மனிதநேயம் கேள்விக்குறியாகும் மணிப்பூர் நிலவரம்

This entry is part 11 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

லதா ராமகிருஷ்ணன் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி மத்திய அரசு பேச மறுப்பது ஏன்? என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பிரதம மந்திரி இது குறித்துப் பேசுவதில்லை என்றும் ஏற்கெனவே பேசியிருக்கவேண்டும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன.  நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசும்போது இந்தியப் பிரதமர் மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பயங்கரங்களைப் பட்டியலிட்டார். இப்போதைய கலவரங்களுக்குப் பொறுப் பேற்காமல் நழுவுகிறார், பாராளுமன்றத்தை அரசியல் மேடையாக்குகிறார் என்று எதிர்ப்புக்குரல்கள் எழுப்பப்பட்டன.  இன்னொரு புறம் திரு.ராகுல் காந்தி பிரதம […]

கல்விக்கூடங்களும் சாதிப்பாகுபாடுகளும்

This entry is part 10 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

லதா ராமகிருஷ்ணன் 11.8.2023 அன்று படித்த செய்தி இது.  திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூரில் அரசு – உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளியொன் றில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த +2 பள்ளி மாணவரை அவருடைய சக மாணவர்கள் – அந்தப் பகுதியில் மேலாதிக்கம் பெற்று விளங்கும் இடைச் சாதியை சேர்ந்தவர்கள் மதிப்பழித்து நடத்தியதால் பள்ளி செல்லாமல் இருந்திருக்கிறார் அந்த மாணவர். பள்ளி ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்க விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். தலைமையாசிரியர் அந்த […]

ஊடக அறம்

This entry is part 9 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

_ லதா ராமகிருஷ்ணன் ஊடக அறமா இது – 1 தற்போது பரபரப்பாகக் காண்பிக்கப்படும் காணொளி மணிப்பூர் அவல நிகழ்வுக்குக் காரணமாகக் கைது செய்யப் பட்டிருக்கும் நபரின் வீட்டை அவனுடைய இனத்தைச் சார்ந்த பெண்களே அடித்து நொறுக்கும் காட்சிகள். மணிப்பூரில் நடந்திருக்கும் மிக அவலமான, அராஜகமான நிகழ்வு அனைவராலும் கண்டிக்கப்படவேண்டியது.  அதை பகடைக்காயாக, துருப்புச்சீட்டாக, தங்களைப் பீடமேற்றிக் கொள்ளக் கிடைத்த பெருவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் ஆழ்ந்த அனுதாபத்துக் கும், கண்டனத்திற்கும் உரியவர்கள் ஊடக அறமா இது – 2 […]

பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் கொடுக்கலாமா?

This entry is part 8 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

_ லதா ராமகிருஷ்ணன் _  Section 509 IPC, as defined under the code states as, “Whoever intending to insult the modesty of a woman, utters any word, makes any sound, or gesture, or exhibits any object, intending that such word or sound shall be heard, or that such gesture or object shall be seen, by such […]

குறைந்த நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது

This entry is part 2 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

சந்திரயான் -2  விண்சிமிழ் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ http://www.moondaily.com/reports/Low-cost_moon_mission_puts_India_among_lunar_pioneers_999.html +++++++++++++++++++++++++ நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்உளவிச் சென்று நாசாதுணைக்கோளுடன் வடதுருவத்தில்ஒளிமறைவுக் குழியில்பனிப் படிவைக் கண்டது !நீரா அல்லது வாயுவா என்றுபாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !சந்திரனில் சின்னத்தை வைத்ததுஇந்திய மூவர்ணக் கொடி !யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்பந்தய மில்லை !விந்தை புரிந்தது இந்தியா !இரண்டாம் சந்திராயன்2019  ஜூலையில் சென்று இறக்கும்விண்ணுளவி , தளவுளவி ! தளவூர்தி !பாரத விண்வெளித் தீரர் இயக்கும்சீரான […]

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுப் போட்டியில் முந்தி வெல்ல லூனா -25 நிலவுத் தளவுளவி ஏவியுள்ளது

This entry is part 1 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

Posted on August 12, 2023 ரஷ்யன் லூனா -25 இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் தென்துருவ நிலவுத் தடவைப்புப் போட்டி சி. ஜெயபாரதன், கனடா ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுத் தட வைப்பு தென்துருவப் போட்டியில் சந்திரயான் -3 இந்திய விண்சிமிழை முந்திச் செல்ல, ரஷ்யா லூனா -25 [LUNA -25] நிலவுத் தளவுளவியை 2023 ஆகஸ்டு 8 ஆம் ஏவியுள்ளது. நிலவு நோக்கிப் பயணம் செய்யும் ரஷ்யாவின் நிலாத் தளவுளவி ஆகஸ்டு 23 ஆம் தேதி நிலவை நெருங்கும் […]

நாவல்  தினை              அத்தியாயம் இருபத்தேழு  CE 5000

This entry is part 4 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

   மேசை மேல் தலையில்லாத குழலனின் உடல் அசைந்து கொண்டிருக்க தலை அறையை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தது.  அக்ரெலிக் பெயிண்ட் வாடை தூக்கலாக வந்து கொண்டிருந்த இடம் அது. எந்தத் தலைமுறையிலோ அக்ரெலிக் வண்ணம் தேள்க் கூட்டத்துக்கு ஒவ்வாமை தருவதாக குணம் கொண்டிருந்தது. தேளர்கள் நடமாட்டத்தைக் கிட்டத்தட்ட அறவே இல்லாமல் செய்யச் சுவர்களை தினமும் அக்ரலிக் வண்ணமடித்து அந்த வாடை நீங்காமலும் குறையாமலும் கவனம் வைத்திருப்பது வழக்கம்.  குயிலியின் நாசியில் பலமாக அறைவதாக […]

மழையுதிர் காலம்

This entry is part 5 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா நாள் காட்டியில் அக்னி நட்சத்திரத்தின் முடிவை பற்றின தீர்மானங்களை வெயில் கன்னி ஒதுக்குவதை போல் தினசரியில் தொலைகாட்சியில் வானொலியில் தோன்றும் நிபுணர்கள் மழை பெய்யும் சாத்தியத்தை பற்றிய முன்னறிவுப்புகளை அலட்சியமாக ஒதுக்கும் வானம் நனைய ஆசைப் படும் குழந்தைகளிடம்  கருணை கொண்டு கொஞ்சம் மழையை உதிர்த்து விட்டுப் போகிறது தானாக  சில சமயங்களில்

மழை

This entry is part 6 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா  கொட்டுகிறது எனது பால்கனியில் மழை வெளியில் துருத்திக் கொண்டிருக்கும்  ஆஸ்பெஸ்டாஸ் பலகையின் மீது செல்லம் கொஞ்சிக் கொண்டு பாவம்! தெரியும்  அதற்கும் காலம் கடந்த பின்  அன்பை மதிக்கத் தெரியாதவர் மேல் அன்பை சொரிவது தன்மானத்திற்கிழுக்கென்று