மோனநிலை..:-

ஒருத்திக்கு கிளி பூச்செண்டு இன்னொருத்திக்கு கரும்புவில் மற்றுமொருத்தி காசைக் கொட்டுகிறாள் சிலர் மட்டும் ஆயுதம் தாங்கி. நான் சமையலறைக் கரண்டியுடன் சிலசமயம் லாப்டாப்புடன் எதுவும் சுமக்கா மோனநிலையில் ஏன் எவருமே இல்லை..

கோமாளி ராஜாக்கள்

ராஜாக்களாய்க் கற்பிக்கப்பட்டவர்கள் ராணிகளாய்த் தெரியும் சேடிகளின் கைப்பிடித்து., ரகசியக்காமத்துள் சுற்றி வந்து.. பட்டத்து ராணீக்கள் அடகு நகை மீட்கவோ., அலுவலகத்துக்கோ அழும் பிள்ளைக்கு பால் வாங்கவோ சென்றிருக்கலாம்.. தன் அந்தப்புரத்து ராணிகளைக் கவனிக்க ஏலாமல் யார் யாரின் அந்தப்புரத்துள்ளோ அத்துமீறி நுழைந்து…
மூலக்கூறுக் கோளாறுகள்..:_

மூலக்கூறுக் கோளாறுகள்..:_

ஒன்றறியாமலே ஒன்றின் கால் ஒன்றறியும்.. எண்டோசல்பான் கலந்த கார்பன் ஹைட்ரஜன் மூலக்கூறுக் கோளாறில் விசையுற்றுப் பறக்கும் ஃபோட்டான்கள் மிதக்க உள்நுழைந்த கார்னியா கிரணம் பீடிக்க எண்டார்ஃபின்கள் தடை பிறழ்ந்த உற்பத்தி.. டெசிபல்களும் பிக்சல்களும் மாயக்கண்ணாடிப் பிம்பம் விளைத்த க்ளோனிங்குகள்.. சடை விழுது…

என்ன வாசிப்பது

  கண்களின் வழியோ  கண்ணாடி வழியோ பிரதிபலிக்கிறது நீ வாசிப்பது.... எழுத்துக்களோ., கோப்புக்களோ., அங்கங்களோ., ஆராய்ச்சியோ.. காக்கைக்கால் கோடுகள் உற்சாகம் கிளப்பும் ஒன்றையும்., நெற்றிச் சுருக்கங்கள் பொருளாதார வரைபடங்களையும் கன்னக் குழிவுகள் ஒரு கிளர்த்தும் காமத்தையும் இதழின் இறுக்கங்கள் உள்பூக்கும் பிடிவாதத்தையும்...…