அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ் இன்று வெளியிடப்பட்டது (26 ஏப்ரல் 2020). இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழ் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கைச்சிட்டா – வாசிப்பு அனுபவங்கள்- பாஸ்டன் பாலாஜி, முனைவர் ராஜம் ரஞ்சனி, அருணா சுப்ரமணியன் சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2) – புத்தக அறிமுகம்- சுந்தர் வேதாந்தம் டெம்பிள் க்ராண்டின்: பேட்டி – அறிவியல் கட்டுரை: தமிழாக்கம்- மைத்ரேயன் சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம் – பிரியா, பெல்ஜியம் அளவு மீறினால் பாலும் விஷமோ? – மருத்துவக் கட்டுரை – கடலூர் வாசு நெகிழி முகங்கள் – பானுமதி ந. பிரபஞ்சம் – அறிவியல் கட்டுரை – கமலக்குமார் கதைகள்: யானை யானையாகும் தருணம் – ராம் பிரசாத் நோயாளி எண் பூஜ்யம் – ஹ்வான் […]
எளிய பொய்சொல்லலும் எளிதாகப் பொய்சொல்லலும் மும்முரமாகத்தலையாட்டிக்கொண்டே சொன்னாள் சிறுமி: “உண்மையாகவே என் குருவி பொம்மை பறக்கும் தெரியுமா!” இருபது வருடங்களாக ‘எழுதி’க் கொண்டிருக்கிறார் என்று நண்பரை அவையோருக்கு அறிமுகப்படுத்தியவர் இத்தனை காலமும் ‘இ’யைத்தான் சரியாக எழுதப் பழகிக்கொண்டிருக்கிறார் என்பதை பத்திரமாக மறைத்துவிட்டார். அவருடைய அந்த நண்பரின் பேரன் அடிக்கடி கண்ணை விரித்துக் கையை விரித்துக் கதை சொல்வான். கூடைகூடையாய் நட்சத்திரங்களைத் தனக்கு நிலவு கொட்டியதாக. அப்போது அந்தக் குழந்தை முகம் தூய்மையே உருவாய் என்னமாய் மின்னும்! இருபது […]
_ லதா ராமகிருஷ்ணன் ‘கொரோனா காலத்தில் சமூகநலனுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போன்ற சக மனிதர்களுக்கு ஒரு எளிய நன்றியறிவிப்பாக 5.4.2020 இரவு ஒன்பது நிமிடங்கள் வீட்டில் மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்கு மெழுவர்த்தி, அலைபேசி விளக்கு டார்ச் விளக்கு போன்றவற்றை ஏற்றச்சொல்லி இந்தியாவின் பிரதமரிடமிருந்து வந்த வேண்டுகோள் முகநூலில் பல பேரால் எள்ளிநகையாடப்பட்டது; கேவலம் செய்யப் பட்டது. இப்படிச் செய்தவர்களில் நிறைய தமிழ் எழுத்தாளர்களும் உண்டு. […]
கோ. மன்றவாணன் வழக்கம் போலவே வளவ. துரையன் அய்யா அவர்கள் ஒரு பதிவை அனுப்பி இருந்தார். அதில் நிவாரணம் என்ற சொல்லின் தற்காலப் பயன்பாடு தவறானது என்று கிருஷ்ணசாமி தியாகராசன் என்பவர் எழுதி இருந்தார். “நிவாரணம் என்றால் அழித்தல் என்று பொருள். நிவாரணம் வேண்டும் என்றால் அழிக்கச் சொல்கிறோம் என்றாகும். இடைக்கால நிவாரணம் என்றால் இடைக்கால அழிப்பு.” என்றவாறு அவர் விளக்கம் அளித்திருந்தார். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான். நிவாரணம் என்பது சமஸ்கிருதச் […]