ஒரு நதி ஒரு கடல் ஒரு சில கரைகள்

ஸ்வரூப் மணிகண்டன் மறுகரையில் இருப்பதாகச்சொல்லி செய்தியனுப்புகிறாய். நம்மிடையே நதியோடியிருந்த காலம் போய் வெகுநாட்களாகிவிட்டது. இப்போது நான் வந்து நிற்கும் கடலுக்கு எந்தெந்தப்பக்கம் எத்தனைக்கரைகள் என்று யாருக்குத்தெரியும்?

இளைப்பாறல்

சற்று நில். மண் பற்றிக் கொள்ளட்டும். திரிந்தலையும் மேகங்களைக் கண்டு பறந்தலையும் பறவைகள் உன்னிடம் சேருங் கால் இளைப்பாறுவாய் நீ நினைப்பொடுங்கி நிழல் பரப்பும் தருவாகி. கு.அழகர்சாமி

ப்ரதிகள்

ப்ரதிகள் பலநேரம் அசலைப் ப்ரதிபலிப்பதில்லை. முன்னம் கூட்டிசைந்த பலவற்றின் கூட்டுப் தொகுப்பாய் இருக்கின்றன. அசலின் முத்திரை ப்ரதிகளில் கருநிற அடையாளமாகின்றன. பல்வேறு பயணங்கள் சென்று திரும்பும் ப்ரதிகள் பெரும்பாலும் அசலை வெருட்டுகின்றன. குறுக்குக் கோடுகளோ மையெழுத்தோ முனைசிதைவோ இன்றிச் சிலவே வீடடைகின்றன.…

உலக அமைதிக்கு ஒரு வணக்கம்

புவியெங்கும் நிறைந்திருப்பது அச்சமும் வெறுப்புமாம் செப்புகின்றனர் ஆடவர், கனிந்த வாழ்வின் அறுவடைக் களத்தில் காத்திருப்பதோ இடைவிடாத விதியின் அமைதியில்லாத அரிவாள். ஆயினும், இனிய ஆன்மாவாயிற்றே நான், ஆனந்தமே என் பிறப்பு, சோளக்கதிரேறும் மேற்கூரையிலிருந்து நான் காண்பதோ உன் விடிவெள்ளியின் பொன் மாங்குயில்…

துவாரகா சாமிநாதன் கவிதைகள்

துவாரகா சாமிநாதன் என் வீட்டு கண்ணாடி என் வீட்டின் பின்புறம் 108 வாகனத்தின் ஓயாத அழுகை தெருவின் திருமண மண்டபத்தில் மகிழ்வும் எதிர் வீட்டின் துக்க அனுசரிப்பும் வாழ்வின் சித்திரங்களாக வரைந்து காட்டியது என் வீட்டு கண்ணாடி வாழ்வின் உள்ளீடுகளில் வரைகோடுகளின்…

உறக்கம்

நிஷாந்தன் தூங்காமல் அடம் பிடித்து அழுத குழந்தையிடம் கொடுத்தேன் பொம்மை ஒன்றை. சமாதானமடைந்த குழந்தை உறங்கத் தொடங்கியது. பொம்மை மட்டும் விழித்திருந்தது தனியாக.

மையல்

ஸ்வரூப் மணிகண்டன்  தேய்பிறை நிலவில் எரிகின்றது காடு. நிலவெரித்த மிச்சத்தை சேர்த்து வைக்கும் எனது முயற்சிகளை முடிபோட்டுத் திரிகொளுத்துகிறது உன் அருகாமை. காட்டில் தொலைவதற்கும் காடே தொலைவதற்கும் உள்ள வேறுபாட்டை யோசிக்க விடாமல் தற்பொழுதில் நின்று திரிகிறது காலம்.

தண்ணீர்கள்

    சத்யானந்தன்   குழாயில் ஒன்று கிணற்றில் வேறு அருந்தும் கோப்பையில் பிரிதொன்று தண்ணீர்கள் தானே?   மறுதலித்தார் பின் மௌனமானார் என்னுடன்   மூன்று கைத் தோழனாய் மின்விசிறியையே வெறித்திருந்தார் இறுதி நாட்களில்   துண்டுப் பிரசுரங்களாய் அவர்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Earth, My Likeness) (I dreamed in a Dream) 1. எனக்குப் பிடித்த பூகோளம் 2. கனவுக்குள் கனவு கண்டேன்…

ஆட்டம்

ஆட்டம் சூடு பிடித்திருக்கும். கணிணியும் அவனும் மோதும் உச்சக்கட்டத்தில் கவனத்தின் குண்டூசி முனையில் இறுதிப் போர் நடக்கும். தன்னையே தான் பணயம் வைத்து ஆடுகிறானா? கடைசி நகர்த்தலில் கணிணி நகைக்கும். காணோம் அவன். தேடி ’மெளஸைக்’ ‘கிளிக்’ செய்தால் மெலிதாய்க் கீச்சிடுவான்.…