வல்லிய நரம்பசைவில் சேதமுற்று அழும் பெருங்குரல்-பறையடித்த அதிர்வை உள்வாங்கி புடைக்கும் காயத்தின் கதறல் சுதந்திரத்தைப் பறித்து ஒரு குழலுக்குள் அடிமைப்பட்டு அழும் ஆழம் பெரும் நுகர்தலின் களிப்பில் சாலைக்கரிமக் கரைகளைச் செரித்து மூச்சுக்குழாய் வழி நுரையீரல் ஆலை சென்று முகத்தில் கரிமத்தைப் பூசிக்கொள்கிற நிமிடமென மரணத்தின் ஓலத்தை ஓயாது சுமந்து கொண்டு பயணிக்கிறது காற்று. –சோமா (sgsomu@yahoo.co.in)
நேற்றைய தருணங்கள் வர்ணம் மாற்றி பச்சோந்தியெ விரியும் கடந்து போன நம் வானவில் தருணங்கள். பாசாங்கு நிரம்பிச் செழியும் பிழையில்லா சொற்பூவில் தேன் பருகி மடிந்த முன்னேற்பாடிராத சாவ நேற்றைய கவசத்தை கூர்கல் மண் மோதலில் தொலைக்கச் செய்து புத்தாடை தறித்த பாம்பின் செதில். புரிதலில்லா பசப்பு மொழி வாசத்தில் வெந்து சுருண்ட விட்டில் பூச்சி உறவு. இந்ததருணங்கள காலத்தின் மூச்சைத் தின்று பகிர்ந்து கொண்டநீண்ட ஓர் முத்தத்தின் இறுதியில் சொட்டு நஞ்சின் பாய்ச்சல். அகலவாய் திறந்து […]
தெற்குச் சீமையின் வற்றிப் போன மாரை சப்பிச் சுவைத்து கடித்து சுரக்கும் எச்சிலில் பசியைத் தணித்துக் கொண்ட வரலாற்றை முதுகில் சுமந்து கொண்டு அகதியாய் புலம் பெயர்ந்த நகரமிது. கால்கடுக்க நின்று பட்டன் தைக்கும் பணியாளாக-நிறைமாத கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்தும் வயதிற்கு வந்தத் தங்கையைக் கம்பெனி வேனில் ஏற்றி விட்டு போனவள் போனவளாகத் திரும்ப வேண்டுமெனும் வயிற்று நெருப்பை அணைக்க வழியில்லாதும் சாவை பார்த்துக் கிடக்கும் சீக்காளி அம்மாவிற்கு மருந்து வாங்கக் காசில்லாதும் வாழ வந்த […]
நாய்களிரண்டு கூடி குலாவியிருந்ததன் சாட்சியாய் புதிதாய் பிரசவித்த குட்டி நான்கின் ஊழைக் கதறல் நிழலுக்கும் வாசத்திற்கும் ஒதுங்கும் ஊர்க்குருவிகள் அவ்வப்போது மலம் கழிக்க வந்து போகும் கருத்த பூனையொன்று. போவோர் வருவோரென அத்தனை பேரின் மூத்திரத் துளிகளை உள்வாங்கி செரிக்கும் தளமும் சுவரும் . சிறார்கள் ஆடியும் ஓடியும் ஒளிந்தும் சேர்த்து வைத்த சந்தோசச் சப்தங்கள் உலாவரும் நடுநிசிப் பேய்களின் கூட்ட அரங்கம். துரத்தப்பட்ட அத்தனை அகதிகளின் விலாசத்தை விழுங்கி உயரே நிற்கிறது புதுக்கட்டிடமொன்று- நாளை நான்கு […]
பாட்டன் காலத்தில் ஊரின் மையத்தை தனக்கான இடமாக ஆக்கிரமித்துக் கொண்ட வரலாறில்லாத குதிரைவீரன் இன்றும் முன்கால்கள் தூக்கிய குதிரையின் மீது அமர்ந்திருக்கிறான். கருத்த அவன் தலையை வெள்ளைப்படுத்தும் போட்டியொன்றில் காகமொன்று கண்ணிழந்தும் பருந்தொன்று இறக்கை இழந்தும் அவன் பாதத்தைச் சிவப்புப்படுத்தின. புதிதாய் அரசேற்ற மந்திரிக்கு குலப்பெருமை எழுதவென வீதியெங்கும் அலைந்து திரிந்தவர்கள் குதிரைவீரன் கதை பற்றி பலஆராய்வு நடத்தி சிலபுத்தகம் வரையலாயினர். இல்லாத வெற்றிகளை அவர்களின் பக்கங்கள் நிரப்பிக்கொண்டிருந்தன அவரவர் கற்பனைக்கும் வெகுமதிக்கும் தக்கவாறு. பாலத்தின் நிழல் […]
குருதி குடித்து பசி போக்கும் மானிட மந்தைக்கு போதனை செய்ய மனமிறங்கி தூதனான் தேவன். மந்தைக்கு ஏற்ற முகமூடி பொருத்தி சாயத் தொட்டியில் மூழ்கி எழுந்து நிர்வாணம் தொலைத்தவனென வீதியில் உலா வந்தான். சிலவீதியில் இராமனாக அடுத்தவீதியில் முல்லாவாக மறுவீதியில் கர்த்தனாக இந்தவீதியில் புத்தனாக- போதித்த வார்த்தைகளை சாயச்சாத்தான் தின்று விழுங்குயது. சாயத்தைத் துடைத்தெறிந்து மலரொன்றை கையிலேந்தி சிறுமி வேடம் தறித்து தூதனாகப் புறப்பட்டான் சாத்தானின் கோட்டைக்கு. -சோமா
ஆயிரமாயிரம் உயிர்களைக் கொன்று குவித்த கர்வத்தை குடையாய்க் கொண்ட இரதமொன்றை பூட்டி நான்கு மாடவீதியில் உலா வந்தேன். தெருவின் முனையில் இடைமறித்த ஒருவன் தன்னை புத்தனென சுய அறிமுகம் செய்து கொண்டு இரதத்தில் ஏறிக்கொண்டான். யுத்த களத்தின் மொத்தச் செந்நீர் நாற்றமும் என் உடலில் அப்பியிருப்பதாய்ச் சொல்லி அவன் வெண் ஆடை துறந்து என் மேனியில் படிந்திருந்த கறையைத் துடைத்து தனதாக்கினான். ஒரு சேவகனின் செயலெனக் கருதி அமைதி காத்தேன். அன்பு ஆசையுறாமை ஜீவகாருண்யமென ஒரு நீண்ட […]
ஐம்புலனை அடக்கிச் செறித்த அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தின் சோம்பலைத் தின்று கனவு முளைத்தது. பெருமான் பெருமாள் முல்லா இயேசு புத்தன் வந்து அமர்ந்தனர் என் ஞான முற்றத்திற்கு. அவர்களுக்கான தேநீர் தயாரிப்பின் மும்முரத்தில் தொலைவில் இருந்த கண்ணாடி போதிதர்மனை உள்வாங்கியிருந்தது. தேநீர் புசித்து புன்முறுவல் சிந்தி புறப்படலாயினர் நானும் உடன் புறப்பட்டேன் அவர்கள் வீடு நோக்கி. பெருமான் வீட்டுக் கோபுரநிழல் நந்திவாகனம் நவக்கிரகம் காலபைரவர் அறுபத்து மூவர் அகிலாண்டேஸ்வரி கடந்து மூலவரைத் தேடிக் கர்ப்பகிரகத்தில் காலடி வைக்கையில் […]
சக்கர ஓட்டத்தின் எதிர் திசையில் தனக்கான அழுத்தங்களைப் பதித்து கோடுகளில் கலயங்களின் தலைவிதி எழுதினான் குயவன். பின்பு நிலவின் இரவொன்றில் காந்தர்வக் கண்ணன்களை ராதைகளோடு உலவ விட்டான் உலக வீதிகளின் ஆடை விலக்கி. குயவனுள் எழுந்த செறித்த வண்ணங்களை அப்பிக் கொண்டு கண்ணன்கள் தங்கள் கோகுலங்களில் ராதைகளைச் சிறை வைத்தனர். அவனின் வியர்வையை உள்ளிளுத்து வட்டம் தறித்த கலயக்கோடுகள் கண்ணன்களின் வயிறுகளுக்குப் பொங்கிப் போட அனுப்பப்பட்டன. கோகுலக்களிப்பின் மிகுதியில் மஞ்சள் சிவப்பு பச்சையென ராட்சசக் கண்ணன்கள் ஒன்று […]
செல்வக்குடியில் செம்மைப் பண்பில் மனைவியின் அன்பில் ஊறித் திளைக்கும் ஆண்மை உருவங்கள் வீதியில் உலவுகின்றன இராமனாக இராவணனாக கோவலன்களாக. ஆண்மையை சுகிக்கத் துடிக்கும் சூர்ப்பனை மாதவிகள் வீசும் தூண்டில்களின் காமப் புழுக்களுக்கு இரைகளாக கோவல மீன்களும் தூண்டில்களை விழுங்கும் சுறா இராமன்களை வீழ்த்த சகோதர இராவணன்களும் களமிறங்கியதில் கண்ணகிகளும் சீதைகளும் உயிர்ப்புப் பெறுகிறார்கள். சூர்ப்பனை மாதவிகளின் ஆட்டுவிப்பிலும் கண்ணகி சீதைகளின் சாபத்திலும் கொல்லப்பட்டவரென நீள்கிறது கோவல இராவணன்களின் பட்டியல். கண்ணகி சீதைகளின் அகோரப் பசிகளுக்கு இரைகளாக புதிய […]