இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்) 29.04.1945 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும் பயப்படுத்திவிட்டது. வெளியில் ஓடியாடித்திரிந்த அந்த அல்ஸேஸியன் நாய் கடந்த சில மாதங்களாக இந்த பங்கரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இயற்கை வெளிச்சத்தைக் கண்டே எத்தனையோ மாதங்களாகி விட்டன. பங்கரின் குறுகிய பாதைகளில் அங்குமிங்குமாகத்தெரியும் சின்ன வெளிச்சங்கள் ஏதோ ஒரு குகையில் இருட்டில் அகப்பட்ட உணர்வையே கொடுப்பதால் அந்த அல்ஸேஸியன் நாய் என்னேரமும் ஏதோ ஒரு […]
நண்பர்களே ஏழு ஆண்டுகளாக தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நேர்த்தியான சினிமாவை நோக்கி களப் பணியாற்றிக்கொண்டே இருக்கிறது. முழுக்க முழுக்க இணையத்தின் பல்வேறு சாத்தியக்கூறுகளை தமிழ் ஸ்டுடியோ கண்டு உணர்ந்திருக்கிறது. ஆனாலும் அச்சு ஊடகத்தில் தமிழ் ஸ்டுடியோ இதுவரை களமிறங்கவில்லை. இந்த ஆண்டு தமிழ் ஸ்டுடியோவில் இருந்து அந்தக் குறையையும் போக்கவிருக்கிறோம். எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திலிருந்து படச்சுருள் என்கிற மாத இதழ் (அச்சில்) வெளிவரவிருக்கிறது. முதல் இதழே தலித் சினிமா பற்றிய சிறப்பிதழாக […]
வைகை அனிஷ் வெட்டிப்பய, தண்டச்சோறு, ஊர்சுற்றி என படித்தோ அல்லது படிக்காமல் வீட்டு வேலையைச்செய்யாமல் இருப்பவர்களுக்கு கொடுக்கும் பட்டதான் மேலே கூறிய வார்த்தைகள். இவ்வார்த்தைக்குப் பின்னால் தண்ணீரை உருவாக்கியவர்கள், தண்ணீரை காத்தவர்கள், தண்ணீருக்காக உழைத்தவர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி புகழ்வாய்ந்த வார்த்தையை தற்பொழுது கால மாற்றத்தால் அடுத்தவரை வசைபாடக்கூடிய வார்த்தையாக பயன்படுத்தி வருகிறோம். கி.பி.10-11 ஆம் நூற்றாண்டுகளில் சோழர்கால கல்வெட்டுக்களில் வெட்டிப்பேறு அல்லது வெட்டப்பேறு என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாளடைவில் மாறித்தான் வெட்டிப்பய என மருவியுள்ளது.வெட்டி […]
தெலுங்கிலிருந்து தமிழுக்குப் பல கவிதைகள் மற்றும் கதைகளை மொழிபெயர்த்து நமக்கு தெலுங்கு இலக்கியத்தின் பரிச்சயம் சாந்தாதத் அவர்களின் எழுத்தில் கிடைத்திருக்கிறது. “திசை எட்டும்” இதழில் இவரது பங்களிப்புக் குறிப்பிடத்தக்கது. கவிதைகளை மொழியாக்கம் செய்வது கடினம். எனவே அவரது உழைப்பும் மொழிபெயர்ப்பும் கவனம் பெறுபவை. மொழிபெயர்ப்பாளர்கள் புனை கதை எழுதுவது குறைவே. “வாழ்க்கைக் காடு” என்னும் சிறுகதைத் தொகுதி அவரின் புனைகதைகளின் புதிய தொகுதி. புனைவு மொழிபெயர்ப்பு என இரு தளத்தில் இயங்கும் பெண் படைப்பாளியான அவர் ஹைதராபாத் […]