்தால் அத்தனையும் சுநாமிகளே அதர்மக் கரையுடைக்கும் ஆவேச அலைகள் தான். துலாபாரத்தின் “துடிக்கும் ரத்தம் பேசட்டும்” இன்னும் இந்த தேசத்தின் செங்கொடிகளில் நரம்போட்டங்களை காட்டுகின்றன. தத்துவம் என்பது தனியாக இல்லை. வீடு வரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ? இந்த இரண்டு வரிகளில் மனிதனின் தேடல் பற்றிய கேள்வியின் கூர்மை நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. பிரமனையும் படைக்கும் பிரமனே கவிஞன். […]
வெள்ளித்திவலைகளை தின்னத் திரியும் கடற் குருகுகளே! கொஞ்சம் உங்கள் பசியலைகளின் படுதாக்களை சுருட்டி வைத்து விட்டு அந்த வெள்ளிக்கொலுசுகளில் கேட்கும் ஏக்கத்தை உற்றுக்கேளுங்கள். பசிபிக் மங்கையின் பில்லியன் ஆண்டுக்கனவின் குரல் இது. நீர்ப்பிழம்புகளின் பிரளயங்களை நெளிந்து தாண்டிய மானிடப்பரிணாமம் கொண்டுவந்த சேதி என்ன? ஓ! பறவைகளே கூரிய அலகுகள் எனும் கேள்விகள் கொண்டு கொத்தி கொத்தி என்ன தேடுகிறீர்கள்? இந்த மானிடம் வெளிச்சமா? வெளிச்சம் மறைக்கும் நிழலா? நிழலில் ஒதுங்கத்தான் மனிதன் கடவுளைக் கண்டெடுத்தான். மனித வெளிச்சத்தில் […]
கதழ்பரி கலிமா அலரிதூஉய் ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும் முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும் இன்னிய பலவின் முள்பசுங்காய் மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும். நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும் ஓதையுண்பினும் ஓவா உறுபசி உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும். நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர் தடுக்கும் மறிக்கும் எவன் கொல் செயினே. பெரும்பணைத் தோளின் கடுப்ப விரையும் துப்புநிலை அறியும் அதிர்கலிப் பொறிமா. துவள்படும் நெஞ்சின் என் பொங்குதிரை ஈண்டு அடு கிளர் அகலத்து அவன் உள் உள் தைக்கும் […]
காத்து காத்து கல் மீது உட்கார்ந்தேன். எப்போது வருவாய்? காலம் நீண்டது. சுருண்டது. நெளிந்தது வளைந்தது.. பாம்பை பார்த்தவனுக்கு கயிறு கூட பாம்பு தான். பாம்பையே பார்த்தறியாதவனுக்கு பாம்பை கயிறு என்று கையில் எடுப்பான். நீ எத்தனையோ முறை என்னிடம் பேசியிருக்கிறாய். கண்களை வீசியிருக்கிறாய். அந்த ஒரு பார்வையில் வந்த ஒரு சொல் இப்போது வரை காத்திருப்பு எனும் மலைப்பாம்பாய் என் உடல் சுற்றிக்கொண்டிருக்கிறது. அது முறுக்கினாலும் இன்பம். திருக்கினாலும் இன்பம். நீ விழுங்கும் வரை […]
ருத்ரா சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம் தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும். “பூச்சாண்டியிடம் பிடிச்சுக்குடுத்திடுவேன் ஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம். இவன் சாப்பிட்டுருவான் நீ போ.. பூதம் போய்ட்டான்..நீ சாப்பிடு.. சாப்பிட்டேனா அந்த நிலாவெ புடிச்சு தாரேன். உனக்கு வேண்டாமா அந்த நாய் வருது பாரு..அதுக்கு குடுத்துருவேன்… தாயின் அன்பு பசியை போக்க இப்படி ஆரம்பித்த போதும் குழந்தையின் இயற்கையான ஞானத்தின் மீது அவளது செயற்கையான அம்புகளே பாய்ந்தன. வில்லின் […]
ருத்ரா சிலருக்கு ஆழ்கடல் முத்து. பலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள். வாளின் காயம் ஒன்றுமில்லை. வாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும். பேசவேண்டும் என்று மூளை சமுத்திரத்தில் இறங்குமுன்னமேயே ஒரு பெரிய சுநாமியாய் வந்த வார்த்தையில் மூளைக்கபாலமே மண் மூடிப்போகிறது. மனிதன் ஏன் இப்படி கனமான கற்களைத்தூக்கி தூக்கி என் மீது எறிகிறான். கடவுளுக்கு இன்னும் புரியவில்லை. “சஹஸ்ரநாமத்தை” அவனுக்கு எப்படித்தான் புரிய வைப்பது? நமக்கு இன்னும் புரியவில்லை. வானம் வாய்பிளந்து கற்பலகையில் சொன்னது என்றான் மோசஸ். […]
ருத்ரா இ.பரமசிவன் குப்பென்று வியர்த்தது. அப்போது தான் போட்ட நறுமண முகப்பவுடர் வியர்வையோடு ஒரு மணத்தில் ஈரப்படுத்தியது கன்னத்தை. யாரோ பின்னாலேயே வருகிறான். அருகே நெருங்கி விட்டான். என் கழுத்தின் பூமயிர்களை வருடிக்கொண்டே இருப்பது போல் பிரமை. என் கூந்தலில் இருந்த குண்டு மல்லிகைப்பூ ஒவ்வொன்றும் குண்டு விழுந்தது போல் குலுங்கி குலுங்கி விழுந்து அந்த நிசப்தத்தின் குடலை உருவி உருவி கிழித்தது. கண்ணாடியின் ரசம்பூசிய பகுதியை வைத்தே முன்னால் பிம்பத்தின் அழகை ரசித்து உறிஞ்சிவிடும் கண்கள் […]