இரண்டு வருடங்கள், அஞ்ஞாத வாசம் புரிந்தாலும், தனது இடத்தை யாராலும் நிரப்பப்பட முடியாது என்பதை, வைகைப்புயல் வடிவேலு அழுத்தமாக நிரூபித்திருக்கும் படம் ‘தெனாலிராமன்’ எல்லா வயதினரும் வடிவேலு ரசிகர்கள் தான் என்பதைக், குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை அரங்கில் எழுப்பிய சிரிப்பொலி சுட்டிக் காட்டுகிறது. வடிவேலு தன் பிராண்ட் காமெடியை மாற்றாமல், அப்படியே வைத்திருப்பது ஆறுதலான விசயம். அவரது உடல் மொழியும், அங்க சேஷ்டைகளும் அக்மார்க் ரகம். சபாஷ்! எங்கிருந்தய்யா பிடித்திருக்கிறார் அந்த கதை நாயகியை.. உச்ச […]
கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடிய ஒளிப்பதிவு. மெல்ல மனதை வருடும் பின்னணி இசை. பட்டையைக் கிளப்பும் பாடல்கள். மெழுகுச் சிலையாக நாயகி. ஆரோகண பில்ட் அப்பில் அவரோகணமான படம் “ மான் கராத்தே “ சிவகார்த்திகேயன் அவசரப்பட்டிருக்க வேண்டாம். நான்கைந்து படங்களிலேயே சூப்பர் ஸ்டார் ஆகும் அவரது கனவை, அவரது நல விரும்பிகள் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கலாம்.. அப்படி செய்யாததால் மீசையில் ஓட்டாத மண்ணாகப் போயிருக்கிறது இந்தப் படம். ஏ.ஆர். முருகதாஸின் கதை வித்தியாசமானது. படத்தின் ஆரம்ப […]
முழுக்க முழுக்க தாய்லாந்தில்,, ஓடும் ரயிலில், எடுக்கப்பட்ட தமிழ்படம். ஒரு நுனி சீட்டு திரில்லராக வந்திருக்க வேண்டியது.. திரைக்கதை எனும் சிக்னல் கோளாறால் கொஞ்சம் நொண்டுகிறது. தாய்லாந்தின் அழகிய இயற்கை காட்சிகளையும், வானுயர பாரம்பரிய கட்டிடங்களையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது பிரசாத்தின் கேமரா. ஒரு திரில்லருக்கு வேண்டிய தடதடக்கும் இசையை தந்திருக்கிறார் தரன் குமார். பாடல்களும் பரவாயில்லை ரகம். ஆனால் அதிக திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, பட்த்தை காலை வாரி விட்டு விட்டது. ஆனாலும் […]
இலக்கிய வீதி எனும் அமைப்பை, ஐம்பது ஆண்டுகாலமாக நடத்தி வரும் இனியவன், மாதந்தோறும் ஒரு எழுத்தாளரை கவுரவித்து, விருது வழங்கும் விழா ஒன்றினை நடத்தி வருகிறார். ஏப்ரல் மாதம் 4ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாலை சென்னை திநகரில் உள்ள கிருஷ்ண கான சபையின் சிற்றரங்கில், இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் க.ந.சுப்பிரமணியம் பற்றிய சிறப்புரை ஆற்ற வந்திருந்தார் மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி. ‘ மறுவாசிப்பில் க.ந.சு’ என்கிற தலைப்பில் அவர் கொட்டிய […]
தேர்தல் ஜுரம் ஏறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், (துர)அதிருஷ்ட வசமாக நாம் எதிர்பார்க்காத சில அரசியல் ‘ தல ‘ கள், தமிழகத்தின் அரியணையை அலங்கரித்தால் என்னாவாகும் என்று ஒரு ஏடாகூடாமான கற்பனை. இது சிரிப்பு பக்கம்.. நத்திங் சீரியஸ்! பசுமாடும் தீவனமும் போல், இணைபிரியாமல் வாழும் லல்லுவும் ராபரியும் ( இந்திப் பெயர்.. ஆங்கிலம் என நினைத்து அதிக கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் அன்பு வாசகர்களே!), தமிழ்நாட்டின் இணை முதல்வர்களாக பங்கேற்கும் கோலாகல திருவிழா, புளியம்பட்டியில், மாடு […]
இதுவரை ஊழல் எதிர்ப்பாக வந்த படங்களின் கலவையாக வந்திருக்கிறது இந்தப் படம். கொஞ்சம் முருகதாஸின் ரமணாவை எடுத்துக் கொண்டு வசனங்களில் சில சித்து வேலைகளைச் செய்து ஓரளவு பார்க்க கூடிய படமாகத் தந்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் உண்டு. அரவிந்த் சிவசாமி ( ஜெயம் ரவி ) கல்லூரி படிப்பு வரை, வெளியுலகமே தெரியாமல், காந்திய வழியில் வளர்ந்த இளைஞன். வேலை அவனை வெளியில் தூக்கிப் போடுகிறது. நேர்மை, நாணயம், கட்டுப்பாடு, கடமை என்பதெல்லாம் வெறும் […]
புனைக்கதை மன்னன் ரோஆல்ட் டாஹ்ல் { ROALD DAHL}- சிறகு இரவிச்சந்திரன் இதுவரை கேள்விப்படாத, ஆசிரியரின் பெயரில் வெளிவந்த, 20 புனைக்கதைகள் கொண்ட பாக்கெட் பதிப்பு எனக்குக் கிடைத்தது. ஜெ•ப்ரி ஆர்ச்சர், ஹிட்ச்காக் என பயணித்த என் ஆங்கில வாசிப்பு, கொஞ்சம் சந்தேகத்தோடு இதற்குள் நுழைந்தது. ஆனால் நடையின் சரளமும், பாசாங்கில்லாத விவரிப்பும் என்னைக் கட்டிப்போட்டது. ஒவ்வொன்றாக, படிக்க படிக்க, தமிழுக்கு தருவதாக ஒரு எண்ணம் வலுப்பெற்றதன் வடிவமே இந்த முயற்சி. ரொஆல்ட் நார்விஜியன் பெற்றோர்களுக்கு பிறந்தவர். […]
– சிறகு இரவிச்சந்திரன் படித்த, இன்றைய சமுகக் கட்டமைப்பு மேல் கடும் கோபம் கொண்ட ஒரு இளைஞனை, தன் நாச வலைக்குள் இழுக்கிறது ஒரு அயல்நாட்டு தீவிரவாத கும்பல். பணத்தாசை காட்டி, இந்திய வெளியுறவு துறை அமைச்சரைக் கொல்ல ஏவுகிறது. இடையில் சேரும் இன்னொருவனால், தீவிரவாதம் திசை மாறுகிறது. அப்பாவி இளைஞனின் கதி என்ன ஆயிற்று என்பதை இரண்டேகால் மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள். சொல்ல வந்த விசயம் உன்னதமானது தான்.. ஆனால் சொன்ன விதம்தான் அரைவேக்காடாக இருக்கிறது. […]
– சிறகு இரவிச்சந்திரன் எதிர்மறையான குணங்கள் கொண்ட இருவர், ஒரு அறையில் மாட்டிக் கொண்டதால் நிகழும் மோதல்களும், முடிவாக ஏற்படும் காதல் உணர்வுகளுமே கதை.. அஜய் தேனி பக்கத்து கிராமத்துப் பையன். அப்பா இல்லை.. அம்மா வளர்ப்பு. கல்லூரி படிப்பில் தங்கப் பதக்கம்.. வேலை கிடைத்து சென்னைக்கு வரும் அவனுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு படுக்கை அறை வீட்டை ஏற்பாடு செய்து தரும் வீடு தரகர் நாராயணன், அதே குடியிருப்பை, லண்டன் வாழ் அஞ்சலிக்கும் வாடகைக்கு […]
– சிறகு இரவிச்சந்திரன் துப்பறியும் சாம்புவின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். தேவனின் ஆவி சும்மா விடாது கருணாஸை.. ரகளபுரம்.. ரணகளபுரம் ரசிகனுக்கு! ஓரளவு நகைச்சுவை எடுபடக்கூடிய கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குனர் மனோவைப் பாராட்ட வேண்டும். ஓரளவுக்கு காமெடிக்கு உத்திரவாதம் தரக்கூடிய கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, மனோபாலா போன்றோரை சரியான பாத்திரத்தில் லாக் செய்ததும் இயக்குனரின் புத்திசாலித்தனம். காமெடி அம்மா பாத்திரத்தில் உமா பத்மநாபன் வித்தியாச நடிப்பைத் தந்திருக்கிறார். இயக்குனர் கோட்டை விட்டதெல்லாம் நாயகன் தேர்வில் தான். […]