குறைந்த நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது

This entry is part 2 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

சந்திரயான் -2  விண்சிமிழ்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

+++++++++++++++++++

http://www.moondaily.com/reports/Low-cost_moon_mission_puts_India_among_lunar_pioneers_999.html

+++++++++++++++++++++++++

நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
உளவிச் சென்று நாசா
துணைக்கோளுடன் வடதுருவத்தில்
ஒளிமறைவுக் குழியில்
பனிப் படிவைக் கண்டது !
நீரா அல்லது வாயுவா என்று
பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !
சந்திரனில் சின்னத்தை வைத்தது
இந்திய மூவர்ணக் கொடி !
யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
பந்தய மில்லை !
விந்தை புரிந்தது இந்தியா !
இரண்டாம் சந்திராயன்
2019  ஜூலையில் சென்று இறக்கும்
விண்ணுளவி , தளவுளவி ! தளவூர்தி !
பாரத விண்வெளித் தீரர் இயக்கும்
சீரான விண்கப்பல் ஓர்நாள்
தாரணி சுற்றி வரும் !
செவ்வாய்க் கோள் செல்ல
சந்திரனில் சாவடி அமைக்கும்
திட்ட முள்ளது !
அடுத்து இரண்டாம் சந்தரயான்
நிலவைச் சுற்றி வந்து
தளவுளவி நிலவில் இறங்க,
தளவூர்தி
தவழ்ந்து சென்று தளம் ஆயும்
திட்டமும் உள்ளது.

+++++++++++

“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லா மல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங் களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

++++++++++++++++++++++++chandrayann2_orbiter_2.jpg

Chandrayaan -2 Lander

எளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா   

2019 ஜூலை 15 ஆம் தேதி இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம்  வெகு சிரமமான சந்திரயான் -2 நிலவுப் பயணத்தைத் துவங்கப் போகிறது.  கடந்த பத்தாண்டுகளாக முற்பட்டுவரும் அந்த நிலவுத் திட்டத்தில், முதன் முறையாக ஒரு தளவுளவி இறங்கப் போகிறது.  அடுத்து அதிலிருந்து ஒரு தளவூர்தி நகர்ந்து, நிலவில் தானாய் தவழ்ந்து சென்று   14 நாட்கள் மண் மாதிரிகளைச் சோதனை செய்யும்.   அவ்வித தீரச் செயல்களை இதுவரை அமெரிக்கா,  சைனா, [ஈசா] ஐரோப்பிய கூட்டமைப்பு,  ஆகிய மூன்று நாடுகள்தான் வெற்றிகரமாய்ச் செய்துள்ளன.  இஸ்ரேல் சமீபத்தில் முயன்று, தளவூர்தி இறங்கத் தவறி நிலவில் வீழ்ந்து முறிந்து போனது.  அடுத்து இந்தியா வெற்றிகரமாகச் செய்து முடித்தால், நான்காவது நாடாய் வரலாற்று முக்கியத்துவம்  பெறும்.

   சந்திரயான் -2 விண்ணுளவி

இந்திய நிபுணரின் சிக்கலான, சவாலான இரண்டாம் நிலவுப் பயணம்

  1. இதுவரை நிலவில் எந்த உலக நாட்டுத் தளவுளவியும் இறங்காத தென் துருவப்  பகுதியில் சந்திரான் -2 தளவுளவி முதன்முதல் இறங்கப் போகிறது.
  2. விண்சுற்றி  நிலவைச் சுற்றத் துவங்கி,  60 மைல் [100 கி.மீ] உயரத்தை அடையும் போது, தளவுளவி நிலவில் மெதுவாய் இறங்கி, அதிலிருந்து நகரும் தளவூர்தி,  விண்சுற்றி நிலவைச் சுற்றி வருவது நீடிக்கும்.   தளவூர்தி பயணம் செய்து, மண் மாதிரிகளைச் சேர்க்கும்.   வாகனம் அவற்றை ஆய்வு செய்ய தளவுளவிக்குத்  தூக்கிச் செல்லும்.  மூன்றின் பளுவைச் சுமக்கும் விண்சிமிழின் நிறை 3 டன்.
  3. சந்திராயன் -2 நிலவுத் திட்டத்தின் விண்சிமிழ் சுமக்கும் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி ஆகிய மூன்றும் இஸ்ரோ தயாரித்தவை.  தளவூர்தி நிலவுத் தளத்தில் 14 நாட்கள் இயங்கி வரும்.
Image result for Chandrayaan 2 Rover

சிக்கனச் செலவில் இந்தியா செய்யும் இரண்டு சந்திரயான் & மங்கல்யான் திட்டங்கள்

1.  செவ்வாய்க் கோளுக்கு  2013 இல் அனுப்பிய மங்கல்யான்  திட்டத்துக்கு 470 கோடி ரூபாய் செலவானது.  ஒப்பு நோக்க அமெரிக்கா ஹாலிவுட் தயாரித்த  ” கிராவிட்டி ” [Gravity]  திரைப் படத்துக்குச் செலவு : 644 கோடி ரூபாய். [100 மில்லியன் டாலர்]

2.  சந்திரயான் -2 நிலவுப் பயண நிதி ஒதுக்கு : 800 கோடி ரூபாய்.  ஒப்பு நோக்க 2014 இல் ஹாலிவுட் தயாரித்த “இண்டர்ஸ்டெல்லர்”  [Intersteller]  திரைப்படம் தயாரிக்கச் செலவு 1062 கோடி ரூபாய் [165 மில்லியன் டாலர்]

3. இந்திய விண்ணுளவி 240,000 மைல் [384000 கி.மீ.] பயணம் செய்து சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியை இறக்க, சுமார் 140 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.  நாசா 15 அப்பொல்லோ திட்டங்களுக்கு  சுமார் 25 பில்லியன் டாலர் [1960 நாணய மதிப்பு] செய்துள்ளது.  தற்போதைய [2019] நாணய மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு மேலாகும்.  சைனா 2017 இல் தனது நிலவுத் தளவுளவி / தளவூர்தியை அனுப்ப சுமார் 8.4 பில்லியன் டாலர் செய்துள்ளது.  ரஷ்யா 1966 இல் மனிதரற்ற விண்ணுளவியை நிலவுக்கு, முதலில் அனுப்ப  சுமார் 20 பில்லியன் டாலர் செலவு [1960 -1970] நாணய மதிப்பு] செய்துள்ளது.

Image result for Chandrayaan 2 Rover

சந்திரயான் -2 தளவுளவி & தளவூர்தி.

பிரதம மந்திரி நரேந்திர மோடி 2022 ஆண்டுக்குள் ஓர் இந்திய மனிதன் இயக்கும் விண்கப்பல் பூமியைச் சுற்றி வரும்  என்று உறுதியாகக் கூறினார்.

++++++++++++++++++++++++

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

Image result for Chandrayaan 2 Rover

சந்திரயான் -2 நிலவுத் தளவுளவி

இரண்டாம் நிலவுப் பயணத்துக்கு சந்திரயான் -2 விண்ணூர்தி தயாரிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  அப்பயணம்  2018 முதல் காலாண்த் திட்டமிடப் பட்டுள்ளது.  சந்திரனை நோக்கிப் போகும் சந்தரயான் -2 விண்ணூர்தி, [Mother Ship] கட்டுப்பாடுடன் மெதுவாய் நிலவில் தளவுளவியை இறக்க ஓர் எஞ்சின் இப்போது விருத்தியாகி வருகிறது. அதற்காகச் செயற்கை முறையில் நிலவுக்குழிகள் [Moon Craters] உள்ள சந்திரச் சூழ்வெளிப் போலி அமைப்பை விஞ்ஞானிகள்  ஏற்படுத்தி, அந்த அரங்கில் தளவுளவி இறக்கம், மீள் ஏற்றம் [Lander Descent & Ascent ] சோதிக்கப்படும். மேலும் தளவூர்தி [Rover] பிரிந்து நிலவில் இயங்குவதும் சோதிக்கப்படும்.

கிரண் குமார் [இந்திய விண்வெளி ஆய்வு ஆணையக அதிபர்]

+++++++++++++++++++

ரஷ்யாவின் கதிரியக்க ஏகமூலம் தயாரிக்கும் அணுவியல் கூடம் [JSC Isotope Sources] சந்திரயான் -2 விண்ணூர்தியில் இயங்கப் போகும், முக்கிய கியூரியம் -244 [Curium -244 (Cm-244)]  கதிர்வீச்சு உலோகத்தை அனுப்பியுள்ளது.  அது தளவூர்தி நிலவின் மண், பாறை ஆகியவற்றின் இரசாயனக் கலவைகளை அறிவிக்க உதவும் கருவிக்கு [Alpha Proton X-Ray Spectrometer] உடனிருக்கும்.

ரோஸாட்டம் [ Rosatom State Atomic Energy Corporation]

தளவுளவியில் உள்ள புதிய அமைப்புச் சோதிப்புகள் திட்டமிடப் பட்டன. தளவுளவி உணர்வுக் கருவிகள் இயக்கச் சோதனைகள் முடிந்தன. நிலவுத் தளப் போலிக்குழிகள் [Lunar Artificial Craters] கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் தயாரிக்கப் பட்டுப் பயிற்சிகள் முடிந்தன.

தகவல்

30 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

31 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

32 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

33. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

34 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO–NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

35.  http://en.wikipedia.org/wiki/Category:Indian_space_program (May 16, 2012)

36.  http://www.time.com/time/printout/0,8816,2040085,00.html(December 29, 2010)

37  http://en.wikipedia.org/wiki/Indian_Space_Research_Organisation

38.  http://www.isro.org/gslv-d3/gslv-d3.aspx (Geosynchronous Satellite Launch Vehicle (GSLV)

39.  Asia Times – India’s Space Program Takes a Hit By : Peter Brown (May 1, 2012)

40.  Space Travel : New Moon for India  By : Morris Jones, Sydney Australia (SPX)  )May 28, 2012)

41  http://www.bharat-rakshak.com/MONITOR/Space%20Essay/entry3.htm (Indian Space Program -2020)

42. http://indianexpress.com/article/technology/science/chandrayaan-2-mission-isro-conducts-tests-for-moon-landing-4370169/  [November 11, 2016]

43. http://www.moondaily.com/reports/India_Takes_Russian_Help_to_Analyze_Chemical_Composition_of_Lunar_Surface_999.html?mc_cid=508954fbaf&mc_eid=bb33fe70f4 [February 17, 2017]

44.  https://en.wikipedia.org/wiki/Chandrayaan-2  [March 2, 2017]

45. http://www.moondaily.com/reports/Indias_Moon_Mission_on_2018_Target_Says_ISRO_Chief_999.html?mc_cid=508954fbaf&mc_eid=bb33fe70f4  [March 3, 2017]

46.  https://spacewatch.global/2019/01/indian-space-exploration-chandrayaan-2-lunar-mission-launch-expected-in-april-2019/

47.  http://iasipstnpsc.in/chandrayaan-2-lander-for-soft-landing/

48.  https://www.isro.gov.in/gslv-mk-iii-chandrayaan-2-mission

49.  https://en.wikipedia.org/wiki/Chandrayaan-2

50. https://www.dailypioneer.com/2019/technology/chandrayaan-2-launch-to-take-place-between-july-9-16–isro.html   [May 22, 201]

51. https://en.wikipedia.org/wiki/List_of_missions_to_the_Moon [May 23, 2019]

52.    http://www.moondaily.com/reports/Low-cost_moon_mission_puts_India_among_lunar_pioneers_999.html    [July 12, 2019]

******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) (July  13, 2019)  [R-3]

https://jayabarathan.wordpress.com
Series Navigationஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுப் போட்டியில் முந்தி வெல்ல லூனா -25 நிலவுத் தளவுளவி ஏவியுள்ளதுநாட்டுப்பற்று 2
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *