மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்

This entry is part 21 of 21 in the series 19 அக்டோபர் 2014

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் – சில சேர்க்கைகளுடன் – என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். வழக்கம் போல் இச்செய்தியை வெளியிட வேண்டுகிறேன். நன்றி. அல்லாஹாபாத்தில் உள்ள Cyberwit.net  பதிகப்பகம் இதனை வெளியிடப் போகிறது. இதன் தலைப்பு GOODBYE TO VOILENCE  என்பதாகும். (Click to enlarge the image) […]

ஆத்ம கீதங்கள் -1 ஆத்மாவின் உரைமொழி

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

கவிக்குயில் எலிஸபெத் பிரௌனிங். [1806 – 1861] சி. ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் ஆங்கிலப் பாக்களைத் தமிழாக்கம் செய்து வரும் நான் இடைவெளியில் நிறுத்தி, புதிதாக “ஆத்ம கீதங்கள்” என்னும் தலைப்பில் பிரிட்டிஷ் கவிக்குயில் எலிஸபெத் பிரௌனிங்கின் கவிதை மலர்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளிக்க விழைகிறேன். காதல் நாற்பது என்னும் அவரது தமிழாக்கக் கவிதைகள் பழைய திண்ணை.காமில் முன்பு வந்துள்ளன. எலிஸபெத் பிரௌனிங் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்தில் (1819-1901) வெற்றிகரமாக வாழ்ந்து பெரும்புகழ் பெற்ற […]

சென்னையில் ஒரு சின்ன வீடு

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 2002 – லண்டன் “இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம் காயத்திரியை மிகவும் கடினபார்வையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். “சில மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்கும் தங்களின் பாதுகாப்புக்கும் எந்தப் பொய்களையும் சொல்வார்கள். வறுமையான நாடுகளில் இது சகஜம். நாகரீகமான ஆங்கில நாட்டிலும் இப்படிப் பொய் சொல்கிறாளே………….இவள் இந்தப் பொய்களை ஏன் சொல்கிறாள்?” காயத்திரியின் மனதில் பல கேள்விகள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. திருமதி […]

நடிகர் சிவகுமார் உரை: வாழ்க்கை ஒரு வானவில் – கருத்துரை

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

குமரி எஸ். நீலகண்டன் ஈரோடு புத்தக கண்காட்சி எப்போதும் நடிகர் சிவகுமாரின் அபாரமான உரை வீச்சிற்காக தனது வாசகர்களுடன் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும். அதை ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் பெரும்பாலும் விஜய் டிவியில் தீபாவளி திருநாளன்று மக்கள் ஆவலுடன் கண்டு மகிழ்வர். இந்த வருட புத்தக கண்காட்சியில் சிவகுமார் ஆற்றிய உரையின் தலைப்பு வாழ்க்கை ஒரு வானவில். சமீபத்தில் அதன் ஒளிப் பதிவினை கண்டு களித்தேன். சிவகுமாரின் இலக்கியப் பேச்சை காண்பதும் கேட்பதும் எல்லோருக்கும் குறிப்பாக […]

கண்ணதாசன் அலை

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

==ருத்ரா கோப்பைக்கவிஞனென கொச்சைப்படுத்துவார் கொச்சைப்படுத்திக்கொள்ளட்டும். இவர் கோப்பைக்குள் ஏழுகடலுண்டு. எழுத்துக்கள் எழுந்துவந்தால் அத்தனையும் சுநாமிகளே அதர்மக் கரையுடைக்கும் ஆவேச அலைகள் தான். துலாபாரத்தின் “துடிக்கும் ரத்தம் பேசட்டும்” இன்னும் இந்த தேசத்தின் செங்கொடிகளில் நரம்போட்டங்களை காட்டுகின்றன. தத்துவம் என்பது தனியாக இல்லை. வீடு வரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ? இந்த இரண்டு வரிகளில் மனிதனின் தேடல் பற்றிய‌ கேள்வியின் கூர்மை நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. பிரமனையும் படைக்கும் பிரமனே கவிஞன். […]

ஊமை மரணம்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

சொற்கள் தேவை இல்லை இனி மௌனங்களை பேச… காதுகளை நீ அடைத்துக் கொண்டாய் நாக்கினை நான் அறுத்து கொண்டேன்… சொற்கள் செவி பறைக் கிழிக்க காதுகளையும் அறுத்துக் கொண்டேன் நான்… கண் அசைவில் மொழி பகிரவும் நீ விரும்பவில்லை விழிகளை துளைத்தெடுத்தேன் எட்டி உதைக்கும் உன் கால்களைக் கண்டேன் என்னை நானே நுடமாக்கினேன் ஊமையாய் , செவிடராய், குருடராய் முடமாய் அசைவற்று நான் நிற்கிறேன் மனம் மட்டும் மரணிக்கவில்லை… – தினேசுவரி, மலேசியா

என்ன செய்யலாம் தமிழ்நாட்டை :)

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

புனைப்பெயரில். கருணாநிதி, கருணாநிதி , கருணாநிதி என்று சொல்லி சொல்லியே, காட்டிக் காட்டியே , தமிழகத்தை இன்னொரு கும்பல் நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்துனை நாள் இது தொடரும்,. சாராய ஜேப்பியார் கல்வித் தந்தை காமராஜர் போலானது, ஏ சி சண்முகம், வேலூர் விஸ்வநாதன், ஜகத்ரட்சகன், திருநாவுக்கரசு(ர்) , குப.கிருஷ்ணன், என்று நீண்டு கொண்டே போகும் கூட்டம் என்ன கருணாந்தி கும்பலா? இன்று கொழுத்த ராஜராஜ சோழன் வாரிசு போல் வாழும் மன்னார்குடி கும்பல் கருணாநிதி கூட்டமா? […]

முதல் சம்பளம்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

தாரமங்கலம் வளவன் சண்முகத்திற்கு அன்று பள்ளி விடுமுறை. தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, மாரியம்மாவை கூட்டி வர அம்மா சொல்லி இருந்தது ஞாபகம் வர, தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சைக்கிளை நிறுத்தி விட்டு, மாரியம்மாவின் குடிசை அருகில் சென்ற சண்முகம், அந்த மண் சுவரின் மேலே மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த அந்த நாகப் பாம்பை பார்த்து நடுங்கிப் போனான். “ ஐயோ.. பாம்பு.. பாம்பு..” என்று கத்தினான். அதைக் கேட்டு பக்கத்து ரைஸ் மில்லில் நெல் […]

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 26ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு : 2014

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 26ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு : 2014 பரிசு பெற்றோர் : * நாவல்: தறிநாடா – சுப்ரபாரதிமணியன் கறுப்பர் நகரம்- கரன் கார்க்கி * சிறுகதை: ஜெயந்தி சங்கர் கதைகள் –ஜெயந்தி சங்கர் எங்கள் கண்மாயும் ஒரு நாள் மறுகால் போகும்- இரா.கதைபித்தன் * ஆய்வு : தமிழகத் தத்துவம் உலகாயுதம்-கி.முப்பால் மணி துரத்தப்படும் மனிதர்கள் –ம.இராதாகிருஷ்ணன் * கட்டுரை : பாரதி […]

ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் மாத இதழ்

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் மாத இதழ் இதோ உங்களுக்காக!!! கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 730க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot ஹாங்காங்கில் வாழும் தமிழர்களில் இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி. சித்ரா சிவகுமார்