author

தூங்காத கண்ணொன்று……

This entry is part 18 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

இறங்க வேண்டிய இடம் கடந்து வெகுதூரம் வந்தாயிற்று; தோளில் வழிந்து தூங்குபவனை உதறிவிட்டு எப்படி எழுந்து போவது?   யுகங்களின் தூக்கத்தை ஒரே நாளில் தூங்குகிறானா? தூங்கியே துக்கங்களைக் கடந்து விடுகிற முயற்சியா? அமைதியாய் ஆழ்ந்து உறங்குகிற சூழல் அமையவே இல்லையா இதுவரை…   வீடென்பது இவனுக்கு போர்க்களமோ; அல்லது வீடற்ற பிளாட்பார வாசியா? இரவுகளில் தூங்க முடியாமல் உறவுச் சிக்கல்களில் உழல்பவனா; அல்லது பிரிவெனும் பெருந்துயரில் பிதற்றி அலைபவனா?   பேருந்தில் ஏறியதும் பேச்சுக் கொடுத்தான்; […]

பால்ய கர்ப்பங்கள்

This entry is part 7 of 27 in the series 30 ஜூன் 2013

பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ அம்மா என்று சத்தம் வரவும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அவசரமாய் அந்த அறைக்கு ஓடினார். சுந்தரத்தாய்க்கு எதுவும் புரியவில்லை. அவள் உடம்பு சுகமில்லாததால் மெடிக்கல் லீவு போட்டு வீட்டிலிருந்தவள், இன்றைக்கு அவளுடைய பாடத்திற்கு பரீட்சை என்பதால் சிரமத்துடனேயே பள்ளிக்கு வந்திருந்தாள். அவள் பள்ளிக்குள் அனுமதிக்கப் படவில்லை. மாணவர்கள் எழுதி […]

குங்குமச்சிமிழ்

This entry is part 4 of 47 in the series 31 ஜூலை 2011

  தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில் அவளுடன் சக்திகணபதி என்றொருவர் தொலைபேசியில் பேசினார். அவளின் கவிதை பற்றி அவளுடன் விவாதிக்க விரும்புவதாகவும் முகவரி கொடுத்தால் வீட்டிற்கே நேரில் வருவதாகவும் சொன்னார். இவளுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. இதுவரைக்கும் இவளின் கவிதை பற்றி கடிதமோ ஒரு பாராட்டோ வந்ததில்லை. இந்த தமிழ்ச் சமூகம் கவிதை பற்றிய புரிதல் எதுவுமில்லாமல் வறட்சியாக இருப்பதாக நினைத்துக் […]

சோ.சுப்புராஜ் கவிதைகள்

This entry is part 30 of 38 in the series 10 ஜூலை 2011

காத்திருப்பு வெகு நேரமாயிற்று விமானம் தரை இறங்கி…… விடைபெற்றுப் போயினர் உடன் பயணித்தவர்கள் யாவரும்; வெறிச்சோடிக் கிடக்கிறது விமான நிலையம்; அடுத்த விமானத்திற்கு இன்னும் அவகாசமிருப்பதால்…… அலைபாயும் கண்களுடன் காத்திருக்கிறார் அழைத்துப் போக யாரும் வராத அவஸ்தைகளை விழிகளில் தேக்கி   ஒரு நிகழ்ச்சியும்  நெகிழ்ச்சியும்   மெட்ரிக்குலேசன் பள்ளி மேடையில் ஆண்டுவிழா நிகழ்ச்சிகள்! ஆங்கிலத்தில் நாடகங்கள் போட்டார்கள்; ஹிந்தி கிளாசிக்குகளைப் பாடினார்கள்; தமிழில் மட்டும் குத்துப் பாட்டுக்கு ஆடினார்கள் எதுவுமே சகிக்கவில்லை….. ஆனாலும் ரசிக்க முடிந்தது […]

ஓரிடம்நோக்கி…

This entry is part 29 of 38 in the series 10 ஜூலை 2011

 நுழைவதற்குமுன் ஒரு சிறு குறிப்பு:             உங்களுக்கிருக்கும் அனேக முக்கிய வேலைகளை ஒத்திவைத்து விட்டு இந்தக் கதையை வாசிக்க புகுந்ததற்கு அனேக வணக்கங்கள்; இன்று அதிகாலை ஏறக்குறைய ஒரே நேரத்தில் உலகத்தின் பல பகுதிகளிலும் நிகழும் சம்பவங்கள் கீழே விவரிக்கப்பற்றிருக்கின்றன. கதை மாந்தர்கள் யாவரும் அவரவரின் தாய் மொழிகளில் தான் உரையாடிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தக் கதையை எழுதுகிறவனுக்கு அவனுடைய தாய் மொழியே தடுமாற்றமென்பதால் அவனுக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் விவரித்துக் கொண்டு போகிறான் என்பதை மட்டும் மனதில் […]