திரும்பி வரும் ஆறுதல்கள் அவர்களுக்கும்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 2 of 4 in the series 28 ஏப்ரல் 2024

ஹிந்தியில் : ரவீந்த்ர ப்ரபாத்

தமிழில் : வசந்ததீபன்

________________________________________

இன்றும்_

ரொட்டி மற்றும் கவிதையின்

செயற்கை வெற்றிடத்தில்நின்று

சில அதிருப்தி _ அனுபவமற்ற

மனிதன்

பேசுகிறான்

மக்கள் போராட்டத்தின்

எப்போதும் முற்போக்குவாதம் ,

எப்போதும் ஜனநாயகம்

எப்போதும் சோசலிசம் என்பது

எப்போதும் கலாச்சாரத்தோடு இணைத்து ….!

எவர்களிடம் _

இல்லை நாகரிகம்_நாகரீகம் இல்லாததின்

புரிதல்

மற்றும் இல்லை சுய மரியாதையின்

மென்மையான உணர்வு

எவரைச் சுற்றி வியாபிக்கிறது

குரூரமும் நெறிமுறையற்ற மனிதாபிமானமும்

ஆறுதல்களின் உலகம் மற்றும்

பாரம்பரிய நம்பிக்கைகளின் சோகம்.

நேசிக்கிறது அவர்களை_

அவர்களது அழுக்கு குடியிருப்பும்

மழைக்காலத்தில்

சலசலக்கும் குடிசையும் மட்டுமே

பரவி இருக்கின்றன அக்கம்பக்கம்

கற்பனைகளின் சிலந்தி வலைகளும்

அதைரியத்தின் விசாலமான போர்வை.

நிச்சயமாக _

அவர்களது அற்ப வாதங்களும்

தவறான அபிப்பிராயத்தின் மேகமூட்டத்தால்

போராடியபடி எல்லாம்

மறைந்து போகும் ஒருநாள்

தூசி இருட்டின் நிறமற்ற மடியில்

பிறகு அமைதியாக வெளிப்படும்

ஏதாவது வனப்பகுதியின் பக்கம்

வாழ்வின் –

அழகான பழமொழியின் தேடலில்.

ஏதாவது நாள்

திரும்பி வரும் அவர்களுக்கும்

ஆறுதல்கள்

படைப்பதற்காக ஏதோ

கவிதை மற்றும்

செய்வதற்காக

வெற்றிநாதம்

வருடங்களாக போய்க் கொண்டு

வெளிப்பாடின் சண்டையாக ….|||

🦀

ஹிந்தியில் : ரவீந்த்ர ப்ரபாத்

தமிழில் : வசந்ததீபன்

🦀

ரவீந்திர ப்ரபாத்

——————

(பிறப்பு: 

__________

5 ஏப்ரல் 1969) மகிந்த்வாரா , சீதாமர்ஹி , பீகார்.

இவர் ஒரு இந்திய இந்தி கவிஞர், கதைசொல்லி, நாவலாசிரியர், நையாண்டி, கட்டுரையாளர், ஆசிரியர் மற்றும் வலைப்பதிவு ஆய்வாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இவர் கிட்டத்தட்ட அனைத்து இலக்கிய வகைகளிலும் எழுதியுள்ளார், ஆனால் இவரது முக்கிய சாதனைகள் நையாண்டி மற்றும் கஜலில் உள்ளன. 1991 இல் வெளியிடப்பட்ட இவரது முதல் கஜல் தொகுப்பு ” எங்கள் மேல் ” மூலம் இவர் முதல் முறையாக வெளிச்சத்திற்கு வந்தார். இவர் லக்னோவில் இருந்து வெளியிடப்படும் ‘ஜன்சந்தேஷ் டைம்ஸ்’ மற்றும் ‘டெய்லி நியூஸ் ஆக்டிவிஸ்ட்’ ஆகியவற்றின் வழக்கமான கட்டுரையாளராக இருந்து வருகிறார்.

 1991-ல் சட்டமன்ற உறுப்பினர். 

இவரது நூல்கள் : 

__________________

 வாழ்க்கை துணை ( 1991 ) , ஹிந்தி வலைப்பதிவின் வரலாறு மற்றும் மீதியிருந்து கொண்டிருக்கும் ஜனநாயகம்  (2011 ) ), அன்பு சந்தை விற்கப்பட்டது (2012) மற்றும் பூமியின் பிடியில் சுதந்திரம் (2013) இவருக்கு  ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்

Series Navigationகனடாவில் நடந்த ‘நூல்களின் சங்கமம்’ புத்தகக் கண்காட்சிசித்ர குப்தனின் டிவி விளம்பரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *