மௌனம்

ஆர் வத்ஸலா முன்பும் இருந்துள்ளன திட்டமிடப்படா மௌனங்கள் நம்மிடையே - எவ்வளவோ‌ முறை‌ - நமது நெஞ்சங்களை அண்டாமல் நீ கேட்காத ஒரு கேள்வியும் நான் கூறாத ஒரு பதிலும் இப்போதைய மௌனங்களை விஷமாக்கி நிற்கின்றன நமது நெஞ்சங்களின் மேலேறி மிதித்துக்…
முன்னொரு காலத்துல…

முன்னொரு காலத்துல…

ஜெயானந்தன் முன்பெல்லாம் சாப்பாட்டு நேரம் ஆனந்தமாய் இருந்தது. அம்மா ,அவித்தசோறு சட்டியை ஆவிபறக்க, பெரிய கூடத்தில்  வாழைத்தண்டு சாம்பாரும், கத்திரிக்காய் கூட்டோடு  கூப்பாடு போடுவாள்.  காக்கை கூட்டம்போல்,  நானும்,அண்ணாவும், அக்காவும் தம்பியுமாய்,  அத்தை பிள்ளைகளோடு,  பதினான்கு உருப்படிகள், தட்டில்தாளமிட,  பாட்டி அன்போடு…
கரையேறும் காதலாய்……

கரையேறும் காதலாய்……

                                                       ஜெயானந்தன். நீயும் நானுமாய் கைகோர்த்து, வாழ்வின் கடல் நீந்தி வெகுதூரம் வந்துவிட்டோம்! நாற்பதாண்டில், “நீ” நானுமாய், “நான்” நீயுமாய் மாறிமாறி உருமாறி அர்த்தநாரியாய்   உலாவந்தோம். காமம் உடல்வரை காதல் உள்ளம்வரை கரைபுரண்டு ஓடி, கால்கடுத்து, வாழ்வை தவமாய் மாற்றினாய். இன்று,…

உறுதி மொழி

சசிகலா விஸ்வநாதன் பூத்துச் சொரியும் பவளமல்லி; மெல்லனே, மெல்லனே, முயங்கி மாரி பொழி கார் மேகம்; தடதடக்கும் இடியும்,மின் மினுக்கும் மின்னலும், நிகர்த்ததே மணவாழ்வு... மலர் படுக்கையல்ல... தெரிந்தோ,தெரியாமலோ; அறிந்தோ, அறியாமலோ; உன் வாழ்க்கை நான் புகுந்தேன். உன்னை வேண்டுவது ஒன்றே;…
திரும்பி வரும் ஆறுதல்கள் அவர்களுக்கும்

திரும்பி வரும் ஆறுதல்கள் அவர்களுக்கும்

ஹிந்தியில் : ரவீந்த்ர ப்ரபாத் தமிழில் : வசந்ததீபன் ________________________________________ இன்றும்_ ரொட்டி மற்றும் கவிதையின் செயற்கை வெற்றிடத்தில்நின்று சில அதிருப்தி _ அனுபவமற்ற மனிதன் பேசுகிறான் மக்கள் போராட்டத்தின் எப்போதும் முற்போக்குவாதம் , எப்போதும் ஜனநாயகம் எப்போதும் சோசலிசம் என்பது…
நான் திரும்பிப் போவேன்

நான் திரும்பிப் போவேன்

ஹிந்தியில் : உதய் பிரகாஷ்தமிழில் : வசந்ததீபன் ஆவணியில் மேகங்கள் திரும்பிப் போவதைப் போலவெயில் திரும்பிப் போவதைப் போல ஆடியில்பனித்துளி திரும்பிப் போகிறது அந்த மாதிரி விண்வெளியில் அமைதிஇருள் திரும்பிப் போகிறது ஏதாவது தலைமறைவு வாழ்க்கை ( அஞ்ஞாத வாசம் )…
குலதெய்வம்

குலதெய்வம்

                                வளவ. துரையன்  இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு இரவில் வருகையில் சிறு சலசலப்பும் சில்லென்று அடிமனத்தில் அச்சமூட்டும். அதுவும் கட்டைப்புளிய மரம் நெருங்க நெருங்க அதில் ஊசலாடிய கம்சலா உள்மனத்தில் உட்கார்ந்து கொள்வாள். அங்கிருக்கும் சுமைதாங்கிக்கல் அந்த இருட்டில் ஆறு பேர்…
அதுவே போதும்

அதுவே போதும்

வளவ. துரையன் என் தோழனே!நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை.மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை.என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை.நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு.உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு.அதுவே போதும்

கிளறுதல்

வளவ. துரையன் குப்பையைக்கிளறினால்தான்கோழிக்கு இரைகிடைக்கிறது.அடிமன ஆழத்தைஅவ்வப்போதுகிளறினால்மேலே வருவனசிலநேரம் துன்பங்கள்மட்டுமன்றி இன்பங்களும்.அதிகமாகக் கிளறுவதுஅனைவரது சினத்தையும்அடியோடு எழுப்பிவிட்டுஅருமை உறவும் நட்பும்அழிந்தொழியும் அன்றோ?இருந்தாலும்மேலே மிதக்கின்றபூக்களின்மினுமினுப்பை நம்பலாமா?அடியில்தானேகசடுகளும் அமிழ்ந்துள்ளன.நல்ல கவிதைஇல்லையெனஒதுக்கித் தள்ளியதைநாள்கழித்து இன்னும்நன்றாகக்கிளறிப் பார்த்தால்நற்கவிதையாகத் தோன்றுமாம்.
வாழ்வு – ராகம்

வாழ்வு – ராகம்

ஹிந்தியில் : சந்தோஷ் அர்ஸ் தமிழில் : வசந்ததீபன் -- கிடைத்து இருக்கிறது பார்வை கொஞ்சம் பார் சற்று பார்த்தால் இந்த பூமி, ஆகாயத்தின் நீலம் , நட்சத்திரங்கள் சூடிய இந்த இரவின் வானம் இவை மலைகள் , நதிகள் ,…