1. என்னுடைய எழுத்தில் நான் அதிகமாகக் கையாள்வது மனித உணர்ச்சிகள்தாம். சமூகம், நாடக மேடையில் ‘காட்சி ஜோடனையாக’ மட்டும் இருந்தால்போதும். அதுவே நாடகமாக வேண்டாம். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான்என்னுடைய எல்லாக் கதைகளும் நாவல்களும் எழுதப் பட்டிருக்கின்றன.மனிதனுடைய உணர்ச்சிகளுக்கும், அவனுடைய விசித்திரப் போக்குகளுக்கும்தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். 2. அன்றாடம் சந்திக்கும் பஸ் ரயில் பிரயாணிகள், காரியாலய சிப்பந்திகள்,டாக்சிக்காரன், பிச்சைக்காரன், பெரிய மனிதன், சிறிய மனிதன் எல்லோரும்பிரும்மாண்டமான பட்டைக் கண்ணாடியின் பல பட்டைகள். இவர்கள் எல்லாக்காலத்திலும் இருக்கிறவர்கள். இவர்களைத் […]
1. கேள்வி (தீபம்): தாங்கள் எழுத்தாளர் வாழ்க்கையைப் பெரிதும் விரும்புகிறீர்களா? பதில்: இந்தக் கேள்விக்கு எப்படி விடை சொல்லுவது? எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பிழைப்புக்கு முக்கியத்துவம் குறையும். பிழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எழுத்துக்கு முக்கியத்துவம் குறையும். இந்த இரண்டையும் சரிகட்ட முயன்று கொண்டிருக்கிறேன். 2. கேள்வி: எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறீர்கள்? பதில்: பெரும்பாலும் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து எழுதுவதே என்னுடைய பழக்கமாகும். தொடர்கதை எழுத வேண்டிய நாள் என்று வாரத்தில் ஒரு நாளைத் திட்டப்படுத்திக் கொள்வேன். […]