”இதென்ன கழைக்கூத்தாடியின் கூச்சல் போலிருக்கிறதே!’’ என்று பிரமித்துவிட்டார் ஒரு நண்பர். யார்? ஸ்ரீ ப.ராமஸ்வாமி அவர்கள்தான். “ஆஹா ஊகூ!” என்ற தலைப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கட்டுரை அவருக்குப் பிடித்தது; அதன் விறுவிறுப்பும் வேகமும் தொனியும் பிடித்தன. கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அதை ஆமோதிக்கும் முறையில், ஒரு சிறு குறிப்புடன், ஒரு தினசரி பத்திரிகையின் இலக்கியப்பகுதியிலும் கூட அவர் எழுதிவிட்டார். கட்டுரை ’சக்தி’ யில் முதன் முதலாக வெளிவந்தபோது, இப்படி அவர் செய்தார். அவருக்கென்ன? […]
இது என்னுடைய முதல் நாவல். தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசை திருப்பிவிட வேண்டுமென்றோ, உத்தி இத்யாதிகளில் மேல் நாட்டுக் களஞ்சியத் திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை. எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமையூட்டவோ எழுதுவதில்லை. […]
‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 6. எஸ்.வைதீஸ்வரன் – உதய நிழல் வே.சபாநாயகம். நீங்கள் வாசிக்கப்போகும் இவைகள் – கவிதைகள். சாதாரணமானதாக பொருளற்றதாக பழகிப்பொய்விட்ட தவிர்க்க முடியாத நியதியாகத் தோன்றும் வாழ்க்கையிலிருந்து ஆசையால் அறிவால் உணர்வால் கல்லிடியடுக்கபட்ட சில கலையுண்மைகள் இவைகள். பூமியில் வெகு நாட்களாகப் பதிந்து போய்க்கிடக்கிற ஒரு பாறாங்கல்லை சலித்துப் போன வெறும் ஆத்திரத்தால் புரட்டிவிட அடியிலிருந்து திடீரென்று கொப்பளிக்கும் நீரூற்றையோ நெளியும் அநேக ஜீவராசிகளையோ கண்டு பிரமிப்படைந்து நிற்கும் நிலைகள் – எனக்கு கவிதை […]
சிலர் தங்கள் கடிதங்களில், “நீங்கள் எப்படி சார் ‘பிரம்மோபதேச’த்தையும் எழுதி விட்டு, ‘உன்னைப்போல் ஒருவ’னையும் எழுத முடிகிறது?” என்று கேட்டிருந்தனர். எல்லா மட்டத்திலும் (standards) உயர்த தரம்(levels) தாழ்ந்த தரம், வளர்ச்சி வீழ்ச்சி, ஆக்கம் அழிவு, என்ற இரண்டு பகுதிகள் உண்டு. எந்த மட்டத்திலிருந்தாலும், (இந்த மட்டங்களின் இடையே எவ்வளவு பேதங்களிருப்பினும்) வளர்ச்சி ஆக்கம் ஆகிய குணப்பண்புகள் உடைய உயர்ந்த தரம் அனைத்தும் ஒரினமாகும். அதே போல் வீழ்ச்சி அழிவு ஆகிய பண்புகள் படைத்த […]
என் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாள நண்பர் எனக்குக் ‘கோவில்மாடு’ என்று பெயர் வைத்திருக்கிறார். ”ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டே இருப்பார், சிந்தனையோ சொல்லோ, இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். இஷ்டத்துக்கு எங்கேயோ One Way Traffic. அவர் விலகமாட்டார். எதிராளிதான் ஒதுங்க வேண்டும். பிறகு நாளோ, மாதமோ, வருடமோ தடைப்பட்ட சொல் தட்டியபின்தான் விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்வார். யார் கவலையும் கிடையாது. கோவில் மாடு! […]
காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பர்களுக்கு, முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன். இவை யாவும் கலை உத்தாரணத்துக்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டு செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு […]
எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும். காரியம் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகிறேன், பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக. இந்நூலிடையே திருதிராஷ்டிரனை […]
நான் ரசித்த முன்னுரைகளிருந்து…… ————————————————— 1. இராஜாஜி – வியாசர் விருந்து. ========================= – வே.சபாநாயகம். “கானார் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும் நானாநகரமும் நாகமும் கூடிய நன்னிலமான” நமது பாரத நாட்டில் தோன்றிய முனிவர்களும், ஞானிகளும், பக்த கவிஞர்களும் வாயிலில் காத்திருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். அவர்களை வாயிலில் காக்கச் செய்துவிட்டு நாம், உத்தியோகஸ்தர்களையும் பணக்காரர்களையும், இன்னும் அற்பர்களையும் காணவேண்டி, அவர்களது வாயிலில் காத்துக்கொண்டு நிற்கிறோம். இது என்ன மடமை! நான் புதிதாகச் சொல்லவில்லை. ஒரு […]
(‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் குறித்து) – வே.சபாநாயகம். திரு.பழமன் அவர்களுக்கு, 2008ல் ‘இலக்கிய பீடம்’ பரிசு பெற்ற உங்களது ‘கள்ளிக்கென்ன வேலி’ நாவல் படித்தேன். கொங்கு நாட்டுப் பின்னணியில் நாவல்கள் எழுதிய திரு. ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்குப் பிறகு, அப்பகுதி கிராமத்து மக்களின் வாழ்க்கையை அசலாகவும் எளிய நடையிலும் பதிவு செய்திருப்பது நீங்கள்தான் என நினைக்கிறேன். போட்டிப் பரிசுக்கான நவீன நாவல் உக்திகள், சாமர்த்தியம் காட்டும் சொல் சிலம்பங்கள், திடீர்த் திருப்பங்கள், வாசகனை மிரட்டும் கற்பனைப் புனைவுகள் ஏதுமின்றி […]
மரபுக்கவிதைகள் 1950களில் அமோகமாக வளர்ச்சியுற்றது. பாரதியின் தாசனான பாவேந்தர் தனது விருத்தப் பாக்களால் தனது குருநாதரைவிட சொல்லாட்சி, கவிநயம் காரணமாய் அன்றைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தார். அவரைப் பின்பற்றி ஒரு இளைஞர் பட்டாளமே அவரது பாணியில் எழுதிக் குவித்தார்கள். அவர்களை ‘பொன்னி’ இலக்கிய இதழ் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்று தலைப்பிட்டு அறிமுப்படுத்தியது. கவிஞர் வாணிதாசனும், மு.அண்ணாமலையும், பொன்னடியானும், பெரி.சிவனடியானும் மற்றும் பலரும் அதன்மூலம் பிரபலமானார்கள். அந்த பாரதிதாசன் பரம்பரையில் வந்த கவிஞர்களில் இன்னும் சிலர் அதே பாணியில் […]