This entry is part 3 of 6 in the series 2 ஜூன் 2024

வாழப்போகும் பெருமையை

விதை சொன்னது

வாழும் பெருமையை

மரம் சொன்னது

வாழ்ந்த பெருமையை

விறகு சொன்னது

மூன்று பேரும்

இறைவனைக் கேட்டனர்

‘எங்களில் யார் பெரியவன்’

இறைவன் சொன்னான்

‘உங்கள்முன் நான் சிறியவன்’

அமீதாம்மாள்

Series Navigationவீடு விடல்பேருந்து நிறுத்தம்