விதி மீறல்

சுவரில் வாசகம் ”நோட்டீஸ் ஒட்டாதீர் மீறினால் தண்டிக்கப்படுவீர்” சூரியன் சுவற்றில் வரைந்த நிழல் ஓவியத்திற்கு யாரை தண்டிப்பது?

காண்டிப தேடல்

வஞ்சிக்க பட்டவரும் வஞ்சித்தவரும் வேடிக்கை மட்டும் பார்த்தவரும் நெருங்கியவர்களே ! சமபந்தி உணவு இவர்களோடு மற்றொமொரு நெருங்கியவரின் திருமணத்தில். ரௌத்திரத்தை இலைக்கடியில் ஒளித்துவிட்டு இலையில் பறிமாற பட்ட “சுமூக உறவு” இலைக்கு இலை எச்சிலாக்க பட்டு கைமாறியது அடுத்த ,அதற்கடுத்த இலையென..…

தீராதவை…!

அம்மா கைகளில் குழந்தை… சும்மாச் சும்மா உம்மா கொடுத்துக் கொண்டிருந்தது அம்மா. கன்னங்களிலோ நெற்றியிலோ குத்து மதிப்பாக முகத்திலோ இன்ன இடம்தான் என்றில்லாமல் வாகாக வாய்க்கும் எந்த இடத்திலுமோ வென... வாகனங்களைக் காட்டியொரு உம்மா வானத்தைக் காட்டியொரு உம்மா மரங்களைக் காட்டியொரு…

அட்ஜஸ்ட்

காதலியோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா அவளுக்கே கணவனா ஆகியிருக்கலாம், வாத்தியாரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா இந்நேரம் டிகிரி முடிச்சிருக்கலாம், கூட்டாளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா பிஸினஸ்ல இன்னும் நல்ல ப்ராஃபிட் பாத்திருக்கலாம், பங்காளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு…

இனிக்கும் நினைவுகள்..

இனிப்பின் சுவை இதுதான்… சின்ன வயதில்… எங்கள் நினைவில்… சவர்க்கார முட்டையூதி சுவரில் வைத்து உடைத்தோம்… பட்டம் செய்து பறக்க விட்டோம் - அதில் நாமும் கற்பனையில் பறந்தோம்… நிலாச்சோறு சமைத்து வேடிக்கை பார்த்தோம் மழையில் நனைந்து ஓடிப்பிடித்தோம் வாழை நாரில்…

ஆட்கொல்லும் பேய்

எங்கோ ஒரு கங்காய் தென்பட்டது இன்று பரவிப்பரவி பெரும் நெருப்பாய் எ¡¢கிறது தொலைவில் சிறு துளியாய் கண்டது இன்று பெருகிபெருகி பெரும் சாக்கடையாய் நாறுகிறது நமக்குப் பின்னால் தொடர்ந்திருந்த நிழல் ஒன்று இன்று நம்மையே விழுங்க வருகிறது இலட்சத்தில் ஒருவருக்குப் பிடித்த…

நிலாச் சோறு

பௌர்ணமி இரவில் வெண்மை பொங்க விசாலமாய் தெரிந்தது பால்நிலா.   வெண் சித்திரங்களாய் சிதறிக் கிடந்தன நட்சத்திர கூட்டம்.   மொட்டை மாடியில் சூழ்ந்திருந்த குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்க்கொன்றாய் உருண்டை உருண்டையாய் சுவையாய் ஊட்டினாள் நிலாச் சோற்றினை அற்புதப் பாட்டி.  …

கனா தேசத்துக்காரி

கனவுகளில் தன்னைத்  தொலைத்தபடியவள் என்றுமே தனித்திருந்தாள் அம் மாய உலகில் தனக்கெனவோர் அரியாசனம் அமைத்தவள் பிரஜைகளையும் உருவாக்கினாள் அவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர் அதில் அனைவரும் பதிப்பிக்கப்படாமல்  இருந்தன பொய்களில் சாயல்கள் அங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள் வெளிர் நிறங்கள் தாங்கிய…

”முந்தானை முடிச்சு.”

வரும்போது மகளுக்கு பலகாரம் வாங்கியாங்க.. ராட்டையில் பட்டு கோர்த்தபடி சொன்னாள். சுற்றுலா வண்டி கும்மாளக்குரலில் குற்றாலத்துக்கு குளிக்கப்போனவனுக்கு சரியா காது கேக்கல போலும். அப்படியே எனக்கும் வயித்துவலி மாத்திரை ஏதாவது வேணும்.. தறியில் நெய்துகொண்டு கேட்டாள். சினிமா கொட்டகை சீட்டி ஒலியில்…

உபாதை

  ஒலிபெருக்கியில் ஒப்பாரி சத்தம் உறக்கத்தைத் துரத்தியது நேரத்தைக் கூட்டியது தாகமெடுத்தது அருகில் சென்ற போதுதான் தெரிந்தது கானல் நீரென்று கதவு திறந்திருந்தது உள்ளே எட்டிப் பார்த்தேன் ஈர விறகால் அடுப்பு புகைந்தது வானத்தின் உச்சியில் பறக்கும் கழுகின் நிழல் பூமியில்…