Posted inகவிதைகள்
கவலையில்லை
வேண்டும்போதுதண்ணீருண்டுமரத்துக்குக்கவலையில்லைமக்கியதுமண்ணிலுண்டுபுழுக்களுக்குக்கவலையில்லைபசிக்கும்போதுமான்களுண்டுபுலிகளுக்குக்கவலையில்லைதேடும்போதுகனிகளுண்டுகிளிகளுக்குக்கவலையில்லைஈனுவதுபால் தரும்குட்டிகளுக்குக்கவலையில்லைபுழுக்களைப் பூச்சி தின்னும்பூச்சிகளைத் தவளை தின்னும்தவளைகளைப் பாம்பு தின்னும்பாம்புகளைக் கருடன் தின்னும்கருடனை மண் தின்னும்எது எதைத் தின்றும்எதுவும் அழியவில்லைஎதற்கும் கவலையில்லைஎன்னில் முளைப்பதும்எனக்குள் கிடப்பதும்என்னுடையதல்ல வென்றமண்ணுக்கும்கவலையில்லைகொண்டுவந்த தொன்றுமிலைகொண்டுசெல்வ தொன்றுமில்லைஉணர்ந்தால் போதும்ஒருபோதும் கவலையில்லைஅமீதாம்மாள்