தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தேனீச்சையின் தவாபு

முத்தமொன்றில் மிதந்து வந்தது தேனீச்சையொன்று இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய நிர்வாணத்தின் முன் அது மயங்கிக் கிடந்தது விரக தாப வலி பொங்கி விம்ம ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி களைத்துப் போன அதன் இருப்பு…

மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.

. * சலுகையோடு நீட்டப்படும் கரங்கள் பெற்றுக் கொள்கின்றன ஒரு கருணையை மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள் அடையத் துடிக்கின்றன இறுதி தரிசனத்தை இருப்புக்கும் இன்மைக்குமான பெருவழியில் சுவடுகளாகிறது திரும்புதலின் பாதையும் காத்திருந்து எரியும்…

வரிகள் லிஸ்ட்

கவிதை எழுத அமர்ந்த நான் அதோடு மளிகைக்கடைக்கும் சேர்த்து லிஸ்ட் எழுதிக்கொண்டிருந்தேன் முக்கியமானவை , உடனடித்தேவைகள் முதலில் வைக்கப்பட்டன கொஞ்சம் இருப்பு உள்ளது,பரவாயில்லை வகைகள் அடுத்து இடம் பிடித்தன இன்னும் கொஞ்ச நாளைக்கப்புறம் தேவைப்படுபவை…

இயற்கை வாதிக்கிறது இப்படி……

அந்தி வெளிச்சம் வருகிறது..! காற்றே வழிவிடு ஆயிரங்கொண்டலோடி வருகிறது… மின்மினிப் ப+தமாய் சூரியன் மறைகிறான் சிவந்த கனல்களால் விண்ணிலே உரசுகிறான்… மேற்கிலே உலை மூட்டுகிறான் மேக கணங்களும் தீப்பிடிக்கின்றன… அந்தி வெளிச்சம் வருகிறது காற்றே…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மெழுகு வர்த்தி வெளிச்சம் விரிந்து பரவி விரைவாய் என்னை விழுங்கி விட்ட தென்ன ? திரும்பி வா என்னரும் நண்பா…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "வாழ்க்கை என்பது வெவ்வேறு இணைப்புகள் பல பின்னிய ஒரு சங்கிலிப் பிணைப்பு. துயரம் என்பது தற்காலத்துக்கும், நம்பிக்கை உறுதி ஊட்டும்…

பொன்மாலைப்போழுதிலான

ஒரு பொன்மாலைப்போழுதிலான பேருந்துப்பயணம்,தோழியுடன்.. வெட்டிக்கதைகளுக்கிடையே அலறிய அவளது அலைபேசியில் பிரத்யேக அழைப்பொலியும் முகமொளிர்ந்து வழிந்த அவள் அசட்டுச்சிரிப்பும் சொல்லாமல் சொல்லின எதிர்முனையில் யாரென்று! இங்கிதம் தெரிந்தும் எங்கும் நகர முடியாத தவிப்பு.. மூடிகளில்லா காதுகளைப்படைத்த…

நிலவின் வருத்தம்

இரவைத் துளைத்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இரவுக் குளியல் நடத்தியது ஒரு காகம். அதில் அருகே குளித்துக் கொண்டிருந்தது பௌர்ணமி நிலா... நிலா கேட்டது…

கூடியிருந்து குளிர்ந்தேலோ …

______________________ சூழ்ந்திருந்த மாமரமும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும் ரீங்காரமிடும் தட்டான்பூச்சியும் மத்தியிலிருந்த நானும் - ஆளுக்கொரு கை உண்டு குளிர்ந்தோம் இடை-வெளியிலிருந்த நிச்சலனத்தை... - சித்ரா (k_chithra@yahoo.com)

இருப்பு!

முற்றத்துக் கயிற்றுக் கொடிக்கும் வீட்டிற்கு மென மாறிமாறி உலர்த்தியும் விட்டுவிட்டுப் பெய்த தூறலின் ஈரம் மிச்ச மிருந்ததால் இரண்டு ஆண்டுகளுக்குமுன் இறந்துபோன வாப்பாவின் சட்டை யொன்றை உம்மாவிடம் கேட்க ‘வாப்பாவுக்கு ரொம்பப் பிடித்த’தாக தந்தச்…