வலி

சமீலா யூசுப் அலி 2011.06.28 முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி அரைநொடியில் தொடைகளில் கனக்கும் காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள். ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும். தலைக்குள்…

ஸ்வரதாளங்கள்..

காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்காலத்துளிகளில், மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன தட்டில்விழும் வட்ட நாணயங்கள்; ஸ்வரம் தப்பாமல் இறைஞ்சும் குரலுடன் இழைந்து.. அமைதிச்சாரல்

அவள் ….

கருநிற மேகமொன்று சற்று வெளிறிப் போயிருந்தது அவளது பார்வை கலைந்து போனதில் நிலைத்து மேகத்திரையில் காற்றின் அலைகள் பிய்த்து போட்டன கற்பனைகளை மீண்டும் ஒன்று கூடிற்று கலைந்து போனவை பார்வையின் உஷ்ணம் தாங்காது கோர்த்து வைத்தவை காணாமல் போக கண்ணீர் வடித்தது…

எதிர் வரும் நிறம்

ஓவிய பலகையில் பளீரென்று வரவேற்ற ஊதா, புதுப்புது நிறங்கள் ஏற்றபட ஏற்றபட பின் அடுக்குக்கு மெல்ல நகர்ந்து கொண்டே போக ... முன்வாசலில் நிலைப்பாட்டை நிறுத்த சிவப்பை போல ஆக்ரோஷமாக இருந்திருக்க வேண்டுமோ ? வெள்ளை போல வெள்ளெந்தியாய் இருந்திருக்க வேண்டுமோ…

மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்

சிரிக்கவும் இயல்பாய் கரைந்துருகி அழவும் மரணிக்கவும் தெரிந்த கடிகார விட்டத்தின் முட்கள் ஒலிஎழுப்பி தெரிவிக்கும் அதன் குறிப்புணர்த்தலில் காலம் கட்டுண்டு கிடக்கிறது நிறுத்தினால் முடியாத கால ஓட்டத்தை பந்தயவீரர்கள் கடந்துவிட முயற்சிக்கிறார்கள் காலத்தை கைப்பற்றும் முயற்சியில் எல்லோரும் தோற்றுப் போக அகாலவெளியில்…

பிரியாவிடை:

பிரியா விடைகளும் பிள்ளைகளுக்கு முத்தங்களும் என வாழ்ந்து கொண்டிருந்தது விமான நிலையம் எட்டிய உயரத்தில் கிட்டிய நெஞ்சில் மகனை முகர்ந்தது மூதாட்டி உம்மா கடவுச் சீட்டு அடங்கிய கைப்பை முழங்கையில் தொங்க கடைக்குட்டியை கைகளில் ஏந்தி வாப்பா பயணம் சொல்ல குழந்தை…

அந்த ஒருவன்…

உன்னைப் போலவே தான் நானும் பிரமிக்கின்றேன் எதிர்பாரா தருணத்தில் எப்படியோ என்னுள் நுழைந்திருந்தாய் இனிதாய் நகர்ந்தவென் பொழுதுகளில் -உன் ஒற்றைத் தலைவலியையும் இணைத்துக் கொண்டாய் பழகியதைப் போலவே ஏதோ ஒரு நொடியில் பிரிந்தும் சென்றாய் ஏன் பழகினாய் ஏன் பிரிந்தாய் எதுவுமறியாமல்…

தூசு தட்டப் படுகிறது!

படிந்துறைந்த பாசிப் படலத்தின் பச்சைப் பசேல் பளிங்கு நிறமற்ற மனதின் பதிவுகளில் ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடிகிறதெனினும்.. வழுக்கல்கள் நிறைந்த அனுபவ படிகளில் அடிக்கடி எச்சரிக்கை எழுப்பும் பாதங்களின் ஏற்ற இறக்க தொனியில்.. யாரோ ஒருவரின் இருப்பு - தூசு தட்டப் படுகிறது..! கரையான்…

வேடிக்கை

வீதியின் வழியே சென்ற பிச்சைக்காரனின் தேவை உணவாய் இருந்தது வழிப்போக்கனின் தேவை முகவரியாய் இருந்தது கடந்து சென்ற மாணவர்களின் கண்கள் மிரட்சியுடன் இருந்தது குறிசொல்பவள் தேடினாள் தனது பேச்சுக்குத் தலையாட்டும் ஒருத்தியை சோப்பு விற்பவள் யோசித்துக் கொண்டே வந்தாள் இன்று யார்…

முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

* ஒரு கறுமைப் பொழுதை ஊற்றிக் கொண்டிருக்கிறேன் இரவின் குடுவையில் வெளிச்சத் திரள் என சிந்துகிறாய் துயரத்தின் வாசலில் கைப்பிடியளவு இதயத்தில் அழுத்தும் நினைவு நாளங்களில் முடிச்சிட்டுக் கொள்கிறது எப்போதும் முடிவற்று விரியும் கோரிக்கை யாவும் **** --இளங்கோ