இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி

இந்த பிரபஞ்சத்தில் கண்விழித்துப் பார்க்க மிக ஆவலோடு கருவறையில் காத்திருந்த அந்த குழந்தையின் புன்னகையைக் கூட வெட்டிவீசினாய் தொட்டில் சீலையான உம்மாவின் கவுணியில் தெறித்த ரத்தவாடையின் உறைதலில் நகர்கிறது நடுச் சாமம். சாம்பல் மிஞ்சிய இருப்பிடமெங்கும் தொடரும் கருகிய வேதனையின் வரைபடம்…

விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை

அரிதான காட்சிதான்! விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் ஒரு வீட்டு பூனை! என்னவெல்லாம் சாகசம் செய்கிறது! பாயும் புலியாக!  ஆடாமல் அசையாமல்! பதுங்கி பாய்ந்து! தாவிக்குதித்து!  தடம் பார்த்து! தீவிரமாய் திட்டம் தீட்டி! அடி மேல் அடி வைத்து! கிளைக்கு கிளை…

பயணத்தின் மஞ்சள் நிறம்..

* மதிய வெயில் கோடுகளாய் குறுக்கே விழுந்திருந்த ஒரு நடைப்பாதைப் பொழுது பயணத்தின் மஞ்சளை கரு நிழல் துரத்துவதை எண்ணியிராத ஓர் எறும்பு மரணத்தின் வடிவத்தை வாசித்துக் கொண்டிருந்த அரைக் கணத்தில் பட்டென்று ஸ்தம்பித்தது கால் கட்டை விரலுக்குக் கீழ் *****…

மீளா நிழல்

* கைப்பிசைந்து நிம்மதியிழக்க நேர்கிறது இப்பெரு அமைதியில் காலடி ஓசைகளின் அதிர்வில் நடுங்குகிறது நிற்கும் நிழல் ஒளி கசியும் ஜன்னல் திரையில் மடிந்து மடிந்து தொங்குகிறது மீளா துக்கம் கையெழுத்து இடச் சொன்ன படிவத்தில் உறுதி செய்து கேட்கிறார்கள் அவன் மரணத்தை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் இதயம் ஒன்றால் இப்போ துரைப்ப தெல்லாம் ஆயிரம் இதயம் சொல்லும் நாளைக்கு ! பிறக்க வில்லை நாளை ! இறந்து விட்டது நேற்று ! ஏன்…

நினைவுகளின் மறுபக்கம்

நிலாவையே நினைத்துக் கொண்டிருந்தேன். நிமிடங்கள் பறந்து போயிற்று.   குளிர்ச்சியாய் மனது குதூகலாமாயிற்று.   என்னைப் போல் அங்கும் நிலாவிலிருந்து யாரோ பூமியை நினைத்துக் கொண்டிருக்கலாம்.   பூமியின் வெப்பம் அவர்களின் மனதை வியர்க்க வைக்கலாம். மறைந்த பசுமை அவர்களின் மனதை…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   நாமிருவரும் இந்த மர்மத்தைச் செவிகளில் கேட்கிறோம் பேசுவது போல் ! வேறு யார் சேர்ந்தி டுவார் விந்தைப் பந்தத்தில் ? மதக்குரு ஒருவர் அடுத்தவரிடம் கேட்டார்…

விடாமுயற்சியும் ரம்மியும்!

  கலைத்துப் போட்டு அடுக்கி பிரித்துப் பின் கோர்த்துப்போட்டாலும்... விசிறிக் கலைத்து என எல்லா வித்தைகளும் தோற்று எதிரிக்குத்தான் வாய்க்கிறது ரம்மியும் ஜோக்கரும்!   பதினாலாவது அட்டையோ புதிய அமைப்பாய் தனித்துத் தொலைக்க அதுவும் சேர்கிறது அவனுக்கு!   தோல்வியைத் துரத்தும்…

சித்தி – புத்தி

முச்சந்தி கோபுரத்தின் முகப்பில் சித்தியும் புத்தியும்,பிள்ளையாரின் தோள்களில் சாய்ந்திருப்பது போல், ஆறுதலான தோள்கள் எங்கே ? காலங்கள் மாறியது காட்சிகள் மாறியது தோள்கள் தென்படாமலேயே .. துவண்டவிட்ட நேரத்தில் புலப்பட்டது - பிள்ளையாராக மாறிவிட்டால் என்ன ? தன்நிறைவான இருப்பில், சித்தியென்ன…

கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்

ஓடுகளாய்.  ஒரு சந்திப்புக்குப் பின்னான நம்பிக்கைகள் பொய்க்காதிருந்திருக்கலாம். தூசு தட்டித் தேடி எடுக்கப்பட்ட கோப்புகளில் இருந்து பெய்யும் எண்ணத் தூறல்களில் நனையாது இருந்து இருக்கலாம். எங்கோ அகதியாய் விட்டு வந்த நிலக்கோப்புகளை பராமரித்துப் பொடியாய் அடுக்காதிருந்திருக்கலாம். பழையனவற்றில் நனைவதும், மூழ்குவதும் தவிர்க்கயியலா…