இந்த வார்த்தைகளோடு இந்நூல் முடிகிறது. இலக்கணம், மொழி வரலாறு, இடப்பெயராய்வு, அகராதியியல், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பியியம், மூலபாடத்திறனாய்வு, கல்வெட்டு, வரலாறு, பண்பாடு போன்ற கல்வித்த்றைகளில் ஈடுபாடுடைய பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களுக்கு குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல நிறைய விசயங்கள் இருக்கின்றன.ஒரு முதியவரின் ஆதங்கத்தோடும், அறிவுரை எண்ணத்தோடும் அவை வெளிப்பட்டுள்ளன கரையே( ற்)றுங் கருத்துக்கள் என்ற இந்நூலில்… இந்நூலின் கடை வரி:: இன்று புதிதாய் பிறந்தோம், நாளையும் புதிதாய் பிறப்போம் என்கிறது. இந்நம்பிக்கையை இந்நூல் முழுக்க பார்க்க முடிகிற்து. […]
முனவைர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத் தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை. Malar.sethu@gmail.com திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டுமாக இணைந்த ஒன்பதாம் திருமுறை ஓர் அரிய இலக்கியப் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது. இவ்விலக்கியங்கள் பக்தியுணர்வை வெளிக்காட்டுவதைக் காட்டிலும் சமுதாயச் சிந்தனைகளை உள்ளடக்கிய இலக்கியப் பெட்டகங்களாகவும் ஒளிர்கின்றன. இவ்விலக்கியங்கள் இயற்கையாக இறைவனைக் காண்பதோடு மட்டுமல்லாது இறைவனாக இயற்கையைக் காண்கின்றது என்பது நோக்கத்தக்கது. ஒன்பதாம் திருமுறையானது இறைவனைப் பாடுவதோடு மட்டுமல்லாது சூழலியல் சிந்தனைகளையும் வழங்குகின்றது. ஒன்பதாம் திருமுறை […]
ஹிரோஷிமா, நாகசாகி மேல் அணுகுண்டு வீசபட்டு இன்றுடன் 59 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன. ஆண்டுகள் பல கழிந்தாலும் அந்த குண்டுவீச்சு பற்றிய சர்ச்சைகள் ஓயவில்லை. அக்குண்டுவீச்சு தவறானதே என அக்காலகட்டத்தை பற்றி அறியாத இளம் தலைமுறை நம்பிகொண்டிருக்கிறது. அதனால் அணுகுண்டுகள் வீசபட்டதற்கான காரணம், மற்றும் சூழலை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். ஹிரோஷிமா மேல் வீசப்பட்ட குண்டால் 80,000 முதல் 140,000 பேர் வரை பேர் மரணம் அடைந்தார்கள். நாகசாகியில் வீழ்ந்த குண்டால் 74,000 பேர் மரணம் அடைந்தார்கள். […]