Articles Posted by the Author:

 • செயப்பாட்டுவினை

  செயப்பாட்டுவினை

      எஸ்.சங்கரநாராயணன்   “ஓடைக்கரைன்னு கேட்டு இறங்கி, அங்கேயிருந்து கால்நடையாக நடக்க வேண்டும். கடைசி பஸ்ல வாங்க. நீங்கமட்டும் தனியா வரணும். வர்றதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.”             “எப்ப வர்றது?”             “வர்ற சனிக்கிழமை வாங்க. நாங்க அங்கதான் இருப்பம்… ஒருத்தருக்கு பூஜை இருக்கு.” ஊருக்கு ஒதுக்குப்புறம். காற்று கிளம்பும்தோறும் ஒரு சாக்கடை நாற்றம் தூக்கலாய் வந்தது. ஓடை வற்றி இப்போது சாக்கடை. கடைசி பஸ். காலியாக இருந்தது. அங்கே கேட்டு இறங்கும்போது […]


 • நஞ்சு

  எஸ்.சங்கரநாராயணன் ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவி ‘அவர்’ வேண்டாம். ‘அவன்’தான். வயசு முப்பது தாண்டியானாலும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தொழில் சொன்னால் டாக்டர். ஆனால் அவன் இடத்தில் அவன் ஒற்றை ஆசாமி. தானே போய் ஸ்டவ் பற்ற வைத்து சிரிஞ்சுக்கு வெந்நீர் சூடு பண்ணி, நோயாளியை சோதித்துப் பார்த்துவிட்டு, மருந்துகள் எழுதி, (லெட்டர் பேட் இல்லை. ரப்பர் ஸ்டாம்புதான்.)  தானே போய் எடுத்துவந்து தருவான். மருந்துக்கும் சேர்த்து பணம் பெற்றுக் […]


 • மோ

  மோ

      எஸ்.சங்கரநாராயணன் • • (வாசக நண்பர் ஒருவர் வேடிக்கை போல, சார், ஒரே எழுத்தைத் தலைப்பாக வைத்து கதை எழுதுவீர்களா, என்று கேள்வி போட்டார். எனக்கு வியப்பாக இருந்தது. அப்படியெல்லாம் அவர் விளையாட்டு காட்டுகிறவர் அல்ல. செய்யலாமே, என்றேன். அவருக்கு உற்சாகம் ஆகிவிட்டது. வா – போ – தா … இப்படி பொருள் பொருந்திய ஒற்றை எழுத்து வார்த்தைகளை வைத்து அல்ல, பொருள் வராத ஒற்றை எழுத்து… என்றார் புன்னகையுடன். அப்படியே செய்யலாம். […]


 • துயரம்

  துயரம்

  எஸ்.சங்கரநாராயணன்   லண்டனில் பனி பெய்ய ஆரம்பித்தால் பகலிலேயே கூட பொழுது மங்கி ஒரு மெழுகு பூசி பழைய சாமான்போல பீங்கான் தன்மையுடன் காண்கிறது. அடிக்கடி துவைத்து நீர்க் காவியேறிய உடை போல. வாணலியில் வெண்ணெய் உருகுவது போல மேகம் உடைந்து திரி திரியாய்க் கொட்டுகிறது. எனக்குத் தெரிந்த நம்மவூர் உதாரணங்கள் இவை. மகள் சத்தியவதியின் பிரசவம் என்று லண்டன் வந்திருந்தேன்.  நானும் இவளும். அவள் பிரசவத்துக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது, டாக்டர் தந்த தேதிப்படி. […]


 • குரல்

  குரல்

      குணாவுக்கு பட்டணம் பற்றிய கனவுகள் இருந்தன. பிறந்ததில் இருந்து இப்போது பிளஸ் ட்டூ முடிக்கும் வரை அவன் அந்த ஊரை விட்டு வெளியே போனதே இல்லை. ஊருக்குப் போகிறோம் என்று ஆனதும், தான் இருக்கும் ஊரைப் பற்றி, ஊராடா இது, இங்க மனுசன் இருப்பானா, என்று எரிச்சல் வந்தது. அவனுடன் மரக் கட்டையை மட்டை என்ற பாவனையுடன், பந்து? ரப்பர் பந்துதான்… கிரிக்கெட் விளையாடும் பெரிய பிள்ளைகள் எல்லாரும் பஸ்சேறிப் போய் வேறு ஊர் […]


 • ராமலிங்கம்

  ராமலிங்கம்

      எஸ்.சங்கரநாராயணன் •• எனது அருமை நண்பரும், இனிய வாசகரும், பதிப்பாளருமான திரு ராமலிங்கம் (நிவேதிதா பதிப்பகம்) கடந்த 29 ஆகஸ்டு 2021 அன்று இயற்கை எய்தினார். கல்லீரல் புற்றுநோய் எனக் கேள்வியுறுகிறேன். எனது கட்டுரைத் தொகுதி ‘உலகெனும் வகுப்பறை’ நூலை அவர் உற்சாகமாக வெளியிட்டு, அதற்கு ஒரு வெளியீட்டு விழா வைத்து, அன்றைக்கு இரவு விழாவுக்கு வந்த அனைவருக்குமே இரவு விருந்தளித்து மகிழ்ந்ததை என்னால் எப்படி மறக்க முடியும்? அன்னாருக்கு நான் எப்படி கைம்மாறு […]


 • பெரிய கழுகின் நிழல்

  பெரிய கழுகின் நிழல்

  எஸ்.சங்கரநாராயணன் அத்தனை பெரிய கழுகை அவள், சுசிலா பார்த்தது இல்லை. நல்லா ஆள் உயரம் இருந்தது அது.  நகவெட்டி வைத்து வெட்டி யெறிய வேண்டும் போல அத்தனை பெரிய நீண்ட உட்சுருண்ட, கண்ணாடித் துண்டு போன்ற பளபள நகங்கள். ஒரு மாதிரி கருப்பும் சாம்பலுமான நிறம். சற்று முதிர்வான சிறகுகள் பழுப்பு தந்திருக்கக் கூடும். ஒடுங்கிய தலைக்குக் கீழ் ஜாடி போல பருமன். அதன் அலகு தனி எடுப்பாய் நீட்டி முன்பக்கம் வளைந்திருந்தது. மூக்கு நுனியே நகம் […]


 • ஒடுக்கம்

  ஒடுக்கம்

      எஸ்.சங்கரநாராயணன் பசியை வெல்வதே முதல் கட்டப் பிரச்னையாக இருந்தது. நிஜத்தில் பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் மொத்த வாழ்க்கையில் பிரச்னையே இராது. இந்த குரோதம், ஆத்திரம், இயலாமை போன்ற கெட்ட குணங்களே இல்லாது போயிருக்கும் என்று தோன்றியது அவருக்கு. கையில் ஒரு குச்சி தயார் செய்து கொண்டிருந்தார். எதிர்ப்படும் நாய்களைச் சமாளிக்க வேண்டி யிருந்தது. பெரும்பாலான நாய்கள் திருடனை விட்டு விடுகின்றன. கண்டு கொள்வதே யில்லை. அவை அப்பாவிகளை நோக்கி வெறுப்புக் குரல் எடுக்கின்றன. […]


 • இன்னொரு புளிய மரத்தின் கதை

  இன்னொரு புளிய மரத்தின் கதை

      எஸ்.சங்கரநாராயணன்   ஊரின் தெக்கத்திக் கரையில் வயல்கள் துவங்கின. வடக்கே ஏற ஏற மேடாகி ஊர்க் கட்டடங்கள் எழும்பி நின்றன. துவக்கப் பள்ளி. உரக் கிடங்கு. பஞ்சாயத்து அலுவலகம். அடுத்து எட்டாவது வரை நடுநிலைப் பள்ளி. உயர்நிலைப் பள்ளி ஊரில் இல்லை. அதற்கு பக்கத்து ஊர் போய் பிள்ளைகள் வாசித்தார்கள். குளுகுளுவென்ற காற்றுடன் டப்பா பேருந்து ஊருக்குள் காலை மாலை வந்தது. கிளம்புமுன் அதை தம் பிடித்து தள்ளிவிட வேண்டும்… பிரி பிரியாய்த் தொங்கும் […]


 • அடிவாரமும் மலையுச்சியும்

  எஸ்.சங்கரநாராயணன் முதலில் சிறு வேலை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தான். பெரிய பொறுப்புகளை நம்பிக் கொடுக்காத வேலை. ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தால் திறமை பார்த்து காலப்போக்கில் மேலும் அதிகார அளவுகளை அதிகப்படுத்தித் தருவார்கள். அந்நாட்களில் நிறைய ஓய்வு கிடைத்தது. உண்மையில் ஊரைவிட்டு வெளியூர் என்றாலும் இந்த வேலை அமைந்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே. கல்லூரிக் காலத்திலேயே வாசிப்பு ருசி கண்டவன். அப்படியே கதை எழுதவும் வருவான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அவன் கதை எழுத ஆரம்பித்தது குறித்து அவன் அம்மாவுக்குக் […]