பிசாசுகளை பிசாசு என்று சொல்லக்கூடாது நாம் புள்ளியில் மறைந்திருக்கலாம் படைப்பின் சூட்சுமம் மனிதனின் தேடுகையும் மனிதனை தேடுதலும் வித்தியாசப்படலாம் பிசாசு என்று சொல்லாதீர்கள் உக்கிரமாய் உதவலாம் அவை தேடுதலில் நான் பிசாசா என்று என் பிசாசிடம் கேட்கிறேன் அரூபமாய் புள்ளியில் மறைந்து போகிறது வீரியமற்ற கனவின் மிச்சம் போல அது வெட்கவானின் சினறிய பொழுதுகள் வீறிட்டு அலறுகையில் கையில் விளக்கேந்தி புதுச் சொல் தேடுகிறது பிசாசு தன் பெயரை அழகாக்கிக்கொள்ள மிச்சத்தில் உழல்கிறான் மனிதன் தானே பிசாசாய் […]
சு.மு.அகமது முடிவின் ஆரம்பம் அழுகுரல் விசும்பலுடன் ஒரு சகாப்தத்தின் இறுதியை நிச்சயப்படுத்தும் மரணம் என்ற சொல்லுக்கு அருகிலான பயணமும் நிச்சயப்படாத இலக்கு நோக்கின முன்னேறுதலும் சுருங்கின வயிறின் முடிச்சுக்களாய் உயிர்ப்பின் முகவரி தொலைத்து தொலைப்பில் உழலும் அறிமுகம் தேசாந்திரியின் அழுக்குப்பையில் கிடக்கும் கசங்கிய துணிச் சுருளாய் சவக்குழியில் இறக்கப்பட்டு சலனமற்ற முகத்தோடு இறுதி உறக்கம் கலையாத உணர்வுக்கு கனவுகளற்ற புதிய உலகில் பகிர்ந்து கொள்ள ஏதும் உளதோ அமைதியாய் சரியும் மண்ணும் இருளாய் போகும் உலகமுமாய் […]
அதைப் பற்றி அப்பொழுதே எனக்கு தெரிந்து விட்டிருந்தது அனைவரும் அதை ஆமோதிக்கத் தொடங்கியிருந்தார்கள் இடுப்பில் இருக்க மறுத்து நழுவியோடும் கீழாடையாய் மீண்டும் ஏற்றி அந்நிகழ்வுகளை பத்திரப்படுத்தினார்கள் மாந்தர்கள் வல இட உள் வெளி புறமெல்லாம் உறுப்புகள் நீண்ட ஆக்டோபஷாய் அதற்கு உருவமிடத் தொடங்கினார்கள் என் சுற்றியவர்கள் மனனமிட்டுருத்தும் அல்ஜிப்ரா சூத்திரங்களாய் மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி அதனிருத்தல்களை உறுதிசெய்து கொண்டார்கள் பலர் சிலரின் உயிரோரம் அந்நிகழ்வுகள் இடித்ததாயும் சிலருக்கு உயிருக்குப் பதிலாய் அதுவே துடித்ததாயும் ஆளாளுக்கு அளக்கத் […]
பூனைகளைப் பற்றி கவிதை எழுதுபவன் நிறையாத அரங்கத்தின் காலி இருக்கையில் அனந்த சயனத்தில் மனப்பால் புசிக்கிறான் அதீத ஞானம்பெற்றவன் போல் போதியின் நிழலில் நின்று எதேதோ பிதற்றுகிறான் இலையுதிர்த்த விருட்சத்தின் கடைசி இலையை கையிலெடுப்பவன் இயற்கையின் வெறுமையை ரசிக்கிறான் போலப் பொழிதலும் ஆகச் சிறப்பதுமாய் பயணத் தொடர்கையில் மௌனமாய் பொருளுணர கிரகிக்கிறான் கவலையால் நிரம்பியவனின் ஓலம் கவிதையாயின் அவன் கவிஞன் பேத்தலெனின் புத்தி சுவாதீனமற்றவன் தத்துவமெனில் ஞானியாகிறான் ஏதுமற்று போனால்… வெற்றுவெளியில் உலவும் ’வெறுமனா’ய் போவான் அவன்!? […]
ஒரு பறவையின் கடைசி சிறகு இலை உதிர்த்த மரம் சப்தமின்றி மறைந்து போன செப்புக்காசு மணி அற்றுப்போன கால் கொலுசு எதுவாகவும் இருக்கக்கூடும் விடியல் என்பது குஞ்சுப் பறவையின் பிசுபிசுத்த இறகாயும் தளிர் இலை தாங்கிய புது மரமாயும் படபடக்கும் புது பணத்தாளாயும் சிணுங்கும் மணிகளோடு சிலிர்க்க வைக்கும் நாதமாயும் பிரபஞ்சத்தையே ஆட்கொள்ள விழையும் சப்தமற்ற சில்லரைகளாகவும் பரிணமிக்கலாம் இருக்கைகள் காலியாவதில்லை அவை மதிப்பு கூட்டுபவை என்றும் கூடுபவை வசீகரமும் வனப்புமாய் ஆகர்ச்சிப்பவை […]
பாவனைகளும் தோரணைகளும் எங்கோ கண்டதின் சாயலில் வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும் நம் நிழல் போல் சுவர்களை மீறி வரும் ஒலி அறையின் வெக்கையாய் அனல் பரத்தும் நெஞ்சக்கூட்டினுள் உஷ்ணப்பந்தை விழுங்குதல் போல் ஒளிரும் நினைவுகளில் உள்ளக்கிடக்கை விழித்திருக்கும் தன் கண்களை உருட்டியபடி கனல் நீரில் தத்தளிக்கும் துடுப்பற்ற பொத்தல் படகாய் என் அன்னியோன்யத்தில் உலவும் எனக்கே அல்லாத உறவின் முகம் எப்போதுமே கதைத்திருக்கும் தான் கரைந்ததும் கனத்ததுமாய் கண்கள் காணாத முகமற்றவனின் பேச்சொலி செவிகளில் பதியும் […]
சென்னை மழையில் நனைந்த பூனைக்குட்டி பங்களா கேட்டின் முலையில் நடுங்கியபடி ஒண்டிய அதன் தனிமையை குலைத்தபடிக்கு தெருவில் கூடின நாய்கள் ஒற்றை நாயொன்று முன்னிறுத்தப்பட்டு ’உர்’ரென்றது சிலிர்ந்து நின்றதைப்பார்த்து பூனைக்குட்டி சிலிர்ப்பை விடுத்து ஒடுங்கிய விதத்தை ஆக்ரோஷம் விடுத்து நோக்கின ’உர்’ரானவை நான் கடக்கையில் லாவகமாக பூனைக்குட்டியை கையிலெடுத்து பூட்டிய கேட்டினுள் விட கூம்பு போல் உடலை உயர்த்தி ஓடிச்சென்று கூரையில் தங்கியது திரும்புகையில் கால்விரிப்பில் அனந்த சயனத்தில் பூனைக்குட்டியும் […]
வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில் கந்தலாய் அவனது வழித்தடங்கள் ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய் பாவக்கனியின் அழுகல் பிசிறுகள் தொற்றாய் கிருமிகளென வார்தெடுத்த சர்பமொன்று சாத்தானின் நிழலென ஊடுருவி மாயமான மானை விழுங்கி ஏப்பமிடும் எரிமலையின் பொருமலாய் அந்தி சாய்கிற நேரத்தில் எரியும் சிவந்த தழலோடு வாய் பிளந்து அபகரிக்கும் பொசுங்கும் நினைவு -சாம்பலை பொழுது புலராத முன்பனிக்காலத்து மழுங்கின படலங்களினூடே பாய்ந்து பாயும் விண்மினிச்சிதறல்கள் விழியற்றோனின் உதவிக்கம்பாய் நீண்டும் மடங்கியும் […]
ஒரு முறைமையின் உதறலில் எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும் சதைக்கூளங்களை எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த கயமை குடி கொள்ளும் நேசப் பறவைகளின் கூடுகளில் பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி பாசமாய் பாரம் சுமக்கும் சுமைகளை தாங்கிய பாறை மனது கெக்கலித்து புரளும் நினைவில் ஊசலாடியபடி நெஞ்சக்கிடக்கை விண்ணைத் தாண்ட எத்தனிக்கும் மழைத் தவளையின் சாகசத்தோடு துளியென்பது கூழ் பூசின கூட்டின் அடையாளமாய் வீலென்று அலறும் கனத்த மார்பில் அமுது சுமந்தபடி நிழல் பிடிக்க முடியாதவன் சுரக்காத ஊற்றுக்காய் கண்ணி […]
அது ஒரு கனவுப்பொழுது இலைகளின் மீதமர்ந்து தவழ்ந்த காலம் படர் கொடியின் நுனி பிடித்து ஊஞ்சலிட்ட பருவம் கனவுகளடர்ந்த விடியற்காலைப்பொழுதுகளில் விரலிடுக்குகளிலிருந்து வழிந்து புள்ளிகளால் நீட்சியுறும் கோலம்… கோலப்பொடியாய் நானிருந்த தருணம் சலனமற்ற நீரோடையில் வீழ்ந்த கல்லாய் அலை கழிந்த நேரம் மிதிவண்டியின் மிதியடிகள் எனை நிந்தித்த வேளையில் கனவுலகில் விடியலை துரத்திய பொழுதுகள் வெய்யிலில் குடை நனைத்து ஈரமாய் உலவின காலம் கொப்புளங்கள் செருப்பணிந்து தேய்ந்து இரணமான கணங்கள் எல்லா வலிகளும் அற்றுப்போனதாய் நான் உணர்ந்த […]