1. “ நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்துப் போன காலம் உண்டு. நீரை அள்ளி அள்ளி குடித்திருக்கிறோம். நொய்யல் ஆற்று மணலில் அரசியல் கூட்டங்கள் நடப்பது ஒரு சாதாரண நிகழ்வாக இருந்திருக்கிறது. திருப்பூர் மக்கள் உழைப்பிற்குப் பெயர் பெற்றவர்கள். அதுதான் உலக அரங்கில் பனியன் பெருமையை உயர்த்தியது. இன்றைக்கு 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணியைத்தரும் நகரமாக மாறியுள்ளதற்குக் காரணம் அந்த உழைப்புதான். வந்தாரை வாழ வைத்த பூமியாக திருப்பூர் மாறியதற்குக் காரணம் குறுகிய காலத்தில் எந்த வகையான […]