Articles Posted by the Author:

 • கரியமிலப்பூக்கள்

  கரியமிலப்பூக்கள்

  அமிலம் மற்றும் கரிப்புத் தன்மை கொண்டவையாகவே இருந்து விடுகின்றன சில நிஜங்கள் மறுக்கப்படுகிறது இனிப்பின் இயல்பு மறந்தும் கூட இறுக்கப்பட்ட மன இயந்திரத்தின் அழுத்தக் கோட்பாடுகள் வேகமேற்று .. அனல்வாயின் கொதிக்கும் தங்கக் குழம்பின் சிதறிய பிரள்கள் மலர்ந்து விடுகின்றன நட்சதிரப்பூக்களாய் … சூடு தணிக்கும் பணியென தண்ணீர் ஊற்றப்படுகையில் குளிர்ந்தும் இறுகியும் கிடந்தன கரியமிலப்பூக்கள் ஷம்மி முத்துவேல் …


 • அவள் ….

  அவள் ….

  கருநிற மேகமொன்று சற்று வெளிறிப் போயிருந்தது அவளது பார்வை கலைந்து போனதில் நிலைத்து மேகத்திரையில் காற்றின் அலைகள் பிய்த்து போட்டன கற்பனைகளை மீண்டும் ஒன்று கூடிற்று கலைந்து போனவை பார்வையின் உஷ்ணம் தாங்காது கோர்த்து வைத்தவை காணாமல் போக கண்ணீர் வடித்தது வானம் , அவள் பார்வையில் பட்டபடி இடியாகவும் மின்னலாகவும் உருமாற்றம் பெற்றன குரோதம் கொப்பளித்த கணங்கள் சலனங்கள் ஏதுமற்று மீண்டும் மீண்டும் வெறித்தபடி பார்த்துக் கொண்டேயிருக்கின்றன அவளிரு விழிகள் ஷம்மி முத்துவேல்


 • குயவனின் மண் பாண்டம்

  குயவனின் மண் பாண்டம்

  சுற்றி வரும் சக்கரத்தின் மையப்புள்ளியில் வீற்றிருக்கிறேன் நான் சற்றுப் பதமாகவும் கொஞ்சம் இருகலாகவும் எந்த உருவமுமற்றதோர் நிலையில் ஏகாந்தம் துணையாய்க் கொண்டு சற்றுப் பொறுத்து வந்த ஓர் முழு  வட்ட சுழற்சியில் மெல்ல நிலை பிறழா வண்ணம் எழுந்து ஓரமாய்ச் சாய்கிறேன்.. அருகிலேயே வளைந்து நெளிந்து சற்றே அகன்றபடி சாய்மானமாக … வியாபித்தே இருக்கிறேன் கொஞ்சம் பொறுத்தே அப்புறப்படுத்தப்பட்ட அப் பாண்டத்தின் எங்கோவோர் மூலையில் “நான்” கரைந்தோ… இல்லை முற்றிலுமோ … …. முற்றிலுமாக அழித்து போவேனா […]


 • வினா ….

  வினா ….

  இருளை உள்ளடக்கியே பரவிக்கொண்டிருக்கின்றன வெளிச்சக் கீற்றுக்கள் எங்கும் துளை போட இயலாமல் காற்றுவெளியில் இறுகி கோளங்களாய் உருண்டு வீசப்படாத எரிபந்துகளாய் அந்தக் கோள்கள்… வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ திசை எங்கிலும் விரவிக் கொண்டே தனித்தொரு பாதையமைத்து எதிலும் படாமல் விலகியே செல்லும் என்றும் விடை தெரிவதே இல்லை சில கேள்விகளுக்கு மட்டும் ஷம்மி முத்துவேல்


 • முதுகெலும்பா விவசாயம் ?

  முதுகெலும்பா விவசாயம் ?

  நல்லா செழித்து வளர்ந்துடுச்சு இந்தத் தலவாசல் வேப்ப மரம் .. போன வருஷம் மழை இல்லாமக் காஞ்சு கிடந்துச்சு இது தான் போக்கிடம் எனக்கும் மேக்காலவளவு  குப்புசாமிக்கும் … மோட்டுவளைய பாத்துகிட்டு எவ்ளோ நேரம்தான் கட்டயக் கிடத்துறது ? ஆடுகன்னுகளப் பட்டில அடைச்சதுக்கப்பறம் வூடு தாவாரம் இறங்கிப்  போச்சு .. இனி  ஓடு மேஞ்சென்ன ஆகப் போகுது ? அந்த தாழ்வாரத்துல கொறஞ்சது எழுவது பேர் உக்காந்து சாப்பிட்டது கண்ணுக்குள்ள நெனப்பா வருது இருவத்தஞ்சு படி அரிசி போட்டு […]


 • நிழலின் படங்கள்…

  எங்கிருந்தோ கூவுகிறது தனித்த அந்திமப்பறவை ஒன்று அலறல்களடக்கி மெல்லிய  அனத்தல்கள் மட்டுமே கூவல்களாக அதன் சப்தங்கள் நடுநிசியில் உயிரில் பாய்ந்து ஊடுருவி சிலிர்த்து எழும்பின ரோமகால்கள் சொந்தங்களையிழந்த தாக்கம் என்றோ தொட்டுச் சென்ற மிச்சமிருக்கும் ரவையின் வடு .. ஒப்புக்கொடுத்து மீண்ட மரணம் ரத்தசகதியில் கிடந்த அப்பாவின் சடலம் கோரமாய் சிதைக்கப்பட்ட தம்பியின் முகம் அராஜகத்தின் எல்லைகளில் தீவிரவாதம் எல்லாம் ஒருங்கே தோன்ற தொலைத்த சுவடுகளில் பாதம் பதித்து  மீண்டும் எழுந்தன மூடி வைத்த நிழற்படங்கள் ஷம்மி […]


 • மௌனம்

  மௌனம்

  மனதோடு மௌனம் பழக்கி பார்க்கிறேன் இருந்தும் முரண்டியது மரண கூச்சல் …. சொடுக்கும் விரல் இடுக்கில் தப்பி தெறிக்கும் ஓசை , ..சொல்லாமல் மௌனம் கலைக்கும் அழைப்பிதழ்… சுயம் அடிபடும் வேளைகளில் ரௌதரம் பழகவில்லை மௌனம் பழக்கி கொள்கிறேன் வெளியிட விரும்பா வார்த்தைகளை நஞ்சு தோய்த்து மௌனத்தில் சமைக்கிறேன் ஓசைகள் ஓங்கி ஒலிக்கும் போது மௌனங்கள் மெல்ல இரை கொள்ளும் ….. எக்காளமிடும் பார்வைகள் , அனல் தெறிக்கும் வார்த்தைகள், அனைத்து முயற்சிகளுக்கும் மௌனமே உரையானது … […]


 • தக திமி தா

  தக திமி தா

  பொய்மைகள் திரை கட்டி உடல் மறைத்த கூடு சட்டமிட்ட மனமெனும் பெட்டியினுள் ஓர் உக்கிர நடனம் ஊழித்தாண்டவம் தீப்பொறி கிளப்ப உணர்வுகள் கொண்டு தீட்டிய கூரிய போர்வாள் சிறிதும் அயர்வின்றி சுழற்றப்பட இரத்தக்களரியானது நெஞ்சம் முழுவதும் காயங்கள் வெளித் தெரியாதிருக்க உலர்ந்து வறண்ட உதடுகளில் புன்னகை சாயம் அதிலும் தெறிக்கும் சிவப்பாய் குருதி வர்ணம் அனல்களில் ஆகுதி கொடுக்கப்பட சாம்பலானது பிண்டமெனும் மெய்


 • இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்

  இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்

  இருள் போர்வைகளின் முடிச்சுக்களிறுகி சிக்கலாகுகையில் சுவாசமோர் விசையில் மென்காற்றாகவோ புயல்மழையாகவோ ஏன் பெருமூச்சாகவும் இருத்தல் கூடும் .   ஒரு கயிற்றின் வழியில் இரு முனைகளாக வழிந்தோடுமவை வெவ்வேறு கோணங்கள் தீண்டி ஒரு மையப்புள்ளியில் ஒன்றுபட இரு எல்லைகளில் உருட்டப்பட்ட புள்ளிகளாக மீளவும் சிக்கல்கள் பிரிக்கப்படாமல் அவள் மற்றும் அவன் ….   -ஷம்மி முத்துவேல்  


 • சிதறல்

  சிதறல்

    தேடுதல் எளிதாக இல்லை  தொலைத்த நானும் தொலைந்து போன நீயும் தனித் தனியாக தேடும் பொழுது எட்டநின்று பார்த்தது காதல் …. களித்த காலம் கழிந்து போனதில் எச்ச விகுதிகளில் தொக்கி நிற்கிறது காலம் மற்றும் நான் தூர்ந்து போன கனவுகள் இன்று சக்கரை பூச்சுடன் தொலைந்து போன புன்னகை உதட்டளவில் பூக்கின்றது சிதறிப் போன கண்ணாடி கனவுகளில் யாருக்கும் காயம் இல்லை உடலளவில் ….