அரசியல் சமூகம் திண்ணையின் இலக்கியத் தடம் -32 சத்யானந்தன் நவம்பர் 4 2004 இதழ்: வீரப்பன் மட்டும் தான் கிரிமினலா?- ஞாநி- புதைக்கப் பட்ட வீரப்பன் உடலோடு சேர்த்துப் பல உண்மைகளும் புதைக்கப் பட்டன என்பதில் சந்தேகமே இல்லை. படைப்பு அஞ்சலி இயக்குனர் வான் கோ- நிறைவேற்றப் பட்ட ஃபத்வா- ஆசாரகீனன்- வான் கோ மொரோக்கோவிலிருந்து நெதர்லாந்துக்குக் குடியேறிய இஸ்லாமிய தீவிரவாதியால் கொல்லப் பட்டார். படைப்பு மக்கள் தெய்வங்களின் கதைகள்- 8- அ.கா.பெருமாள்- வெங்கலராசன் கதை படைப்பு […]
அந்த பெரியவர் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். பாலர் பள்ளிக்கு வெளியே இருந்த இருக்கைகளையும் அதற்கு கீழேயும், சற்று தள்ளி சுவரின் மூலையில் இருந்த பச்சை நிற குப்பைத் தொட்டிக்கு உள்ளேயும் பார்த்த படி இருந்தார். எப்படியும் எழுபது வயதிற்கு மேல் இருக்கும். தலைமுடி கருப்பு நிறத்திலிருந்தாலும் தோல் சுருக்கங்களும், களைப்படைந்த கண்களும் வயதை தெள்ளெனக் காட்டின. காக்கி கால் சட்டையும் ‘அன்பு நிரத்தரமானது’ என்று பொருள்தரும் வார்த்தைகள் கொண்ட வெளிர் நீல […]
சுப்ரபாரதிமணியன் — கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்குக் கத்த வேண்டும் போலிருந்தது. கண்டேன் சீதையை என்று அனுமன் கத்தியது சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது. “ அடப்பாவி கிளம்பீட்டியா “ என்றுதான் கத்தினான்.உடனே அவளைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான். மஞ்சள் சுரிதாரில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் தேவி..முப்பது வய்தில் அவள் முகத்தில் இல்லாத அழகையெல்லாம் அவன் கண்டிருக்கிறான் தினம் நூறு குறுஞ்செய்திகள் அனுப்பிய காலம் உண்டு. பிரியலாம் என்று கூட ஒரு […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி வெகு நாட்களாக நான் வீடு தேடும் படலம் ஒரு வழியாக முடிவிற்கு வந்து விட்டது. வாடகை வீடு என்ற போதிலும் என் எதிர்பார்ப்புகளையும், நான் வாழ்தலுக்கான அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது அந்த வீடு. பலவாறான பேச்சுகளையும், நிராகரிப்பையும் கேட்டிருந்த எனக்கு, “மேடம் உங்களுக்கா வீடு, திருமலை டீச்சர்ன்னு சொன்னார், நீங்க தாலுக்கா ஆபிஸ்ல தான வேலை பாக்குறீங்க,” என்று, ஆச்சர்யமாய் விசாரித்த மேல் போர்ஷன்காரர்,வாக்காளர் அட்டை வாங்க வந்த போது முன்பே அறிமுகமாகியிருந்தார். என் அம்மாவைச் சொல்லியிருப்பார்கள் டீச்சர் என்று. “இப்போது அம்மா ரிட்டயர்ட் ஆகிவிட்டார்கள்,” என்று முறுவலித்தேன் நான். […]
நைந்து போயிருக்கும் புத்தகம். அட்டைகள் இல்லை. முன் பக்கங்கள் சில முகம் கிழிந்து போயிருக்கும். கிழிந்த பக்கங்கள் கவனமாய் நூல் கட்டி வைக்கப்பட்டிருக்கும். ஒடிந்து போய் விடுமோ என்று எத்தனையோ பக்கங்கள் ஓய்ந்திருக்கும். திரிக்கப்பட்ட சிறிய நூலொன்று புத்தக அடையாளமாய் வைக்கப்பட்டிருக்கும். கடைசியாய் எந்தப் பக்கம் வாசிக்கப்பட்டிருக்குமென்று தெரியவில்லை. புத்தகத்துக்குத் தெரியுமோ? கவனமாய் புத்தகத்தைத் திறப்பேன் பழங்காலப் புதையல் போல. எங்கே […]
சத்யானந்தன்இணையம் எப்போதும் விழித்திருக்கிறதுவெளி உலகு நிழலுலகுஇரண்டையும் விழுங்கிசெரிக்க முடியாது விழித்திருக்கிறதுமென்பொருளை மென்பொருள்காலாவதியாக்கியதுகாகிதம் ஆயுதம் இரண்டாலுமேஆயுதம் பலமில்லைஎன்று நிலைநாட்ட முடியவில்லைமின்னஞ்சல் முக நூல் முகவரிஒளித்த விற்ற விவ்ரம்புதிர் விரியும் வலையில்அரங்க அந்தரங்கஇடைத் திரைஊடகமாய்கனவில் நான் திறந்து வைத்து விட்டஇனிப்புகள் மீது ஈ மொய்க்க வாய்ப்பில்லைநான் அதை விற்க இயலும்விற்பனைக்கானவையும்விற்பவனும்சிலிக்கான் சந்தையின்எண்வழி இரவு பகல்களில்இரவில் நெடுஞ்சாலையில்மின் வட்டு ஒன்றுஎதிரொளித்தது ஒருசைக்கிளின் கைப்பிடியில்அங்கதமாய்
நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்! (நகைச்சுவைப் பயணக் கட்டுரை) ஒரு அரிசோனன் அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே கார் ஓட்டிப் பழகிக்கொண்ட எனக்கு – என் மகன் வேலை பார்க்கும் நியூ ஜெர்சிக்குச் சென்றதும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு காரோட்டி, திண்டாடித் தெருப் பொறுக்கிய என் நகைச்சுவை அனுபவங்களை உங்களுடன் பகிர்த்து […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Not Heaving from my Ribbed Breast Only) முறிந்த இதயப் பெருமூச்சு (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முறிந்து போன என் நெஞ்சு மட்டும் பெருமூச்சு விட வில்லை. வெறுப்புற்று என்மீது அதிருப்தியில் வெகுண்டு இரவில் எழும் நெட்டுயிர்ப்பில் இல்லை. நீடித்து நொய்ந்து அடக்கி வைத்த […]
வில்லவன் கோதை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . . இரண்டு கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக வளைந்து வளைந்து எதிர்பாராமல் எதிர்வரும் வாகனங்களை ஒதுக்கி லாவகமாக மலையேறிக் கொண்டிருந்தன. . கருங்கற் பாறைகளை செதுக்கியும் குறுக்கே தடுத்துநின்ற குன்றுகளை பிளந்தும் வாகனங்கள் செல்ல வழி அமைத்திருந்தார்கள். மேலே ஏற ஏற சாலையின் இருபுறமும் மாறிமாறி குன்றுகளின் அடிவாரங்கள் கண்களுக்குபட்டு எங்கள் உரையாடலை நிறுத்தின. வெளியே சூழ்ந்திருந்த வெப்பம் எனக்குள் எதிர்பாராத ஒரு ஏமாற்றத்தை […]