author

வைரமணிக் கதைகள் – 10 ஓட்டங்களும் இலக்குகளும்

This entry is part 7 of 14 in the series 5 ஏப்ரல் 2015

மூன்று பேர் மட்டும்தான் உட்கார்ந்திருந்தோம். நான், ஒரு வயது முதிர்ந்த மெடிகல் ரெப்ரஸென்டேடிவ். ஸ்டூலின் மீது உட்கார்ந்திருந்த அட்டெண்டர் பையன். மற்றபடி விஸிட்டர் பெஞ்ச் காலி.   நான் இங்கே வரும்போது மணி பன்னிரண்டரை. அப்போதே மெடிகல் ரெப்ரெஸன்டேடிவ் உட்கார்ந்திருந்தார்.   நுழைகிற சமயத்தில் நாலைந்து நோயாளிகள்தான் இருந்தார்கள். கடைசி நோயாளி டாக்டர் அறைக்குள் நுழையும் போது சரியாக மணி 12.55 ஏறக்குறைய நாற்பது நிமிஷம்.   என் வேலை மணி பார்ப்பதல்ல. ஸர்ஜிகல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், புதிதாக […]

வைரமணிக் கதைகள் – 9 எஸ்கார்ட் (விளிப்பு மாது)

This entry is part 30 of 32 in the series 29 மார்ச் 2015

வையவன் மூன்றாவதாகத்தான் தன் வழக்கை விசாரிக்கப் போகிறார்கள் என்று கேள்விப் பட்டதும், ஆஸ்பத்திரிக் கட்டிலில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் பீமராஜாவைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என்ற அவா மேலிட்டது கோகிலாவுக்கு. “யம்மாடி ரணபத்ரகாளி! ஒனக்கு என்னிக்கு எஸ்கார்ட் வந்தாலும் எனக்கு ஒரு பொழுதுதான்!” என்று அலுத்தபடி தொப்பியை எடுத்துத் தலையைக் கொஞ்சம் காற்றாட விட்டார். கான்ஸ்டபிள் 456. இளைஞன் இன்னும் மீசை முதிரவில்லை. “போலீஸ் கெடுபிடி ரத்தத்திலே ஊற கொஞ்சம் நாளாகும். கல்யாணம் ஆகலே போல […]

வைரமணிக் கதைகள் -8 எதிரி

This entry is part 19 of 28 in the series 22 மார்ச் 2015

விழித்தது விழித்தபடியே கட்டிலில் படுத்திருந்தார் சுகவனம். அவர் அங்கே கிடத்தப் பட்டிருந்தார். மூக்கில் ஒரு ட்யூப். அது வளைந்து நெளிந்து கூடத்தில் எதற்கோ காத்திருப்பது போல் உட்கார்ந்திருந்த உறவினர் நண்பர்கள் மத்தியில் ஓடி மூலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் முடிந்தது.   கூடத்தில் ஐம்பது பேர் உட்காரலாம். பெரிய கூடம். ஆனால் இருபது பேர்தான் உட்கார்ந்தி ருந்தனர். எல்லோரும் கூட்டமாக தியானம் செய்வது மாதிரி அங்கே ஒரு நிசப்தம் நிலவிற்று. இடையிடையே சிலர் எழுந்து போவது வேறு […]

வைரமணிக் கதைகள் -7 என் சின்னக் குருவியின் சங்கீதம்

This entry is part 23 of 25 in the series 15 மார்ச் 2015

வையவன் ஆராவமுதனின் ஆஸ்பத்திரித் தவம் போன வாரமே முடிந்து விட்டது. மயோ கார்டியல் இஸ்கீமியாவில் அவன் மனைவி மல்லிகா ஆறாம் நெம்பர் வார்டில் காலமானது, போன வெள்ளிக்கிழமை. இன்றோடு எட்டு நாள். இனிமேல் அவனுக்கு விடுதலைதான் இந்த ஆஸ்பத்திரியிலிருந்து. இப்படி நிவேதிதா எண்ணியது பிழையாயிற்று. விஸிட்டர்ஸ் பெஞ்சில் அவன் உட்கார்ந்திருந்தான். பேஷண்ட்ஸ் ரிஜிஸ்டர் எழுதிக் கொண்டிருந்த நர்ஸ் நிவேதிதா ஒருமுறை நிமிர்ந்தபோது அதை மனசில் குறித்துக் கொண்டாள். அவன் திரும்பவும் வந்திருக்கிறான். என்ன விஷயம்? இன்னொரு பேஷண்டின் […]

வைரமணிக் கதைகள் -6 ஈரம்

This entry is part 5 of 22 in the series 8 மார்ச் 2015

    கிணறு கூப்பிடுகிறது. ஏர் கூப்பிடுகிறது. பானையில் உறங்கும் வேர்க்கடலை வித்து கூப்பிடுகிறது. எல்லாமே ஒரே கூப்பாடு தான்.   கொல்லையில் பனைமரத்தின் கீழே வேட்டியை வழித்து உட்கார்ந்திருந்த ஆறுமுகம் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நீல வானில் வெள்ளியிலே ஒரு கண் முளைத்த மாதிரி. விடிவெள்ளி தான்.   மழையெல்லாம் வராது என்று கிண்டலாக அது சிரிப்பது போலிருந்தது.   கிணறு, ஏர், வேர்க்கடலை எல்லாக் கூப்பாட்டிற்கும் விடிவெள்ளியின் ஏளனச் சிரிப்பு தான் விடை. அவன் […]

வைரமணிக் கதைகள் -5 இடிதாங்கி

This entry is part 10 of 15 in the series 1 மார்ச் 2015

  கடையை மூடிப் பூட்டை ஆட்டிப் பார்த்து விட்டுச் சாவியை சொக்கேசம் பிள்ளையிடம் ஒப்படைக்கும்போது தான் வானத்தில் முதலாவது இடி முழக்கம் கேட்டது.   துரைசாமி முதலியார் அண்ணாந்து பார்த்தார். மப்பும் மந்தாரமுமாக எந்த நேரத்திலும் வானம் பொத்துக் கொள்ளலாம் என்று பயமுறுத்திற்று.   முதலாளி சொக்கேசம் பிள்ளை மேற்கே போக வேண்டும். குமாஸ்தா துரைசாமி முதலியார் கிழக்கே போக வேண்டும். வீடு அந்தத் திசையில்தான்.   ஆரணி கடைத் தெருவில் எல்லாக் கடைகளும் பூட்டிவிட்டாலும் கடைசியாக […]

வைரமணிக் கதைகள் -4 அழகி வீட்டு நிழல்

This entry is part 15 of 26 in the series 22 பெப்ருவரி 2015

வாரத்தில் ஒருநாள் திருநாகேச்சுரத்துக்கு வந்துவிட வேண்டும் பாலாமணிக்கு. இந்த நாள், இன்ன மணி, இந்தக் கிழமை என்றில்லை. ஓய்கிற நாள். ஓய்கிற வேளை. இன்று ஓய்ந்தது. இரவு எட்டு மணிக்குப் புறப்பட்டாள். டவுன் பஸ்ஸில்தான். கும்பகோணத்திலிருந்து திருநாகேச்சுரத்திற்கு டவுன் பஸ்ஸாய்ப் பறக்கிறது. மணிக்கூண்டு, மார்க்கெட், மாமாங்கக்குளம் என்று மெஸ்ஸுக்கு காய்கறியோ, மளிகைச் சாமானோ வாங்க பாலாமணி அலைகிற போதெல்லாம் திருநாகேச்சுரம் போகும் பஸ் கண்ணில் தட்டுப்படும். ‘இன்னிக்கு ஓயல்லேம்மா. நாளைக்கு வந்துடறேன்’ என்று மனசுள் பாலாம்பிகையிடம் சொல்லிக் […]

வைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…

This entry is part 14 of 23 in the series 15 பெப்ருவரி 2015

  கதவு திறக்கவில்லை. நவநீதன் ஐந்து நிமிஷமாகத் தட்டிக் கொண்டிருந்தான். ஒழிவின்றியல்ல; விட்டுவிட்டு. பக்கத்தில் தான் ரயில்வே ஸ்டேஷன். ஒரு மின்சார ரயில் அவன் தட்டத் தொடங்கியதிலிருந்து இதற்குள் வந்து நின்று, போய்விட்டது. நவநீதன் கதவைத் தட்டிக் கொண்டு நிற்பதை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஓரிருவர் திரும்பிக் கவனித்தனர். பிளாட்பாரக் கோடிக்கும் பத்தடி தாழ்விலிருந்த அந்த வீதிக்கும் மத்தியில் இரும்புக் கம்பி வேலி நின்றது. அந்தப் பக்கம் பிளாட்பார விளக்கு. இந்தப் பக்கம் தெரு விளக்கு. அவன் வீட்டுக் […]

வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை

This entry is part 5 of 24 in the series 8 பெப்ருவரி 2015

      தம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால் தான் எழுந்து உள்ளே போவான்.   இப்போது திடீரென்று காட்டுக் கொல்லைகளில் யானைக் கூட்டம் திரிகிறது என்று பரவியிருக்கிற பீதிக்காக படுக்கையை மாற்றச் சொன்னால் அவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது.   முதலில் அந்த யோசனையைச் சொன்னது வள்ளி அல்ல.  கட்டிய கணவன் எந்த யோசனையைக் கேட்டுக் கொள்வான், கேட்க மாட்டான் என்று திருமணமான ஒரே வருஷத்தில் புரிந்து […]

வைரமணிக் கதைகள் – 1 கற்பூரம் மணக்கும் காடுகள்

This entry is part 4 of 17 in the series 1 பெப்ருவரி 2015

    [வையவன்]   கதவின் உள்பூட்டில் ஒரு ரிப்பேர். பூட்டினால் பூட்டிக் கொள்கிறது.   திறப்பதற்கு முயற்சி செய்தால் சாவியைச் சுழற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.   சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யு மாதிரி சாவி வெளிவரத் தவிக்கிறது.   என்னடா, உபமானத்தில் அபிமன்யு என்கிறான். ஆசாமி கிழவனோ என்று தோன்றுகிறதோ?   உண்மைதான், சென்ற வருஷம் ரிட்டயர் ஆய் விட்டேன்.   நான் என்ன வேலை செய்தேன், எந்த மலையை வெட்டி எந்தச் […]