author

பயணங்கள் முடிவதில்லை

This entry is part 13 of 28 in the series 12 ஏப்ரல் 2015

  மனிதர்களுக்கென்ன  ரயிலேறிப் போய்விடுகிறார்கள்    கசிந்த கண்ணீருக்கும்  குலுக்கிய கைகளுக்கும்  மென்தழுவலுக்கும்  மௌன சாட்சியாய்க் கிடக்கும்  நடைமேடையையும்  உயரத் தூண்களையும்  கழிப்பறை வாடை கருதாமல்  பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி  நிற்கும்  பெயர் தெரியா இம்மரத்தையும்  என்ன செய்வது….. -உமாமோகன்

வாய்ப்பினால் ஆனது

This entry is part 4 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

  அச்சத்தின் துளிகளால் எனது பெருங்கடல் தளும்பிக்கொண்டிருக்கிறது. எப்போதும் வறண்டுபோகும் வாய்ப்புடன் அமுதம் ஒரு குட்டையில் .. அமுதம் பருகக்கூடிய வாய்ப்பை அலையாடிக் கொண்டிருக்கும் கட்டுமரத்தின் திரைச் சீலையில் முடிந்திருக்கும் சாவி கிட்டியவுடன் திறப்பேன் என்கிறான் அங்கே தூண்டிலோடு திரியும் கிழவன். எனக்கோ அவன் தனது ஓட்டைக் குவளையில் நிரப்பியது போக மீதமிருப்பது அமுதக்குட்டையின் கானல் நீரே என்றஎண்ணம். கட்டுமரம் அசைந்துகொண்டிருக்கிறது அசைவின்றித் தூண்டிலோடு குந்தியிருக்கிறான் கிழவன் -உமாமோகன்

ரோஜா ரோஜாவல்ல….

This entry is part 13 of 28 in the series 29 ஏப்ரல் 2012

சந்தேகமும் எரிச்சலுமாய்ப் பார்க்கிறான் பூச்செடி விற்பவன்… மஞ்சள்,வெள்ளை, சிவப்பு,மரூன்,ஆரஞ்சு .. இன்னும் பெயர் சொல்லவியலா  நிறச்சாயல்களில்  எதையும் தேர்ந்தெடுக்காது  எதையோ தேடும்  என்னை அவனுக்குப் பிடிக்கவில்லை… “மூணுநாள் கூட வாடாது,…” “கையகலம் பூ….” அவன் அறிமுக இணைப்புகளைக்  கவனியாது , “நா கேட்டது ….லைட் ரோசுப்பா … இவ்ளோ பெருசா பூக்காது… மெல்லிசா…சட்டுன்னு உதிரும்… அந்த வாசனையே இதுல இல்ல்லியே….” வாரந்தோறும்  நான் தரும் மறுப்புகளில்  என் நினைவில் படிந்த  ரோஜாவைத் தேடிக்கொண்டே இருக்கிறான்  அவன்……    […]

தூறலுக்குள் இடி இறக்காதீர்

This entry is part 38 of 44 in the series 22 ஏப்ரல் 2012

-எடுக்கப்படாமல் ஒலித்து நிற்கும் தொலைபேசிமணி… ஏகப்பட்ட கேள்விக்கிளை விரிக்கிறது… அச்சம்,எரிச்சல், ஆவல்…. ஏதோ மீதூர , மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்! அந்த முனையில் , உக்கிரமான வாதம் ஓடிக்கொண்டிருக்கலாம் ! உருக்கமான பிரார்த்தனை பக்கத்தில் நடக்கலாம்.. கடன்காரனோ, அதிகாரியோ, திணறடித்துக் கொண்டிருக்கலாம்… மரணச் சடங்கோ, விபத்தோ,கூட்டமோ, தவிர்க்கவியலா தவிர்ப்பாயிருக்கலாம்! தவறவிட்ட உறக்கம் நேரங்காலமின்றி வாய்த்திருக்கலாம்.-

கொசுக்கள் மழையில் நனைவதில்லை.

This entry is part 8 of 41 in the series 8 ஏப்ரல் 2012

புழுங்கிய நெல்லைத் துழவியபடியும் , கிணற்றுச் சகடையின் சுழற்சிக்கு ஈடாகவும் , வேலிப்படலைக் கட்டியவாறும், கிட்டிச் சட்டத்தோடு ஆடுகளைத் தரதரவென இழுத்தபடியும் , பாளை கிழித்துக் கொண்டும் , வைக்கோல் உதறியபடியும் யாவரையும் வைத்தபடி இருந்த ருக்கு பெரியம்மாவின் வாசாப்புகள் அலைந்துகொண்டே இருக்கின்றன அவள் காலத்துக்குப் பின்னரும் யார் காதிலும் நுழையாமல்… வைக்கோல் உதறியபடியும்  யாவரையும்  வைத்தபடி இருந்த  ருக்கு பெரியம்மாவின்  வாசாப்புகள்  அலைந்துகொண்டே இருக்கின்றன  அவள் காலத்துக்குப்  பின்னரும்  யார் காதிலும் நுழையாமல்…      […]

பதின்பருவம் உறைந்த இடம்

This entry is part 7 of 40 in the series 1 ஏப்ரல் 2012

இயலுமானால் சுவர் அலமாரியின் இரண்டாம் தட்டை இடிக்காமல் விடுங்கள் … உடைந்த மரப்பாச்சி, கறுத்த தாயக்கட்டைகள், தொலைந்த சோழிக்கு மாற்றான புளியங்கொட்டைகள், ஆத்தாவின் சுருக்குப்பை, ஜோடியோ திருகோ தொலைந்த காதணிகள், அருந்த பிளாஸ்டிக் மாலை கோர்க்கும் நரம்பு , கல்யாணமாகிப்போய்விட்ட நிர்மலா தந்துசென்ற கமல் படம் …. எதுவுமே காணாவிடினும் காண்பதுபோல் கண்டுகொள்ளமுடியும் இரண்டாம் தட்டு இருக்குமானால்… உமாமோகன்

பாராட்ட வருகிறார்கள்

This entry is part 30 of 35 in the series 11 மார்ச் 2012

பாராட்ட வருகிறார்கள் அவசரமாய் ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை! சம்பிரதாய வாழ்த்து , அழுத்தும் கைகுலுக்கல், பொய்யெனப் புரியும் புனைந்துரைகள் எல்லாவற்றுக்கும் முகநூலின் ஒற்றை விருப்பச் சொடுக்காக புன்னகைக்கலாமா? பல்….? தலையசைப்பு சம்மதமாகவா ?மறுப்பாகவா? மையமாகவா? கண் பணித்துவிடுமோ… சீரான சுவாசத்தோடு வெற்றுப்பார்வை தோதாகுமா? பெருமிதம்?கூச்சம்? ”எவ்வளவோ பாத்துட்டோம்..? இதற்குத் தானே ஆசைப்பட்டாய்….? எது பொருந்தும்….? அவசரமாய் ஒரு கண்ணாடி , அல்லது ஒத்திகைக்கு ஒரு நல்ல துணை! -உமாமோகன்