அன்னையே…!

உயரமான ஒரு சொல்லை எழுதினேன் அது – “சிகரமா”னது… நீளமான சொல்லை வரைந்தேன் - உடனே “நதி”யானது… வெப்பமான சொல்லொன்று எழுத “சூரியனா”ய் உதித்தது… ஈரமான சொல்லொன்று எழுத “மழை” பொழிந்தது… அன்பாக ஒரு சொல் எழுத “நீ”யானாய்… நீ உடன்…

வேறெந்த சொற்களும் அவனிடம் மிச்சமில்லை

ஒரு சொர்க்கத்தை சம்பாதிப்பதற்காக நகரங்களை உருவாக்குபவன் என்வீதிவழியே வந்து என்னை தட்டி எழுப்பிச் சென்றான். கறுப்புவடுவோடு கண்டுணர்ந்த பேரழகு கீற்றாய் சிறுகோடாய் தேய்ந்து இரவின் கதையை எழுத பிறையின் ஒளியை முத்தமிட்டு அதிசயித்து பார்க்கும் கண்கள் மின்னல் வாகனத்தில் பறந்து சென்றது.…

உருமாறும் கனவுகள்…

நிலவுக்குள் ஒள‌வைப்பாட்டி ந‌ம்பிய‌ குழந்தையாய் ‌ க‌வள‌‌ங்க‌ள் நிர‌ப்பப்படுகிறது நாள்காட்டியில் தொட‌ர்ந்த‌ இல‌க்க‌ங்க‌ள். க‌ருத்த‌ரித்துப் பின் பின்ன‌ல் சட்டைக‌ளோடு சுற்றும் ராட்டின‌ப் பூக்க‌ள் எம் தொட்டிலில் அடுத்த வீட்டுக் குழ‌ந்தை நான் வைத்த பெயரோடு. ச‌ரியில்லாத சுழ‌ற்சியால் த‌டுமாறும் மாத‌விடாய் உதிர‌ப்போக்கு…

காத்திருக்கிறேன்

என்றாவது வரும் மழைக்காக அன்றாடம் காத்திருப்பது நிரந்தரமானது வாழத் தவிக்கும் மரத்திற்கு ஞாபக வேர்கள் நீரைத் தேடுவதற்கும் திராணியற்று முடங்கிப்போக வேண்டியதாகிறது உங்களது உறவின் வெளிச்சத்தில் வளர்ந்த எனது நட்பின் கிளைகள் இலையுதிர் காலத்தை சந்திக்கிறது கடந்த காலங்களில் பதித்த தடங்களை…

முற்றுபெறாத கவிதை

இன்னும் என் கவிதை முடிக்கப்படவில்லை .... ரத்தம் பிசுபிசுக்கும் வலிமிகுந்த வரிகளால் இன்னும் என் கவிதை தொடர்ந்துகொண்டே இருக்கிறது ..... பதில் கிடைக்காமல் விக்கித்து நிற்கையில் கேள்விக்குறி ஒன்று தொக்கி நிற்கிறது . திடுமென நிகழ்ந்த நிகழ்வொன்றில் , கண்களை அகல…

கிறீச்சிடும் பறவை

  நாள் தவறாமல் வந்து என் ஜன்னல் கம்பிகளில் அமர்ந்து ஒரு சிறு பறவை கிறீச்சிடுகிறது என் கவனத்தைக்கவர.   எதை ஞாபகப்படுத்த ? மறந்துபோன இயற்கையுடனான நட்பையா ? அல்லது கடந்து சென்ற காலங்களை மீள் நினைவூட்டவா ?  …

அழுகையின் உருவகத்தில்..!

என்ன பதில் மொழிவதென தவிக்கும் விளிம்பு நிலை விரிசலின் தடயங்களில் ஏதேனும் மார்பு அகப்பட்டிருந்தால் கண்ணீர் கரைசல் படிமக் காடு படர்ந்திருக்கும். வார்த்தைகளின் உயிரோட்டத்திலே உயிர் பிரிந்து சென்றிருக்கலாம்.. ஏதோ ஒரு அழுகையின் உருவகத்தில் அரவணைத்திட அறியாதொரு அழகியலின் தொன்மம் கரைந்துக் கொண்டிருக்கிறது.…

ப மதியழகன் கவிதைகள்

மோட்ச தேவதை   கிணற்று நீரில் விழுந்த தனது பிம்பத்தை எட்டிப் பார்த்தது குழந்தை வானவில்லை விட அம்மாவின் சேலை வண்ணம் மிகவும் பிடித்திருந்தது அதற்கு தன்னுடன் சோற்றுக் கவளத்துக்கு போட்டியிடும் நிலாவுக்கு காய் விட்டது குழந்தை லாலிபாப் வாங்கிக் கொடுத்தால்…

அவனேதான்

ஆட்டுக்கு புல்லைக்காட்டி அழைத்துச் செல்கிறான் கழுத்தை வெட்ட.. மீனுக்கு புழுவைக்காட்டி தூண்டிலில் பிடித்து துடிக்க வைக்கிறான்.. பசுவிடம் பால்கறக்க போலியாய்க் கன்றைக் காட்டி காரியம் சாதிக்கிறான்.. இத்தனையும் தானாகி இலவசத்தால் ஏமாந்து ஜனநாயகம் என்ற பேரில் சந்தியில் நிற்கிறான் ! -செண்பக…

விட்டு விடுதலை

சுமக்கிற பிரியங்களை இறக்கி வைப்பது இறுதி நொடியில் கூட இயலுமா தெரியவில்லை. பிரிகிற ஆன்மா பேரொளியில் சேரத் தடையாகுமதுவே புரியாமலுமில்லை. காலத்திற்கேற்ப ஆசைகள் மாறுவதும் தலைமுறைகள் தாண்டிப் பாசங்கள் தொடர்வதும் புகழ்பொருள் மீதான நாட்டங்கள் போதையாகுவதுமே சாஸ்வதமாக மீளும் விருப்பற்று இறுக்கும்…