1 உமாசங்கரின் தொலைபேசியில் ஒரு எடுக்கத் தவறிய அழைப்பு. பித்தானைப் பிதுக்கிப் பார்த்தார் உமாசங்கர். அவருடைய நண்பர் பூபதி கோலாலம்பூரிலிருந்து அழைத்திருக்கிறார். உடனே பூபதியை அழைத்தார் உமா. உமா பூபதி நட்பைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்திலிருந்து ஒரே சமயத்தில் வந்தவர்கள்தான் இவர்கள். கோலாலம்பூரில் ஒரு பணமாற்று வியாபாரியிடம் சேர்ந்தார் பூபதி. இன்று ஒரு தனி முதலாளியாகிவிட்டார். உமாசங்கர் சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் சேர்ந்தார். இன்று […]
இந்தக் கதையின் பெயர்கள் அனைத்தும் கற்பனையே வாழைவல்லியூர். இருநூறு கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த ஊருக்கு வராதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இந்த ஊரின் பெருமைக்குக் காரணம் ஆண்டாண்டு நடக்கும் தேர்த்திருவிழா. அடுத்து இந்த ஊரின் கோயில் யானை கற்பகம். உடம்பெல்லாம் வெள்ளைப் புள்ளிகள் தெளித்த தோற்றம். இரண்டு முழம் தந்தம். கம்பீரமாக ஆனால் பொறுமையாக அனைவரையும் ஆசீர்வதிக்கும் அழகு. இத்தனையுடன் பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு கற்பகம் ஆசீர்வதித்தால் அந்தப் பேறு கிடைக்கலாம் என்ற அந்த ஊரின் […]
காலை வேலைகளுடன் அந்தக் காலை நடையும் சேர்ந்து கொண்டது செல்வாவிற்கு. ரேஸ் கோர்ஸ் சாலையில் வாசம். காலை ஏழு மணிக்கு நடை தொடங்கும். ஃபேரர் பார்க் தொடக்கப் பள்ளி, திடல், நீச்சல்குளம், பெக்கியோ ஈரச்சந்தை என்று பாதையை நிர்ணயித்துக் கொண்டார். நீச்சல் குளத்தைக் கடக்கும்போது அந்த சிமிண்ட் நாற்காலியில் உட்கார்ந்தபடியோ அல்லது அருகில் நடமாடியபடியோ அந்தப் பெரியவரை செல்வா தினமும் பார்க்கிறார். வயது எழுபது இருக்கலாம். முள்ளாக தாடி மீசை. விரக்தியும் வறுமையும் வரைந்த உருவம். பார்க்கும் […]
ஐம்பதாவது வயதில் தோளில் கை போட்டது சர்க்கரை வியாதி. இன்று மாரியப்பாவுக்கு வயது 63. பதின்மூன்று ஆண்டுகளாக சர்க்கரையோடுதான் வாழ்கிறார் மாரியப்பா. சர்க்கரை வியாதி விரோதியா? நண்பனா? அல்லது இரண்டும் இல்லையா? சர்க்கரை சிநேகிதனானால் விடுதலையே கிடையாதா? மாரியப்பாவின் மருத்துவர் இப்படிச் சொன்னார் ‘நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது விலகாது. உன்னோடுதான் வாழும். விரட்டுவது கடினம். சேர்ந்து வாழப் பழகிக் கொள். தாகம் வரும். தண்ணீர் குடி. நிறைய. அதிகமாகப் பசிக்கும். புசி. இரவில் இரண்டு மூன்று […]