சிறகு இரவிச்சந்திரன். மெயின் ரோட்டில் இறக்கி விட்டிருந்தார்கள். மோகன் கொஞ்சம் களைப்பாக இருந்தான். இது இந்த மாதத்தில் நான்காவது முறை. இதே ஊர் ;இதே பேருந்து; இதே இடம்.. இங்கிருந்து இரு கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும். மோகனுக்கு இருபத்தி எட்டு வயது. நல்ல களையான முகம். நறுக்கு மீசை.. கொஞ்சம் வெட்டிய உதடுகள் மட்டுமே அவனது அழகைக் கெடுத்தன. அதனால் என்ன பரவாயில்லை. அவன் என்ன சொற்பொழிவா நிகழ்த்தப் போகிறான். வட்டிக்கு பணம் வாங்கியவர்களை தேடி […]
சிறகு இரவிச்சந்திரன் 0 ரோஆல்ட் டாஹ்ல் கதைகளைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். யூ ட்யூபில் தற்செயலாக சந்தானத்திற்கு மத்தியில் விழுந்தவள் தான் மட்டில்டா! 1996ல் ட்ரைஸ்டார் நிறுவனத்தால் எடுக்கப் பட்ட படம். கதை மட்டில்டா எனும் அபூர்வ சக்திகள் கொண்ட குழந்தையைப் பற்றியது. ஆனால் அதை இயக்குனர் டேனி டிவிட்டோ படமாக்கியிருக்கும் விதம் காமெடி கார்னிவல். ஆரம்பக் காட்சியே அமர்க்களம். ஹாரிக்கும் ஸினியாவுக்கு ஒரு மகனுக்குப் பிறக்கிறாள் மட்டில்டா எனும் பெண் குழந்தை. பழைய கார்களுக்கு […]
ராமு என்கிற ராமநாதனுக்கு வயது முப்பத்தி இரண்டு. ஆனால் அவனது உயரம் முப்பதுதான்.. என்ன குழப்புகிறேனா? முப்பது அங்குலமே அவனது உயரம். அவனைப் போன்றோர் ஒன்று சர்க்கஸில் இருக்க வேண்டும் அல்லது சினிமாவிலோ நாடகம் மற்றும் கூத்து போன்ற அமைப்பிலோ இருக்க வேண்டும் எனபது விதி. ஆனால் இதிலும் ராமுவின் வாழ்க்கையில் வித்தியாசம் உண்டு. ராமு எல்லோரையும் போல பள்ளிக்கூடம் போனான். ஆனால் ஆறாம் வகுப்பு தாண்டும் போதே அவனுக்கும் அவனைச் சுற்றி இருந்தோர்க்கும் தெரிந்து விட்டது […]
– கனவால், நிஜ வாழ்வு விபரீதமாகும் ஒருவனின் விசித்திரக் கதை! சித்தார்த் திறமையான நடிகர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஆச்சர்யம் புதுமுகம் தீபா சன்னதி. அழகாகவும் இருக்கிறார். அசத்தலாகவும் நடிக்கிறார். அவர் சமந்தா ஜாடையாக இருப்பதில் ஏதும் உள்குத்து இல்லை என நம்புவோம். சிம்புவுக்குப் பிறகு, எடுப்புப் பல்லோடு வலம் வருகிறார் சித்தார்த். ஒரு சென்டிமெண்டாக இந்தப் படம் வெற்றி பெறும். உடல் மொழி, நடை, வசன உச்சரிப்பு எனப் பிரமாதப்படுத்தி இருக்கிறார் சித்து. […]
அப்பாவுக்கு நில சர்வேயர் வேலை. படித்தது என்னமோ டிப்ளமோ தான்! ஆனால் ஊரில் எல்லோரும் அவரை இஞ்சியர் என்றுதான் கூப்பிடுவார்கள். “ எடே! அது இஞ்சியரும் இல்ல.. மாஞ்சியரும் இல்ல.. இன்ஜினியர்!” “ இந்த பொகை வண்டிய ஓட்டுவாகளே? அவுக மாதிரியா?” “ அடே மாக்கான்! அது இன்ஜின் டைவரு! இவரு இஞ்சியரு “ திருத்தம் சொல்லி அலுத்துப் போய்விட்டார் அப்பா! அப்பாவுக்கு இவனும் அண்ணனுமாக இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் கோபால் அடிக்கடி மாறும் அப்பாவின் […]
அந்த ஊரில் இருந்த ஒரே பள்ளிக்கூடம் அதுதான். அதுவும் இப்போதோ அப்போதோ விழுந்து விடும் நிலையில்தான் இருந்தது. மழை பொய்த்துவிட்ட காலமாகிப்போனதால் இன்னும் ஓரிரண்டு வருடங்களுக்குத் தாங்கும் என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள். பெண்கள் பேச்சு வேறாக இருந்தது. அவர்கள் அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் ஒருவித அச்சத்துடனே அந்தப் பள்ளிக்கூடத்தைப் பார்த்துக் கொண்டு போனார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மாந்தோப்பில் இப்போது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துகொண்டிருப்பவர்கள், பள்ளிக்கூடம் இடிந்து போனால் அந்த இடத்தை தங்கள் விற்பனைக்குத் […]
பரமேஸ்வரன் மத்யமரின் அடையாளம். அவனுக்கு எல்லாமே விட்ட குறை தொட்ட குறைதான். எதிலும் திருப்தி இல்லை. எந்த செயலும் முழுமை அடைந்ததாக அவன் சரித்திரத்தில் இல்லை. படிக்கிற காலத்தில் அவன் கணக்கில் புலி. ஆனால் பள்ளி இறுதி வகுப்பில், அவன் முழுப் பரிட்சை எழுதும்போது, பாழாய் போன டைபாய்டு ஜுரம் வந்து, தேர்வையே கோட்டை விட்டான். அதனால் ஒரு ஆறு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது. நடுவில் சும்மா இருப்பானேன் என்று தட்டச்சு கற்றுக் கொண்டான். ஒரே மாதத்தில் […]
ராகவன் உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தான். “ ஜனனி, வாக்கிங் போயிட்டு வரேன்.” கை வேலையை போட்டு விட்டு ஜனனி ஓடி வந்தாள். எதிரில் நின்று கொண்டாள். ஜனனி என்றைக்கும் போலவே புதுமலர் போல இருந்தாள். அழகாக உடுத்தியிருந்தாள். தலையைப் படிய வாரி இருந்தாள். வில்லாக வளைந்திருந்த புருவங்களுக்கு மேலே அளவான சைசில் சிகப்பு பொட்டு வைத்திருந்தாள். ராகவன் அவளையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். “ பராசக்தி, பராசக்தி “ அவள் வாய் மூன்று முறை உச்சரித்தது. […]
அவளுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் பாத்திமா. ஆனால் அந்தப்பகுதியில் இருக்கும் மக்கள் அவளுக்கு வைத்த பெயர் பஜாரிம்மா. அந்தளவுக்கு சண்டைக்காரி. சண்டைக்காரி என்றவுடன் ஏதோ இரட்டை நாடி சரீரம், கர்ணம் மல்லேஸ்வரி என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். அவள் சரீரம் ஒற்றை நாடிக்கும் குறைவு. ஆனால் குரல் இருக்கிறதே அது எட்டு ஊருக்குக் கேட்கும் மைக்செட் இல்லாமலே. அவள் புருஷன் இப்ராகிம் அவளுக்கு ஒன்றும் சளைத்தவனில்லை. அவனும் சண்டைக்காரன் தான். எதற்கெடுத்தாலும் கத்தியைத் தூக்குபவன். அவன் […]
மாம்பலம் பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் காவலர் குடியிருப்பின் ஓரம், கொஞ்ச தூரம் நடந்தீர்களானால், உங்களுக்கு குப்பண்ணா உணவுக்கூடத்தைப் பார்க்காமல் இருக்கமுடியாது. இப்போது பெரும் வியாபார மையமாக மாறி விட்ட தியாகராய நகரின் பூர்வாசிரமப் பெயர்தான் மாம்பலம். அன்று காலாற கைவீசி நடக்கலாம். இன்று அடிப்பிரதட்சணம் கூட பிரம்மப்பிரயத்தனம்தான். குப்பண்ணா தன் பனிரெண்டாவது வயதில் மதராசுக்கு, அதாவது இன்றைய சென்னைக்கு வந்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அன்றைக்கு ஆந்திராவுடன் இணைத்து தமிழ்நாடு, சென்னை மாகாணம் என்று தான் […]