– சிறகு இரவிச்சந்திரன் பலமுறை பார்த்து சலித்த பாத்திரத்தில், தனுஷ். புதுத் தென்றலாக, நஸ்ரியா. மகுடம் பறி போன ராஜாவாக, இயக்குனர் சற்குணம். நமுட்டுச் சிரிப்பு கூட வராத, நய்யாண்டி. நாற்பது வயதாகும் மூத்த பிள்ளை பரஞ்சோதி (ஸ்ரீமன் ), முப்பத்தெட்டு வயதாகும் இரண்டாவது மகன் பரந்தாமன் ( சத்யன் ), ஆகிய இருவருக்கும், இன்னமும் கல்யாணம் ஆகவில்லையே என்கிற கவலையுடன் இருக்கும் அம்மா ( மீரா கிருஷ்ணன்), குத்துவிளக்கு வியாபாரம் செய்யும் அப்பா ( பிரமிட் […]
சிறகு இரவிச்சந்திரன் முகநூலில் ஒரு தகவல் அனுப்பியிருந்தார் தமிழ் ஸ்டூடியோ அருண். வழக்கமாக அவர் நடத்தும் நிகழ்வுகளுக்கு இப்போதெல்லாம் என்னால் போக முடிவதில்லை. ஒன்று எழும்பூரில் நடத்துவார். இல்லை பெரியார் திடலில் நடத்துவார். இருசக்கர வாகனத்தை, அதிக தூரம் ஓட்டும் வயதை, நான் கடந்து விட்டதால், இப்போதெல்லாம் பேருந்துதான். ஆனால், அதில் பயணப்படும் போது கிடைக்கும் அனுபவ அவஸ்தை, என் போன்ற மூத்த ‘குடி’மகன்களுக்கு சொல்லி மாளாது. இம்முறையும் அசிரத்தையாகத்தான், அருணின் தகவலை ஆராய்ந்தேன். அட! மீண்டும் […]
கட்சி பாகுபாடில்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் நையாண்டி செய்திருக்கும் வசனகர்த்தா மணிவண்ணனுக்கு பாராட்டுகள். வருடங்கள் கடந்தாலும், அமாவாசையை அசலாக மீட்டெடுத்திருக்கும் சத்யராஜின் நடிப்பிற்கு வாழ்த்துகள். பழைய கதையில் நவீனத்தை புகுத்தத் தவறிய இயக்கத்திற்கு கண்டனம். கட்டைக் குரலில் கருத்து சொல்லும் சீமானுக்கு கருப்புக் கொடி. சத்யராஜின் திரை ஆளுமை, தொய்வான படத்தை தூக்கி நிறுத்த முயன்று தோற்கிறது. அரங்கு நிறையவில்லை என்றாலும், சமகால அரசியல் கிண்டல்கள் சிரிப்பலைகளை வரவழைக்கின்றன. பெண்களே இறந்தவர்களைச் சுமப்பது; மரங்களைக் காக்க பழங்குடி […]
– சிறகு இரவிச்சந்திரன் நந்தன வருட தொடக்கம், போரூர் பகுதி வாழ் மக்களுக்கு, ஒரு ஆன்மீக ஆரம்பமாக தொடங்கியிருக்கிறது. மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைதூதன் சீரடி சாயிபாபாவின் ஆலயம் ஒன்று மதனந்தபுரம் பகுதியில் ஏப்ரல் 14ம் நாள் தொடங்கப்பட்டது. இத்தனை வருடங்களில் இல்லாத ஒரு முயற்சி, நந்தன வருட ஆரம்பத்தில் நடந்தேறியது பாபாவின் கருணையினால் அல்லாமல் வேறென்ன. ஒரு கோயில் உருவாக பல ஆண்டுகள் முயல வேண்டும் என்பது கற்றவர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மை. இந்த இடத்திற்கான ஒப்புதல் […]
சிறகு இரவி. அடுத்தவனுக்கு நடக்கும் அநியாயத்தைக் கண்டும் காணாமல் போகும் சராசரி மனிதன், அது தனக்கே ஏற்படும்போது, கொதித்தெழும் வழக்கமான கதை. பல நாள் தயாரிப்பில், காரம் குறைந்து போன மசாலா படம். கந்தா ( கரண் ), வரதராசன் ( ராஜேஷ் ) வாத்தியாரால் வளர்க்கப்படும் அனாதை. அவனை பண்போடு வளர்க்கும் அவர், தான் பெற்ற மகனை தத்துக் கொடுத்ததால், ஏற்படும் வினைகள்தான் முழுக்கதையும். கோலாலம்பூரில் இருந்து வரும் கந்தா, வாத்தியாரைக் கண்டெடுக்கும் இடம், ஒரு […]
இரண்டுமே பெண் சாயல் கொண்ட ஆண் வேடம். ஆனால் பிரகாஷ்ராஜின் மகாராணி கொஞ்சம் பச்சை. இருக்குமிடம் அப்படி. அதுவமல்லாமல் வசந்த் ( இயக்குனர் ), அவரை திருநங்கையாகவே காட்டுகிறார். இதில் ஒரு சமூக வக்கிரம் கூட உள்ளது. திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், அதை ஒரு திருநங்கையே ‘மேடமாக’ இருந்து நடத்துவதும் கொஞ்சம் ஓவர்தான். கதை நாயகன் அப்பு (பிரசாந்த்- நல்ல நடிகர், காணாமல் போய் விட்டார்) ஹீரோயிசம் எல்லாம் காட்டவில்லை. தான் விரும்பிய பெண்ணை பணத்தைக் […]
எத்தனுக்கு எத்தன் கதையைப், பரபரவென்று, 143 ந்¢மிடங்களில் சொல்லும் படம். புலனாய்வு துறை வேலை மறுக்கப்பட்டவன், பொய்யாக ஒரு புலனாய்வு குழு அமைத்து, கணக்கில் வராத பணத்தையும், நகைகளையும் அபகரிப்பது ஒன் லைன். ரசிகனை யோசிக்க விடாமல், துரித தூரந்தோ எக்ஸ்பிரஸாக அமைக்கப்பட்ட திரைக்கதை, மெயின் லைன். ‘எ வெட்னஸ்டே’ படத்துக்குப் பிறகு வந்திருக்கும், நீரஜ் பாண்டேயின் படம். எதிர்பார்ப்புக்கு மேலேயே இருப்பது, அவருக்கு பச்சைக் கொடி. அடிதடி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அக்ஷய் குமார், ஏழு பிள்ளைகள் […]
சமீபகால உதயங்களை மனதில் கொண்டு, தினமலரின் அங்காடிதெரு குழு அமைத்துக் கொடுத்த மேடையே ‘குறும்பட மேதை ‘ பட்டத்திற்கான போட்டி. விதையிலிருந்து தோன்றிய விருட்சங்கள் போல், குறும்பட இயக்குனர்களின், ‘பெரும்’ படங்கள் வெற்றி பெறுவதும், வரும்காலத்தில் புதிய சிந்தனைக் களங்களை கட்டி ஆளும் மன்னர்கள், இவர்களே என்பதையும் மனதில் இருத்தி, தினமலர் குழுமம் ஏற்பாடு செய்த விழாவுக்கு ஒரு சுயநலமும் உண்டு. நல்ல படங்கள் வெளிவந்தால், அதை பாராட்டும் பத்திரிக்கையும், ஏற்றம் பெறும் அல்லவா. பத்துக்கு எட்டு […]
இருபது வருடங்களாகப் பிரிந்து கிடக்கும் பெற்றோரைச், சேர்த்து வைக்கும் மகனின் முயற்சியும், அதற்கு உதவும் அவன் காதலியும் தான் கதை. கே. பாலச்சந்தர் தொடங்கி, விசு, மவுலி, வெங்கட், வியட்நாம் வீடு சுந்தரம், வேதம் புதிது கண்ணன் என்று பல ஜாம்பவான்கள், உறவு சிக்கல்களை நாடகமாக்கி, துவைத்து காயப் போட்ட பின், அதையே கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் சந்திரமோகன். முன்னவர்களின் நாடகங்கள், அழுத்தமான காட்சி அமைப்புகளினாலும், ஷார்ப் வசனங்களாலும், நினைவில் அழியா இடத்தைப் பெற்றன. கூடவே நாகேஷ், […]
அமெரிக்கக் கலாச்சாரத்தில், அமெரிக்காவில் வளரும், பிள்ளைகளின் மொழியிலிருந்து, அன்னியப்படும் தமிழைப் பற்றிய, ஒரு உணர்வுப் பூர்வமான குறும்படம். கிருஷ்ணமூர்த்தி குமாரமங்கலம் ராமசாமி, அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் சுவாமிநாதன் வீட்டிற்கு, வரும் காலகட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறது படம். கிராமத்தில் பிறந்து, நகரத்தில் வளர்ந்த ஒரு தென்னிந்தியனின் மன உணர்வோடு இருக்கும் கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்காவின் கலாச்சாரத்தோடு ஒப்ப மறுக்கும் காட்சிகள் மிகவும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தேக ஆரோக்க்¢யம் என, எந்நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் அமெர்¢க்கர்கள், குவளையில்லாத “ ஸ்பவுட்” […]