பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதைகள்

நழுவிப் போனவைகள்                         அரைத் தூக்க இரவில் தானாய்த் தவழ்ந்து கருத்தும்,கோர்வையுமாய் வார்த்தைகள் பிசகற்று உதித்து வரும் ஒரு கவிதை எழுந்தெழுதும் சோம்பலினால் மறக்காதென்ற நம்பிக்கையில் தூக்கத்துள் புதையுண்டு காலையில் யோசித்தால் ஒரு வார்த்தை கூட நினைவின்றி தவறி நழுவி எனைவிட்டுப் போயிருக்கும் என் கவிதை அக்கவிதை பிறிதொருநாள் வெளிவந்து விழுந்திருக்கும் அதில்  வேறெவரோப் பெயரிருக்கும்..  கிளிமரம்  …

விபத்து

சத்யானந்தன்முதுகில் சுமையானாலும்கேள்விகள் விடைகள் பின்னிக் கிடந்தாலும்தொடராத தொடர்புகள் நிறைந்து கிடந்தாலும்கால வரிசை தவறாததால்கட்டளையிட்டால் மட்டுமே விழிப்பதால்இறந்த காலத்தை விடவும்மடிக்கணினி தோழமையானதுதலைமுறைகளுக்கு நடுவேதற்காலிகப் பாலங்கள்வணிகப் பரிமாற்றங்களுக்குவசதிப் படி ஊடகங்கள்முக்காலங்களைஇருமையான உலகைபலூன்களாகவோகட்டுமானங்களாகவோஎழுப்பிப் பின் தகர்த்துகண்ணிகள் இல்லாதசங்கிலியின் வலிமை காட்டும்தொடுகைக்கு அப்பாற்பட்டுகாணப்படுவதானசமூக தளம்வலைப்பதாய்விரிவதுவாய்தனிமைச் சிறைத் தாளுமாய்சாவிகள்கடவுச் சொற்கள்காக்கும்…

திசையறிவிக்கும் மரம்

மரம் முற்றிவிட்டது துளிர்விட்டுக்கொண்டும்.. ****************************** மொட்டை மரங்களும் அழகிய நிர்வாணத்தோடு திசையறிவித்தபடி. ****************************** வீழ்த்தப்பட்டபின்னும் மரக்கிளைகள் வேர்பிடித்து வேறொருவம்ச ஆணிவேராய்.. ********************************** மரக்குளத்தில் அலையெழுப்புகின்றன பறவைக் குரல்கள்.. ********************************* நீர் கிடைத்த கிளைகள் விரிகின்றன பசுந்தோகையாய்.. கிடைக்காதவை கிண்ணிக் கோழியாய்.
’ரிஷி’யின் கவிதைகள்

’ரிஷி’யின் கவிதைகள்

அலைவரிசை _ 1 காரணத்தைப்பாருங்கள்; காரணம்முக்கியம். காரணத்தைக்கூறுங்கள்; காரணம்முக்கியம். உண்மைக்காரணம், பொய்க்காரணம் என்ற பாகுபாடுகள் முக்கியமல்ல. உரைக்கப்பட வேண்டும் காரணம். அதுமட்டுமே முக்கியம். காரணம் கற்பிக்கப்படுமா? யார் சொன்னது? கூறுகட்டி அல்லது வேறு வேறு நிறங்களிலான பாலிதீன் பைகளில் பொதிந்து விற்க…
மூளிகள்

மூளிகள்

ருத்ரா இ.பரமசிவன் மூளிகள் தான். விழியில்லை தான். ஆனால் பாச உணர்ச்சியின் பச்சை நரம்புகள் பால் ஊட்டிச் செல்லும் "பூமத்ய ரேகைகள்" அதில் ஓடுகின்றது உங்களுக்கு தெரிகிறதா? முல்லை முறுவல் காட்டும் உதடுகள் மொக்கைகளாக‌ உங்களுக்கு தெரியலாம். பளிச்சென்று மின்னல் விழுதுகள்…

களிப்பருளும் “களிப்பே”!

ருத்ரா. அரிஸ்டாட்டில் ஒரு சிறு நேர்கோட்டை பாதியாக்கு என்றார். மீண்டும் பாதியாக்கு. பாதியையும் பாதியாக்கு பாதி..பாதி.. அது புள்ளிகள் ஆகலாம். கண்ணுக்கு தெரிகிற புள்ளிகள் ஆகலாம். கண்ணுக்கு தெரியாத புள்ளிகள் ஆகலாம். ஆனாலும் பாதியாக்கு பாதியை பாதி ஆக்கு... எது ஞானம்?…

அந்தி மயங்கும் நேரம்

இராமானுஜம்  மேகநாதன்   மழைக் காலத்தின் தொடக்கம்! பெய்வதா வேண்டாமாஎன்றொரு இமாலயத் தடுமாற்றத்தில் அந்த காரிருள் வானம். சிறிது தூறிய தூறல்களே எனைக் குலைத்துவிட்டனவே என்ற புலம்பலுடன் முதுமைக் கிழவனாய் அந்த வளைந்த தும்பை. மேலே உயரே, அந்த உயர்ந்த மின்…

நாடெனும்போது…

நந்தியாவட்டை,  மந்தமாருதம் வந்தியத்தேவன்,  சொந்தக்காரன் சந்தியா விந்தியா முந்தியா பிந்தியா   _ எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்   ”இந்தியா என் தாய்த்திருநாடு; வந்தனத்திற்குரியது” என்று நாக்குமேல் பல்லுபோட்டுச் சொல்லிவிட்டாலோ வில்லங்கம்தான்.   தடையற்ற தாக்குதலுக்காளாக நேரிடும். எச்சரிக்கையா யிருக்க…
கனவு மிருகம்!

கனவு மிருகம்!

======ருத்ரா கனவு மிருகம் பிசைந்து தின்கிறது. ரோஜாக்களை கூழாக்கி பிஞ்சு சூரிய செம்பழத்தை ரசமாக்கி விழுங்குகிறது. செம்பவள இதழ் பிழியும் காலபிழம்பு இங்கு தாகத்தை தீயாக்கி தகிக்கிறது. ஏதோ ஒரு பிசாசு தன் தொண்டைக்குழியில் ஓலங்களைக்கூட‌ சிவப்பு மதுவாக்கி கசிய விடுகிறது.…

அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்

    நைந்து  போயிருக்கும் புத்தகம்.   அட்டைகள் இல்லை.   முன் பக்கங்கள் சில முகம் கிழிந்து போயிருக்கும்.   கிழிந்த பக்கங்கள் கவனமாய் நூல் கட்டி வைக்கப்பட்டிருக்கும்.   ஒடிந்து போய் விடுமோ என்று எத்தனையோ பக்கங்கள் ஓய்ந்திருக்கும்.…