தனி ஒருவனுக்கு

என் நிழலுக்குள்ளேயே அவன் நிழல்கூட விழாதுதான் அடங்கி நடந்துகொண்டிருந்தான் குழந்தை. கேள்விகள் காம்பாய் வளைந்திருக்க அவன் பதில்கள் அதில் ஆச்சர்யமாய்ப் பூத்திருந்தன. ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கும்போதே தடம் மாறியதறியாது வேறொன்றில் நின்று கொண்டிருக்கும் மனம் குழந்தைக்கு மட்டுமில்லாது எனக்கும் ஆனதில் மீன்களின்…

அன்று கண்ட பொங்கல்

ஆரங்கள் கொஞ்சம் குறைந்து போன சாரநாத் சக்கரங்களைக் கட்டை வண்டியில் பூட்டி சந்திக்கத் துடிக்கும் கொம்புகளில் காவி-வெள்ளை -பச்சை பூசி தேசியமயமாக்கி... உமிப்போர்வையில் உறக்கம்போட்ட விதை நெல்லை எழுப்பி வந்து ஆடியில் காயம்பட்ட மண்ணில் எறிந்து... பாஞ்சலி பூமிக்குத் தலையெண்ணை தடவி...…

பஞ்சரத்னம்

அவனுக்குத் தியாகையன் என்று பெயர் வைத்ததால் சங்கீதத்தில் ஆர்வம் வந்ததா அல்லது சங்கீதம் அவனுக்கு நன்றாக வரும் என நினைத்து அவன் அப்பா பஞ்சரத்னம் அப்படி ஒரு பெயரை அவனுக்குச் சூட்டினாரா என்று தெரியவில்லை. அவன் அம்மா நாகரத்தினம்மாவிற்குப் பையனின் நாமகரணத்தில்…

புத்தாண்டு முத்தம்

கிறிஸ்துமஸுக்கு முன்னாலேயே வீடுகளின் முன்புறத்திலேயோ அல்லது மரக்கிளைகளிலோ கட்டித் தொங்கவிடப்பட்ட நட்சத்திரக்கூண்டுகளின் கலர்ப்பேப்பர்கள் டிசம்பர் மாதத்தின் அசாத்தியப் பனிப்பொழிவில் வண்ணம் வெளுத்து உள்ளிருக்கும் முட்டை பல்பின் மஞ்சள் ஒளி அடுத்த ஆண்டின் பிறப்பிற்கு மங்கலமாய்க் காத்திருக்கும். கூராய்ச் சீவின பென்சிலை நட்டுவைத்தது…

ராபர்ட்டின் கிறிஸ்துமஸ்

மலையென்றால் அது ஒன்றும் பெரிய மலையல்ல. ஒரு குன்றுதான். அதன் பின்புறம் ஒரு பெரிய தண்ணீர் டேங்க் உண்டு. ரயில்வே க்வார்டர்ஸ் முழுவதற்கும் குடிதண்ணீர் சப்ளை இதிலிருந்துதான். மலைக்குன்றின் முன்புறம் மேலே வழக்கம்போல முருகனும் கீழே பொன்னேஸ்வரி அம்மனும் அருள்பாலித்துக்கொண்டிருப்பார்கள். ஆஸ்திகப்…

பெரிய அவசரம்

மாரியம்மன் கோவில் பஸ் ஸ்டாப்தான் கடைசி ஸ்டாப். நிறைய தூங்குமூஞ்சி மரங்களும் ஒன்றிரண்டு வேப்பமரங்களும் சூழ்ந்த இடத்தில், பஸ்கள் ஒரு அரைவட்டமடித்து, கடல் அலைமேல் பயணம்போல் இரண்டு பள்ளங்களில் குதித்தெழுந்து, எல்லை தாண்டி வந்த பக்கத்துத்தெரு நாயைப்பார்த்து நம் நாய் ஆக்ரோஷமாய்…

சொல்லவந்த ஏகாதசி

ரயில்வே காலணியின் கோடியில் அமைந்திருந்த அந்த இரண்டு ப்ளாக்குகள் எங்களுக்கு அமானுஷ்யமாகத் தெரியும். அவற்றின் முன்புறம் ஒரு பெரிய புளியமரம் அடர்ந்து கிளைபரப்பி நிற்கும். சாதாரணக் குருவிகள், காக்கைகள் மற்றும் எப்போதாவது குரல் கொடுக்கும் கிளிகளோடு பெயர்தெரியாத பல இறகு ஜீவன்கள்…

சொக்கப்பனை

கார்த்திகை மாதத்து இரவுகளில் காற்றில் ஈரம் அதிகம் அடர்ந்திருக்க, பேருந்துகளிலோ ரயிலிலோ பயணிக்கும்போது முகத்தில் மோதும் குளிர்ச்சி கொடுக்கும் கிளர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது. ஆனால், நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் ஜன்னல் திறந்திருப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள். வண்டி ஓடும்போது, தூரத்து மரங்களும் வீடுகளும்…

மூவாமருந்து

பொதிப்பொதியாக மேகங்களைக் காற்று சுமந்துகொண்டு போகிறது. கண்ணுக்குத் தெரியாத யாரோ பொத்துவிட மேகம் உடைந்து மழை கொட்டுகிறது. இப்படித்தான் அக்கா சொல்லிக்கொடுத்தாள். இதற்குமேல் சொன்னால் எனக்குப் புரியாது என்று அவள் நினைத்துச் சொன்னதில் நான் அவ்வளவாகத் திருப்திப்படவில்லை. மழையின் வெவ்வேறு தாளகதியில்…

ரவுடிச் சாமியும் ரங்கமன்னாரும்

சீக்கிரம் இருட்டிவிடுகிறது இப்போதெல்லாம். இரவு போர்த்திக்கொள்ளும் அளவுக்குக் குளிர்கிறது. வெயில் சாய்ந்தபின் நிறைய விதமான பூச்சிகள் வீட்டிற்குள்ளும் வெளியிலும் மொய்த்தெடுக்கின்றன. பல வண்ணங்களிலும் அளவுகளிலும் பறந்தோ ஊர்ந்தோ வந்துவிடுகின்றன. சில புழு போல தவழ்ந்து போகிறதே என்று நினைக்கும்போதே அவை சட்டெனத்…